வியாழன், 24 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
தங்கேஸ் கவிதைகள் , நிகழ்வுகள், தங்கேஸ் கவிதைகள் , நிகழ்வுகள், கவிதைகள்

பிரியமான காதலிக்கு... 025

07 பிப்ரவரி 2023 700 பார்வைகள்
பிரியமான காதலிக்கு... 025

பிரியமான காதலிக்கு...!

காத்திருக்கும்
நொடிகளெல்லாம்
கவிதைகளாய்
கரையுதடி
உறைந்து போன
உன் காதலை
எப்படியடி
உருக வைப்பது...!

உன்னை நினைத்து
என் உயிரும்
உறைந்தே போனதடி
உலகத்தில் 
எதுவுமே 
பிடிக்கவில்லையடி...!

உன் உருவம்
கண்ட பின்பு
வெள்ளை மனம்
கொண்டவளே
என் மனம்
உணரவில்லையா...!

கள்ளமின்றி சிரிப்பவளே
என் கன்னங்களில்
கண்ணீர் தீண்டி
போவது புரியவில்லையா
காரணமே இன்றி
உன்னை காதலிக்கும்
என் கண்களை
குருடாக்கிக் கொள்ளவா...!

சதா சர்வ காலமும்
உன்னை நினைக்கும்
என் இதயத்தை
இரும்பாக்கி கொள்ளவா
தென்றல் தீண்டாத
மலரைப் போல்
உன் கண்கள் தீண்டாத
கவிதை நான்...!

உன்னை எப்படி
காதலிப்பது
எனக்கு 
தெரியவில்லையடி
உனக்கு தெரிந்தால்
கொஞ்சம்
சொல்லிப் போ...!

காதல் காவியங்கள் 
பல படித்து விட்டேன்
இரவுகளை வெறுமையாய்
நகர்த்திவிட்டேன்
நீ வருவாய் என
காத்திருக்கிறேன்...! 

என் காதலே 
காவியம் படைக்க வா...!

முனைவர் ம.ப.சாந்தி சங்கரி,புதுச்சேரி.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE