செவ்வாய், 22 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
சிறப்பு தினங்கள் கவிதை, சிறப்பு தினங்கள் கவிதை, நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

புத்தாண்டு பொதுப்பொலிவாய் மலரட்டும்..

31 டிசம்பர் 2022 1,423 பார்வைகள்
புத்தாண்டு பொதுப்பொலிவாய் மலரட்டும்..

புத்தாண்டு புதுப்பொழிவாய் மலரட்டும்...

பூத்திருக்கும் புத்தாண்டு
புதுமைகள் செய்யட்டும்
புண்ணியங்கள் பெருகி
புகழும் ஓங்கட்டும்

பூவாய் மனங்களும்
பூத்து மலரட்டும்
புன்னகையில் புதுயுகமும்
புதுமைப் படைக்கட்டும்

புதிய நிகழ்வுகள்
புரட்சி செய்யட்டும்
புலரும் விடியலும்
புதிராய் இருக்கட்டும்

புவியும் நனைய
புதுப்பொழிவு பொழியட்டும்
புறம்பேசும் மனிதமும்
புத்தி தெளியட்டும்

புரளும் பொய்கள்
புரளாது அழியட்டும்
புகட்டும் அறிவும்
புலமை கொடுக்கட்டும்

துன்பங்கள் அகன்று
இன்பம் பொங்கட்டும்
வண்ணமாக மிளிர்ந்து
வளமும் கொழிக்கட்டும்

மாறும் ஆண்டில்
மாற்றமும் வரட்டும்
பிணிகளும்   மாறி
தூரவே மறையட்டும்

வாய்மை எப்போதும்
வளமாய் ஓங்கட்டும்
அநீதி ஒழிந்து
நிதி வென்றிடட்டும்

-கிருஷ் அபி, இலங்கை.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE