புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
சிறப்பு தினங்கள் கவிதை, சிறப்பு தினங்கள் கவிதை, நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

காதல் எனும் வேதம் ...! 007

28 ஜனவரி 2023 673 பார்வைகள்
காதல் எனும் வேதம் ...! 007

காதலர் தினம்

காதல் எனும் வேதம்
 
கண்டதும் ஒட்டி
கனத்தில் பற்றியது
வண்டாகத் துரத்தி
வசீகரித்து ஈர்த்ததே
 
இருமனம் கலந்த
இன்னுயிர் ஊடல்
பருவத்தின் தேடல்
பாசத்தின் நாடல்

வான் கொண்ட நிலவாய்
வடிவான கனாவாய்
தேன் சொட்டும்
தேகிட்டாத காதலே

உள்ளங்கள் பரிமாறி
உணர்வுகளின் சீண்டலில்
கஞ்சாப்பூ போதையில்
காந்தமாய் தாக்குமே

உயிரணுவின் தூண்டலில்
உதிரத்தின் ஓடலில்
உயிரன்பு கொய்தமையல்
உரமாக முளைக்குமே

வெட்டவெட்ட வளர்ந்திடும்
வேரரூக்க மண்ணோடு புதைந்திடும்
உண்மைக் காதல்
உயிர்துறந்தும் வாழுமே

எத்தனை மாண்டாலும்
எழிலாகத் தோன்றுமே
எத்தனை எதிர்ப்பிலும்
ஏணியாய் உயர்த்துமே

ஆதிமுதல் அரசன்வரை
அனைவரையும் வென்றது
பதியிலும் காவியத்திலும் பலமே பெற்றதே

காதல் எனும் வேதமே
காலத்தைக் கடந்ததே
மோதல் வந்தாலும்
மேவியே அகிலத்தில் உயிரோடு வாழுமே

கிருஷ் அபி இலங்கை

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE