magizhchifm2020@gmail.com சனி, 07 November 2026
⚡ சமீபத்திய
தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம் கவிஞர் சா.பாரதியின் கவிதைகள் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தேனிசைத் தென்றல் தேவா கானா இசையின் காவிய நாயகன்! தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம் கவிஞர் சா.பாரதியின் கவிதைகள் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தேனிசைத் தென்றல் தேவா கானா இசையின் காவிய நாயகன்!
கவிதைகள்

முனைவர். கோ. லதாவின் கவிதைகள்

22 மார்ச் 2026 Magizhchi FM 333 பார்வைகள்
முனைவர். கோ. லதாவின் கவிதைகள்

001. ஒற்றுமை வளர்ப்போம்.

ஒற்றுமை வளர்ப்போம் வேற்றுமை களைவோம்

கைகோர்த்து நிற்போம் காவியம் படைப்போம்

சாதிமதம் கடந்து மனிதநேயம் காப்போம்

சகோதரத்துவம் தழைக்க சதித்திட்டங்களை அழிப்போம்

மொழி வேறுபாடின்றி தமிழரென ஒன்றிணைவோம்

வேற்றுமையில் ஒற்றுமை இந்தியரென நிலைப்போம்

கூடிவாழ்ந்தால் கோடி நன்மை பெறுவோம்

நட்பெனும் கயிற்றால் நாட்டை பிணைப்போம்

அன்பெனும் பாசத்தால் அகிலத்தை வெல்வோம்

பாகுபாடின்றி பழகி பண்பாடு காப்போம்

இனவெறி ஒழிப்போம் சமஉரிமை தருவோம்

வீழ்வது நாமாகினும் வாழ்வது ஒன்றாகவே

ஒற்றுமையெனும் தீபத்தால் இருள் அகற்றுவோம்

கீழே விழுந்தாலும் தூக்கி நிறுத்துவோம்

ஓரினம் ஓர்குலம் உலகமே எங்களில்லம்

ஒற்றுமை வளர்ப்போம்!! உயர்வு பெறுவோம்!!!

 

002. சர்வதேச கவிதை தினம்... ( மார்ச் 21. )

 

மொழிகள் பலவாய் இருந்தாலும்

உணர்வுகள் கவிதைக்கே உரியது

எல்லைகள் இல்லாத உலகத்தில்

அன்பை விதைக்கும் கவிதை

 

மானுடம் போற்றும் மழலை

மனதின் ஆழத்து உணர்வு

கவிதை அது ஒரு கலை

கனிந்த இதயத்தின் மொழி

 

சோகம் துடைக்கும் தேன்

சுடர்விடும் சிந்தனைத் தூண்

கவிஞன் எனும் மந்திரவாதி

எழுத்துக்களால் எழில் செய்வான்.

 

காகிதத்தில் உயிர் தெறிக்கும்

கற்பனை திறம் மலரும்

அமைதி சொல்லும் கவிதை

அறம் போற்றும் கவிதை

 

பாரதியின் வாரிசுகளாய்

புதுமை பாடி மகிழ்வோம்

கவிதை தினமே மகிழ்

கவிதை வாசித்தே களி

 

நல்வாழ்வு தந்திடும் வரிகள்

நம்பிக்கை ஊட்டிடும் கனிகள்

கவிதையின் மகுடம் ஏற்றி

கவிதையாய் உலகை மாற்ற.....

 

"இனிய சர்வதேச கவிதை தின வாழ்த்துக்கள்"!!

 

003. யாதும் ஊரே.

யாதும் ஊரே யாவரும் கேளிர்

எல்லைகள் இல்லா அன்பின் பாலம்

மலையும் கடலும் பிரிப்பது இல்லை

மனித மனங்கள் இணைந்தால் போதும்

 

தீதும் நன்றும் பிறர்தர வாரா

இன்றே சிந்திப்போம் உண்மை நிலைதனை

உலகம் யாவும் ஒரு குடும்பம்

உயர்ந்தோம் உயர் அன்பின் வழிதனிலே

 

மொழிபெயர்ப்போம் அன்பின் மொழி தனையே

பாகுபாடின்றிப் பழகி நாளும் மகிழ்வோம்

ஏழ்மை இன்றி வறுமை இல்லா

ஏற்றமிகு உலகம் எங்கும் படைத்திடுவோம்

 

மனித நேயம் காத்து நிற்போம்

மாற்றுச் சிந்தனையை களைந்து விடுவோம்

யாதும் ஊரே யாவரும் கேளிர்

இனிதே வாழ்வோம்!! பார்போற்றும் இப்பார்தனிலே!!!

 

குறிப்பு : இக்கவிதை புறநானூற்றுப் பாடல் 192 கருத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டது.

 

004. ஞா வரம் எண்ணம் கொள்.

 

அறிவெனும் அகல் விளக்கை ஏற்றிடுவோம் - நம்

அகத்தினால் இருள்தன்னை மாற்றிடுவோம்!

எண்ணமே வாழ்வின் ஆணிவேராம் - அதை

உன்னத பாதையில் பயிற்றுவிப்போம்!

 

ஞானத்தின் வாசலை திறந்திடுவோம் - நல்

வேதத்தின் சாரத்தை பருகிடுவோம்!

சிந்தனைத் தெளிவே சீர்மிகுவாழ்வு - அதை

நந்தவனமாய் நாளும் காத்திடுவோம்!

 

கல்லாமை நீக்கிட கரம் கோர்ப்போம் - கற்ற

கல்வியால் கருணையை வளர்த்திடுவோம்!

உள்ளத்தில் தூய்மை கொண்டோமேயாயின் - இவ்

வுலகமே நமக்கொரு பாடமாகும்!

 

ஞான வரம் ஞாவரம் ஆகட்டும் - நம்

எண்ணம் யாவும் ஈடேறட்டும்!

அறிவின் ஒளியில் அகிலம் மிளிர - நாம்

அன்பின் வழியில் நடை போடுவோம்!!

 

நல்லாசிரியர். முனைவர். கோ. லதா, சென்னை

 

 

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE