செவ்வாய், 22 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
சிறப்பு தினங்கள் கவிதை, சிறப்பு தினங்கள் கவிதை, நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

காதல் கவிதை...! 006

27 ஜனவரி 2023 940 பார்வைகள்
காதல் கவிதை...! 006

காதல் கவிதை

தகப்பனாய் பாதுகாத்து தோழனாய் தோள்கொடுத்து

காதலனாய் இதயத்தில் இடம் பிடித்து

மணாளனாய் வாழ்வில் பங்கு கொள்ள

பல தடைகளை காதலின் நேசத்தால்

கடந்து இன்று மணவறை பந்தலில்

நம் குடும்பத்தினர்முன் உன்கை பற்றுகையில்  

என்னுள்ளம் எல்லாம் பட்டாம்பூச்சி பறக்க

உலகை வென்ற திருப்தி அடைந்தேன்

உனக்குள் என்னை உயிராக மாற்ற

உன் கண்களை காணும் போது

என்னையே இழக்கிறேன் உன் இடத்தில்

அதுவே இப்பிறவி  பாக்கியம் ஆகும்

உலகில் எத்தனையோ பேர் இருந்தும்

மனம் உன்னை மட்டுமே நாடியது

தேவைக்காக அல்ல வாழ்க்கை துணையாக

சிறுசிறு கருத்து வேறுபாடு உண்டு

ஆனால் உன்னை வேறாக பார்த்ததில்லை

உன்னை முதன்  முதலாக கண்ட

அந்த நொடி எனக்கு தெரியவில்லை

நான் தான் நீ என்றும்

நீ தான் நாம் என்றும்

இந்த காதல் இப்பிறவிக்கு மட்டும்

இல்லாமல் ஏழேழு பிறப்பிலும் உன்னையே

கரம் பற்ற மனம் துடிக்கிறது

-பா.கீர்த்தனா,

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE