முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்டம், அ.முக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2004-2005 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி 20 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பை நினைவுகூரும் வகையில், மாணவர்களின் பள்ளிப் பருவ நினைவுகளையும், ஆசிரியர்களின் அனுபவங்களையும் தொகுத்து "இருபது வருட இன்ப சந்திப்பு - பள்ளிப்பருவ நண்பர்கள்" என்ற தலைப்பில் நூல் வெளியிடப்பட்டது. இந்த நூலை இப்பள்ளியின் முன்னாள் மாணவியும், முனைவருமான ந. மணிமேகலை அவர்கள் எழுதியுள்ளார்.
தங்கள் பயின்ற பள்ளிக்கு நன்றிக்கடனாக, 2004-05 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து பள்ளிக்குத் தேவையான மேஜை மற்றும் நாற்காலிகளை நன்கொடையாக வழங்கினர்.
நிகழ்ச்சிக்குத் தலைமையாசிரியர் டே. முத்து தனசீலி அவர்கள் தலைமை தாங்கி வரவேற்புரை ஆற்றினார். ஊராட்சி மன்றத் தலைவர் தங்கபாண்டியன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் ஆசிரியர்கள் தீபலட்சுமி, சம்பத்குமார், ராஜு மற்றும் அன்பு ராணி ஆகியோர் கலந்துகொண்டு, தங்களின் பழைய கற்பித்தல் அனுபவங்களையும் மாணவர்களுடனான நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் பலரும் தங்களது தற்போதைய வாழ்வியல் மாற்றங்கள் மற்றும் பள்ளிப் பருவ நினைவுகளை நெகிழ்ச்சியுடன் உரையாடினர்கள்.
நிகழ்ச்சியின் நிறைவாக, நூலாசிரியரும் முன்னாள் மாணவியுமான முனைவர் ந. மணிமேகலை நன்றியுரை ஆற்றினார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களைச் சந்தித்த இந்த நிகழ்வு அனைவர் மத்தியிலும் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.