வியாழன், 24 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
கவிதைகள்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு கருத்தரங்கம் மற்றும் உலக சாதனை நிகழ்வு

27 ஆகஸ்ட் 2025 Magizhchi FM 761 பார்வைகள்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு கருத்தரங்கம் மற்றும் உலக சாதனை நிகழ்வு

திருநெல்வேலி, ஆகஸ்ட் 28, 2025


79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 29, 2025 அன்று, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை மற்றும் சமூக உள்ளடக்கம் பற்றிய ஆய்வு மையம் மற்றும் மகிழ்ச்சி இணைய வானொலி, மகிழ்ச்சி பதிப்பகம் மற்றும் ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகியவை இணைந்து நடத்தும் "இந்திய முகங்கள் " என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் மற்றும் உலக சாதனை நிகழ்வை நடத்த உள்ளன. இந்த நிகழ்வு நேரடியாகவும் இணையவழியிலும் நடைபெற உள்ளது.
இந்த பன்னாட்டு கருத்தரங்கில், இந்திய சுதந்திரத்திற்காக தியாகம் செய்த வீரர்களின் கதைகள், சுதந்திரத்திற்குப் பின் நாட்டை வளர்ச்சி பாதையில் வழிநடத்திய தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள், மேலும் அரசியல் தலைவர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், விஞ்ஞானிகள், ராணுவ வீரர்கள் உள்ளிட்ட பல்துறை ஆளுமைகளின் பங்களிப்புகள் குறித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், அமெரிக்கா, துபாய், இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை போன்ற பல்வேறு நாடுகளிலிருந்தும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளார்கள். இந்த பன்னாட்டு கருத்தரங்க
நிகழ்விற்கு வரவேற்புரை நல்க வரலாற்றுத்துறைத் தலைவர் மற்றும் சமூக உள்ளடக்கம் பற்றிய ஆய்வு மையத்தின் இயக்குநர் முனைவர் ரெ. செல்வராசு அவர்கள் வழங்க இருக்கிறார். பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் ஜே. சாக்ரடீஸ் தலைமை உரையாற்றவுள்ளார். பேராசிரியர் மற்றும் கலைத்துறையின் புலமுதல்வர் முனைவர் எஸ். மாதவன் துவக்க உரை நிகழ்த்தவுள்ளார். இந்தோனேஷியா ஜகார்த்தாவில் உள்ள தேசிய ஆராய்ச்சி மற்றும் புதுமை நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர் சி. தனுஷ் இணையவழி சிறப்பு உரை ஆற்ற உள்ளார்.
மேலும், தொடர்பியல் துறைத் தலைவர் முனைவர் ஜி. பாலசுப்ரமணிய ராஜா, மகிழ்ச்சி பவுண்டேஷன் இயக்குநர் த. புவனேஸ்வரி, மகிழ்ச்சி எப்.எம். ஒருங்கிணைப்பாளர் லயன். சைலஜா கணேசன், ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் முனைவர்  செ. வெங்கடேசன், ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் துணைத்தலைவர் முனைவர் சி.கலைவாணி ,கோவை இரத்தினம் தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் ஏ. சாலெத் வென்சஸ் ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்க உள்ளனர். அதனை தொடர்ந்து குற்றவியல் மற்றும் குற்ற நீதியியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் இரா. சிவகுமார் கருத்தரங்க நோக்கவுரை ஆற்ற உள்ளார். இந்திய முகங்கள் நூலின் தொகுப்பாசிரியரும் இரத்தினவாணி சமுதாய வானொலி நிலைய இயக்குநருமான முனைவர் ஜெ. மகேந்திரன் நற்றியுரை நிகழ்த்த இருக்கிறார். நிகழ்ச்சியை நாங்குநேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் ஆ. ஜெபசிந்தி தொகுத்து வழங்க உள்ளார்.
இந்த கருத்தரங்கில் உலகம் முழுவதும் இருந்து கிடைக்கும் கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய முகங்கள் என்ற தலைப்பில் அச்சு நூலாகவும் மின் நூலாகவும் வெளியிடப்பட உள்ளன. இந்த வரலாற்று சிறப்புமிக்க தொகுப்பை பல்கலைக்கழக முன்னாள் மாணவரும் ஆய்வாளருமான முனைவர் ஜெ. மகேந்திரன் தொகுத்து வெளியிட உள்ளார்.
மேலும், பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் ஜே. சாக்ரடீஸ், வரலாற்றுத்துறைத் தலைவர் முனைவர் ரெ. செல்வராசு மற்றும் உதவி பேராசிரியர் முனைவர் இரா. சிவகுமார் ஆகியோருக்கும் சிறப்பான கட்டுரைகளை ஒருங்கிணைத்த பேராசிரியர்களுக்கும்  இந்தியன் ஐகான் விருது- 2025 வழங்கப்பட உள்ளது.
சுந்தரனார் அரங்கில் நடைபெறும் இந்த நேரடி கருத்தரங்கில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்க இருக்கின்றனர். இணையவழி நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்தியாவின் பெருமைமிக்க தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் பல்துறை ஆளுமைகளின் பங்களிப்புகளையும் பதிவு செய்யும் இந்த பன்னாட்டு கருத்தரங்கு, உலக சாதனை நிகழ்வாகவும் கல்வி மற்றும் வரலாற்றை இணைக்கும் ஒரு மகத்தான முயற்சியாக அமைய உள்ளது.

அனுமதி இலவசம் ...! அனைவரையும் அன்போடு அழைக்கிறோம் ..!

 

International Conference and World Record Event at Manonmaniam Sundaranar University
Thirunelveli, August 28, 2025:

On the occasion of the 79th Independence Day, the Department of History and the Centre for the Study of Social Inclusion at Manonmaniam Sundaranar University, in collaboration with Magizhchi Web Radio, Magizhchi Publications, and the All India Book of Records, will jointly organize an International Conference and World Record Event under the theme Indian Faces on August 29, 2025. The event will take place both in-person and virtually.

In this international conference, more than a thousand research papers have been submitted from across various states of India as well as from countries such as the United States, Dubai, Indonesia, Malaysia, Singapore, and Sri Lanka. The papers focus on the lives of freedom fighters who sacrificed for India’s independence, the leaders who guided the nation on the path of development after independence, and the contributions of political leaders, litterateurs, artists, scientists, and soldiers.

The welcome address will be delivered by Dr. R. Selvaraju, Head of the Department of History and Director of the Centre for the Study of Social Inclusion. Dr. J. Sacratees, Registrar of the University, will deliver the Presidential Address. Dr. S. Madhavan, Professor and Dean of Arts, will give the Inaugural Address. A special virtual lecture will be delivered by Dr. C. Dhanush, Professor at the National Research and Innovation Agency, Jakarta, Indonesia.

Greetings will be extended by Dr. G. Balasubramania Raja, Head of the Department of Communication, Th. Bhuvaneswari, Director of Magizhchi Foundation, Lion Shailaja Ganesan, Coordinator of Magizhchi FM, Dr. S. Venkatesan, Founder of the All India Book of Records, Dr. C. Kalaivani, Vice-President of the All India Book of Records, and A. Saleh Vensus, Assistant Professor, Rathinam College of Arts and Science, Coimbatore.

The Conference Note will be presented by Dr. R. Sivakumar, Assistant Professor, Department of Criminology and Criminal Justice. The Felicitation Address will be delivered by Dr. J. Mahendran, Editor of the book Indian Faces and Director of Rathinavani Community Radio. The program will be compered by A. Jebasindhi, Postgraduate Teacher, Government Girls’ Higher Secondary School, Nanguneri.

Selected papers from across the globe will be published in both print and e-book formats under the title Indian Faces. This historic volume will be edited and published by Dr. J. Mahendran, an alumnus and researcher of the university.

Additionally, the Indian Icon Award – 2025 will be conferred upon Dr. J. Sacratees, Registrar, Dr. R. Selvaraju, Head, Department of History and Dr. R. Sivakumar, Assistant Professor along with distinguished professors who coordinated exceptional contributions.

More than 200 participants will take part in the in-person conference at Sundaranar Hall, while over a thousand participants are expected to join the online event. Recording and celebrating the life stories of India’s great leaders and the contributions of multifaceted personalities, this international conference will also mark a world record event—emerging as a remarkable endeavor linking education and history.

Admission is free...! We cordially invite everyone..!

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE