புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
அமுத கவிச் சுடர் விருது , அமுத கவிச் சுடர் விருது , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

சுதந்திர காற்றை சுவாசிப்போம் 11

11 ஆகஸ்ட் 2022 778 பார்வைகள்
சுதந்திர காற்றை சுவாசிப்போம் 11

சுதந்திர காற்றை சுவாசிப்போம் 

கோடிக் குருதிக் கொட்டியே
குடியரசு  ஆனோம்..!

விலையில்லா விண்மீன்கள் பல
வீழ்ந்தே  இந்த
விடியலைக்  கண்டோமே....!

பிணக்குவியல்கள்
புதைத்து பிறந்ததே
நம் பாரதம்...!
இன்று ;
பணக்குவியல்கள்
புடைத்து வருந்துதே
பாவம்..!

'அச்சமில்லை' என்று
மிரட்டி வாங்கிய சுதந்திரம்..!
இன்று ;
மிச்சமில்லாமல் போனதே
எவருடைய தந்திரம்...!

இமயமும் உருகிடுமே ;
இளைஞர் எழுச்சி கண்டு...!
பெருமைகளும் பெருகிடுமே ;
புத்திப் புரட்சி கண்டு ..!

பணத்தாளுக்காக 
பாரதம் கடக்கும்  மாணவர்களே..! 

 மனம் தாய்நாட்டை 
 தாண்டும் முன் தலைகுனிவாய்..! 

  உன்னைக் கருவாக்கி
  உருவாக்கிய தாய் நாட்டைத்
   தவிக்க விட்டுவிட்டு எப்படி 
   பிழைக்கப் போகிறாய்..???

     -கவிஞர் கு அழகர்சாமி,
       பரமக்குடி.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE