சிந்தனைச் சிற்பி விருதுகள் சிறுகதைப்போட்டி, நிகழ்ச்சிகள், சிந்தனைச் சிற்பி விருதுகள் சிறுகதைப்போட்டி, நிகழ்ச்சிகள், கவிதைகள்
பெண்ணே கேள்...
பெண்ணே கேள்...
பெண்களைப் படைத்து
அழகாக்கிய இயற்கை
ஆண்களால் அதை
அற்புதமாக்கியதே நிஜம்,
ஆடவர் அனைவரும்
பொதுவில் நல்லவர்கள்
பிறப்பால் அவர்களும்
உயர்ந்தவர்களே - நாம்
பார்க்கும் பார்வையின்
பலனையே அது தரும்
கயவர் என்ற எண்ணம்
வந்தால் - உன் தந்தை
சகோதரன் கணவன் கூட
அந்த வரிசையின்
நடுவில் நிற்பார்கள்,
பழகிப்பார் தெரியும்
பாலா கள்ளா என்று
மூளையில் மணியடித்தால்
முழித்து எரித்துவிடு
மூன்றாம் கண்ணால்,
விதி விலக்கானவர்களும்
இங்கு இருக்கக் கூடும்,
பெண்ணின்றி அமையாது
உலகெனின் உண்மையில்
ஆணின்றியும் அமையாது
அழகான உலகு.
கவிஞர்
முனைவர் சகுந்தலா ராமலிங்கம்.