சிறப்பு தினங்கள் கவிதை, சிறப்பு தினங்கள் கவிதை, நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்
உலகப் பெற்றோர் தினம்
உலக பெற்றோர் தினம்
பெற்று வளர்த்து பொன்னாய்க் காத்து
பொறுப்புகள் சுமந்து
பொகக்கிசமாய் பார்த்து
ஈ எறும்பு அண்டாது
இதயமாய் சுவாசித்து
பண்பைப் புகட்டி
பாச வெள்ளத்தில் மூழ்கவைத்து
அறத்தைப் போதித்து
அறிவைப் புகட்டி
மறத்தை நெஞ்சத்தில்
மாவீரனாய் உரைத்து
ஆற்றலும் ஆளுமையும்
ஆழமாய் விதைத்து
பூமியில் புதுமலராய்
பூத்திட வைத்து
தருவாய் வளர்த்து
தாங்கிடும் வேர்கள்
கடவுளோடு நானும்
ஆலய இல்லத்தில் வாழ்கிறேன் பெற்றோரே தெய்வம்
போற்றி வணங்கிடு
கவித்தாரகை
கிருஷ் அபி இலங்கை.