மார்கழித் திருவிழா கோலப்போட்டி வெற்றியாளர்கள்
அனைவருக்கும் அன்பான வணக்கம்.
அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த மார்கழித் திருவிழா கோலப் போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்படுவதைக் பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தப் போட்டியின் முடிவுகள் முழுமையாக நடுவர்களின் தீர்ப்பின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டவை. ஆசிரியர்கள், பேராசிரியர்கள், கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் பல்வேறு கோலப் போட்டிகளில் நடுவராக செயல்பட்ட அனுபவமிக்க நிபுணர்கள் நமது போட்டிக்கும் நடுவராக பணியாற்றினர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். எனவே இது நடுவர்களின் இறுதியான தீர்ப்பு என்பதை அனைவரும் புரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நமது கோலப் போட்டியில் பங்கேற்ற அனைவருமே வெற்றியாளர்களே. ஒவ்வொருவரின் படைப்பிலும் கலைநயம், உழைப்பு மற்றும் பாரம்பரியத்தின் அழகு வெளிப்பட்டது.
நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்கள் விவரம்:
முதலாம் இடம்
MF016
பாரதி இளையகுமார்
இராணிப்பேட்டை மாவட்டம்
இரண்டாம் இடம்
MF008
நந்தினி கங்காதரன்
சென்னை
மூன்றாம் இடம்
MF001
சே. பூங்கொடிசேகர்
பொங்கலூர், திருப்பூர் மாவட்டம்
சிறப்பு பரிசு
MF025
வி. சாந்தி பிரியா
சங்கரன்கோவில்
MF023
S. ஆனந்தி சந்தோஷ்
அரியலூர்
வெற்றி பெற்ற அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்
போட்டியில் பங்கேற்ற அனைத்து கலைஞர்களுக்கும் எங்கள் பாராட்டுகள். உங்கள் ஆதரவால் இந்த மார்கழித் திருவிழா கோலப் போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தொடர்ந்து பயணிப்போம்...
வெற்றி நிச்சயம்
நன்றி.