நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்
மனித பூனைகள்
எளியோரை வழியோர் வாட்டி வதைப்பது போல! பூனையே !உன்னிலும் சிறிய எலி தான் உனக்கு உணவா!!
உன்னை கண்டு அஞ்சி ஒதுங்கியே!
வாழும் எலிகளைப் போலவே !!
பெண் கிளிக்குஞ்சுகளும் பள்ளியில் அஞ்சி ஓடுகிறது!
பூனையாய் சுற்றி திரிகிறது!
பள்ளி உரிமையாளர் என்ற கொடும் மனித பூனைகள் ,,
வேண்டாம்,,! உனக்கான உணவை! உனக்கான உறவுகளை !
உன் போன்றவர்களை இரையாக்கு!!
எங்கள் ஏழை குழந்தைகளை
காமத்திற்கு! இரையாக்காதே
எலியை பிடித்துஉண்டு! பசி தீர்க்கும் பூனையைப் போல!! எச்சரிக்கிறோம்!
கவிதை மாணிக்கம்