குழந்தைகள் தின கவிதை..!
குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்!
வண்ணம் கலையாத வண்ணத்துப் பூச்சிகள் !
வாட்டம் காணாத மலர்ந்த முகத்து முல்லைகள் !
எத்தனை முறை கோபத்தில் திட்டினாலும்!! அடித்தாலும்,,! தொட்டான் சிணுங்கி என !
மீண்டும் ,கோபம் மறந்து பழைய நிலைக்கு திரும்பும் குழந்தையும் ஒரு தொட்டா சிணுங்கிகள்!!
சாதி ,பேதம் மறந்த, குழைந்த சேறுகள்நிறைந்த நன்நிலங்கள்!
விதைத்துப் பார்ப்போம்! தீமைகள் கலைந்த நன்மைகளை மட்டும்,,! அந்நிலத்தில்!
உலகத்தின் வருங்கால ஆணிவேர்கள்!
உலகம் என்னும் ஆலமரத்தின் பயனுள்ள விழுதுகள்!
பிஞ்சு மனங்களில் நஞ்சு விதைக்காது!
நெஞ்சுரம் கொள்ளும் வார்த்தைகள் விதைப்போம்!
புன்னகையில்,, புண்பட்ட நெஞ்சையும்,, பூரிக்க வைக்கும்!!
புன்னகை முகங்கள் கொண்ட அந்தப் பிஞ்சு மலர்களை,,! பேணிக் காத்து வளர்ப்பது நம் கடமை!!
கையேந்தி தெருவில் கெஞ்ச வைப்பவர் செய்வது மடமை
இனியும் நடக்க வேண்டாம் இந்நாட்டில் இந்த கொடுமை!
உளமாற உலகுக்கு நலம் சேர்ப்போம்! குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்!
-கவிதை மாணிக்கம்.