புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
சிறப்பு தினங்கள் கவிதை, சிறப்பு தினங்கள் கவிதை, நிகழ்வுகள், நிகழ்வுகள், நிகழ்வுகள்

மகிழ்ச்சி FM கோலப்போட்டியில் பரிசு பெறும் வெற்றியாளர்கள்.

21 ஜனவரி 2024 1,268 பார்வைகள்

மகிழ்ச்சி FM கோலப்போட்டியில் பரிசு பெறும் வெற்றியாளர்கள்.

நமது மகிழ்ச்சி FM சார்பாக நடைபெற்ற மார்கழித் திருவிழா கோலப் போட்டியில் 322 பேரும், நங்கவள்ளி கைலாஷ் மகளிர் கல்லூரி   மாணவிகள் 160 பேரும், மற்றும் ஆண்கள் சார்பாக இரண்டு பேரும் கலந்து கொண்டனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அழகழகான நேர்த்தியான பல வண்ணங்களில் கோலங்கள் வரைந்து அசத்தியிருந்தனர். கோலம் வரைந்த அனைவரின் உழைப்பு திறமைகள் பாராட்டுக்குரியது. மேலும் கோலப் போட்டியில் பங்கேற்று சிறப்பித்தது மிகப் பெரிய வெற்றி . ஆனால் பரிசு மூன்று பேருக்கு தான் வழங்கப்படும் என்பது நமது விதியாக இருக்கிறது. இந்த பரிசுக்கான கோலங்களை தேர்வு செய்வதற்காக , ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஓவிய ஆசிரியர்கள், கலை நிபுணர்கள் நடுவர்களாக  இருந்து பரிசு கூறிய கோலத்தை தேர்வு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நடுவர் தீர்ப்பை இறுதியானது.
தேர்வு செய்த நடுவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இதில் யாரும் தயவு செய்து மன வருத்தம் கொள்ள வேண்டாம். சிறப்பான கோலங்களை வரைந்த அனைவருக்கும் கலைத்தென்றல்  விருது 2024 வழங்கி கௌரவப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம். மகிழ்ச்சியாக முடிவை ஏற்றுக் கொள்ளுங்கள். இன்றைய பங்கேற்பாளர்கள் நாளைய வெற்றியாளர்கள். 
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள். தொடர்ந்து பயணிப்போம்....
விரைவில் அடுத்த கோலப்போட்டி அறிவிப்பு வெளியாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

மகிழ்ச்சி FM கோலப்போட்டியில் பரிசு பெறும் வெற்றியாளர்கள்.

முதல் பரிசு

சுகந்தி கண்ணன், காரைக்கால் 

இரண்டாவது பரிசு

K. சாந்தி கண்ணன், சென்னை.

மூன்றாவது பரிசு

வி. அருணா விஷ்ணு, சேலம்.

கைலாஷ் மகளிர் கல்லூரி கோலப் போட்டியில் பரிசு பெறுபவர்

கு. சண்முகப்பிரியா , உதவி பேராசிரியர்.

நமது மகிழ்ச்சி Fm சார்பாக நடத்தப்படும் விருதுகள் வழங்கும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும். நடைபெறும் தேதி, இடம் பின்னர் அறிவிக்கப்படும்.
விழாவில் பரிசு பெற்றவர்கள் மட்டுமல்ல விரும்பினால் அனைவரும் பங்கேற்கலாம்.

24 மணி நேரமும் இனிய பாடல்கள் கேட்க நமது மகிழ்ச்சி fm App பை பதிவிறக்கம் செய்து இசையோடு இணைந்திருங்கள்...
மகிழ்ச்சி Fm App பதிவிறக்கம் செய்ய லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE