புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

நான் ரசித்த கவிஞர் கம்பன்...!

29 டிசம்பர் 2022 1,360 பார்வைகள்
நான் ரசித்த கவிஞர் கம்பன்...!

நான் இரசித்த கவிஞர்கள்  
 (    கம்பன்  )

கம்ப ராமாயணம் பால காண்டத்தில்  இராமனும் சீதாப்பிராட்டியாரும் ஒருவரை ஒருவர் நோக்கி கொள்ளும்  597 வ து பாடலிலிருந்து 
சீதாப்பிராட்டியாரின் காதல் நிலையுரைத்தல் மற்றும் மற்றும் இராமன் தனக்குள் கூறுதல் என பாடல் 709 வரையிலும்  வரையிலும் மேற்கொண்ட ஓர் அகப் பயணத்தில் பிறந்தனவே இந்தக் கவிதை 
கள். 

.உலகத்தில் எந்த ஒரு உன்னதமான ஒரு கவிஞனை விடவும்  ஏன் கம்பனை மட்டும் ஓர் ஒப்பற்ற கவிஞன் என்று நாம் கொண்டாட வேண்டும் என்று அணு அணுவாக நான் இந்த பாடல்களில்  உணர்ந்து கொண்டேன். கூடுவிட்டு கூடு பாயும் கலையிலும் பாத்திரங்களாகவே மாறிவிடும் நிலையிலும் கம்பனுக்கு நிகர் அவன் மட்டுமே. 

ராமனாக சீதையாக நிலவாக அலையாக கடலாக சூரியனாக காதலில் வலியாக அடடா எத்தனைஅவதாரங்கள் எடுத்திருக்கிறான் இந்த கவிச்சக்கரவர்த்தி.
கவித்துவத்துவத்தின் உச்சங்கள் அவன் படைப்புகள்
அதன் எச்சங்களாக இருந்தால் கூட போதும். எந்த வரிகளுக்குள்ளும்  உயிர் மூண்டு விடும் என்பது என் கருத்து .

ராமா!

ஓர் உயிர் பறிக்க எத்தனை கூற்றுவர்களை 
ஏவிவிடுகிறாள் உன்மீது  
வண்ண மேகலை தேரொன்று 
வாள் போன்ற விழிகள் இரண்டு
உயிரை ஊடுருவும் தனங்கள் இரண்டு
இத்தனையும் போதாதென்று 
வாய்க்குள் நெளியும்
புன்னகை என்ற ஒன்று
உண்மையில் அங்கே பூத்துக்கிடக்கும் நட்சத்திரங்கள் 
ஒவ்வொன்றும்
உன் துயரங்கள் தானோ ராமா
அவள் தான் 
நினைவுகளை அள்ளி அள்ளி 
விதைக்கின்றாளோ விண்ணிலே ? 

அங்கே மட்டும் என்ன வாழ்கிறது

சீதா!

 ராமனிடம் சொல் 
நெருப்பு மூட்டப்பட்ட செங்கல் சூளைக்குள் குமையும்
பச்சைக்களிமண்ணாக குமைந்து கொண்டிருக்கிறாள் அவள்
ஒரு பார்வையிலேயே மனதை எடுத்துப்போனவன்
மனதிற்குப் பதிலாக 
இந்த உயிரையாவது எடுத்துப்போயிருக்கக்கூடாதா என்று?

இருளைச்சுவைக்கும் வெண் நெருப்பே  !
என் மீதும் ஏங்கித்தவிக்கும் இந்த  ஊமைக் கடல்மீதும்
என்ன தான் விரோதம் உனக்கு  சொல்
எங்கள் காதலின் விதியை 
நீ  ஏன்  எழுதுகிறாய் 
துளியும்  இரக்கமற்று ?

நிலவிடம் ஒரு கேள்வி

நிலவே நிலவே பேசுசகிறாய்
நேரம் பார்த்து வீசுகிறாய்
நீக்கம் இன்றி நிமிர்ந்த நிலாக்கதிர்
தாக்க வெந்து தளர்ந்து சரிந்தனள்
செயலற்ற செந்தாமரைப் பூ போன்று
இந்தப் பூவையும் கூம்பிப்போனாளே
உன்  சூதாலே 

வாச மென் கல வைக்களி  வாரிமேற்
பூசப் பூசப் புலர்ந்து  புழுங்கினள்
வீச வீச வெதும்பினள் மென்முலை
ஆசை நோய்க்கு மருந்தும்உண் டாம்கொலோ ...

சூரியனிடம்

ஏய் இரத்தச்சிவப்பில் மிதக்கும் சூரியனே !
இராமனின் ஒரே பார்வையால் நிறையளிந்த
சீதையின் சிந்திப்போன 
நாணமோ நீ  ?
'
சீதைக்கு .....

பால்தான் மனதானால்
 பாலாடை தான் உடலா?
சீதையே நீ ஒரு விழியால் சந்திரனையும் 
ஒரு விழியால் சூரியனையும் 
ஒரு சேர விழுங்கிவிடு

ராமனுக்கு .....

ராமா நீ காலத்தை எடுத்து 
செலுத்தாத அம்பாக 
உன் அம்புறாத்துணியில் போட்டு வை
திசைகள் தற்காலிகமாக தொலைந்து போகட்டும்

கம்பனுக்கு .....

உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
உங்கள் இருவரையும் நோக்க வைத்து
இரு சிட்டுக்குருவிகளின்  சிறகுகளில் 
ஜென்மங்களை  ஏற்றி வைத்த
அந்தக் கம்பனை மட்டும் என்னிடம் விட்டு விடுங்கள்
நான் அவனை ஒரு சுவாசமாக எடுத்து விழுங்கி விடுகிறேன்.

+தங்கேஸ்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE