புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
சிந்தனைச் சிற்பி விருதுகள் சிறுகதைப்போட்டி, சிந்தனைச் சிற்பி விருதுகள் சிறுகதைப்போட்டி, நிகழ்ச்சிகள், நிகழ்ச்சிகள், கவிதைகள்

வ. உ. சிதம்பரம்பிள்ளை

18 நவம்பர் 2022 706 பார்வைகள்
வ. உ. சிதம்பரம்பிள்ளை

வ.உ. சிதம்பரம் பிள்ளை 

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் ஊரிலே

1872-ல் உலகநாயகன் பரமாயி மகனாகப் பிறந்தவரே

கப்பலோட்டிய தமிழனே தென்னாட்டு திலகரே

செக்கிழுத்த செம்மலென போற்றி புகழப்பட்டவரே

தமிழ் அன்னையின் தவம் புதல்வரே

தரணி போற்றும் போராளியே

கல்வியில் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தவரே

வழக்குரைஞராக வாதிட்டு வகை செய்தவரே

வருங்காலம் வசந்த காலமாக்க முழங்கியவரே

வெள்ளையனுக்கு எதிராக போராடியவரே

வெள்ளையனை வேரறுத்து வேங்கையே

ஆங்கிலேயருக்கு எதிராக கப்பலோட்டிய தமிழரே

தொழிலாளர்களுக்காக போராடிய தொழிற்சங்கத் தலைவரே

சுதந்திரத்துக்காக கர்ஜித்த சிங்கமே

சுதேசிகளுக்காக குரல் எழுப்பியவரே

பிரித்தானிய கப்பல்களுக்கு போட்டியாக

இந்திய கப்பல் நிறுவனத்தை தொடங்கியவரே

இந்திய விடுதலை போராட்ட வீரரே

நின்புகழ் வாழ்க உலகம் உள்ளவரை.

திருக்குறள் தூதர்
க. விஜயசாமுண்டீஸ்வரி 
சென்னை

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE