சேலம் நங்கவள்ளி கைலாஷ் மகளிர் கல்லூரியில் இரண்டு நாள் ஊடகப் பயிற்சி நடைபெற்றது
கைலாஷ் மகளிர் கல்லூரியில் மகிழ்ச்சி FM இரண்டு நாள் ஊடகப்பயிற்சி
சேலம் நங்கவள்ளியில் அமைந்துள்ள கைலாஷ் மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் 2908.2024 - 30.08.2024 ஆகிய இரண்டு நாட்கள் ஊடகப் பயிற்சி (Radio Jockey Training) நடைபெற்றது.
இப்பயிற்சிக்குச் சிறப்பு அழைப்பாளராக முனைவர் ஜெ.மகேந்திரன்,
மூத்த ஊடகவியலாளர் & ஊடகப் பயிற்சியாளர் பங்கேற்று நிகழ்ச்சித் தொகுப்பு, குரல் ஏற்றத்தாழ்வு, செய்தி எழுதுதல், நேர்க்காணல் குறித்து விளக்கமளித்தார்.
தொடர்ந்து தனது அனுபவங்களையும் , கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இப்பயிற்சியில் ஆர்வமுள்ள மாணவிகள் கலந்து கொண்டு தங்களுக்கான தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்தனர் .
இப்பயிற்சியின் நிறைவில் மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ் .விஜயலட்சுமி ஒருங்கிணைப்பாளர் முனைவர்.இரா.அமுதலட்சுமி மேற்கொண்டனர்
.