புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு நூறாண்டு காதல் 100 காதல் கவிதைகள் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு நூறாண்டு காதல் 100 காதல் கவிதைகள்
கவிதைகள்

JP கல்வி குழுமம் சார்பில் JP மாரத்தான் 2026

27 ஜனவரி 2026 Magizhchi FM 518 பார்வைகள்
JP கல்வி குழுமம் சார்பில் JP மாரத்தான் 2026

100% வாக்குப்பதிவு & பசுமை தென்காசி மற்றும் போதையில்லா தென்காசிகான  விழிப்புணர்வுக்காக
JP கல்வி குழுமம் சார்பில் பிப்ரவரி 14 அன்று “JP மாரத்தான் – 2026”

தென்காசி :
100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு & பசுமை தென்காசி மற்றும்  போதையில்லா தென்காசி என்ற சமூக நோக்கங்களை முன்னிறுத்தி, ஆயிக்குடியில் அமைந்துள்ள JP கல்வி குழுமம் சார்பில் “JP மாரத்தான் – 2026” வரும் 14.02.2026 (பிப்ரவரி 14) அன்று நடைபெறவுள்ளது.

இந்த மாரத்தான் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளில் நடத்தப்பட உள்ளது. போட்டி தென்காசி நகரத்திலிருந்து JP கல்லூரி வளாகம் வரை நடைபெறும். இதில் பங்கேற்க பதிவு கட்டணம் ரூ.100/- மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்களுக்கு T-Shirt மற்றும் E-Certificate வழங்கப்படும்.

மாரத்தானில் வெற்றி பெறுபவர்களுக்கு
முதல் பரிசு ரூ.10,000,
இரண்டாம் பரிசு ரூ.8,000,
மூன்றாம் பரிசு ரூ.6,000 வழங்கப்பட உள்ளது.

இந்த JP மாரத்தான், DMI குழும நிறுவனர்  அருட்தந்தை டாக்டர் J. E. அருள்ராஜ் அவர்களின் ஆசீர்வாதத்துடன் துவக்கப்பட உள்ளது. JP கல்வி குழுமத்தின் தொடர்பாளர் மாண்புமிகு அருட்சகோதரி டாக்டர் I. அரோக்யமேரி JP மாரத்தானை துவக்கி வைத்து தொடக்க உரையாற்ற உள்ளார்.

இந்த நிகழ்ச்சி JP குழுமத்தின் பொதுத் தொடர்புத் துறை ஆலோசகர் திரு. மணோகரன் சாமுவேல் அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது. மாரத்தான் துவக்க நிகழ்வில்
JP பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் M. ராஜ்குமார்,
JP கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர் J. மைக்கேல் மரியதாஸ்,
JP கல்வியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் A. சுரேஷ் ஜான் கெனடி
ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளனர்.

இந்த JP மாரத்தான் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட அனைவருக்கும் திறந்தது. சமூக விழிப்புணர்வை உருவாக்கும் இந்த அரிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு JP கல்வி குழுமம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு :
91500 76735
91500 76734
98940 73973
94437 28401

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE