புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

இயேசுவின் மகிமை

26 டிசம்பர் 2022 871 பார்வைகள்
இயேசுவின் மகிமை

இயேசுவின் மகிமை 
என்றும் இனிமை..

*கெரீத்து ஓடை*  வற்றிப் போக எலியாவிற்கு அப்பம் தந்த புலம்பெயர்தல் மகிமையோடு, மறுமழை வரும் வரை குறையாத
பானை நிறைந்த மாவும் தந்து *பசியாற்றிய மகிமை!*

*பெட்சா*  இடத்தில் இரண்டு குருட்டு மனிதர்களுக்கு பார்வை, 
செவிடனுக்கு கேட்டல் திறன்,
 18 வருட ஊமையாய் இருந்தவனை பேச்ச வைத்தல்,
கலிலியோவில் *கப்பர் நகூமில்*  அதிகாரி மகனை குணமாக்குதலென
*ரட்சகனான மகிமை!*

 மரணத்திலிருந்த 
*நயினில்* விதவை மகன்,
ஜெய்ராசு மகன்,
நண்பன் லாசகு
ஆகியோரை உயிர்த்தெழச் செய்த *அடையாளமான மகிமை!*

பக்கவாதக்காரன் 
தொழிலாளிகளை 
தொட்டு குணப்படுத்திய 
*சக்தியான மருத்துவ மகிமை!*

*கானா*  திருமண விருந்தில் 
தண்ணீரை திராட்சை ரசமாக்கி 
ஐந்து அப்பங்கள்
இரண்டு மீன்களைக் கொண்டு 
5000 பேரின் பசியாற்றிய *விருந்தோம்பல்  மகிமை!*

ஆர்ப்பரித்த 
*கலிலியோ கடற் புயலை*  அமைதியாக்கி,
அலை மீதான நீர் மீது நடந்த 
நிகழ்வும் தந்து
*சாட்சியான மகிமை!*

யூதர் குலம் சிறப்புற 
*கல்வாரி மலையில்* சொற்பொழிவு,
முற்போக்கு பிரசங்கத்தால்
*முட்கிரீடம்* பரிசுடன்,
சீர்த்திருத்த அறிவுரையால் *சிலுவையில்* அறையப்பட்டு,
காட்டிக்கொடுத்த பகைவனுக்கும்
*மன்னிப்பை* அருளிய 
நன்னெஞ்சோடு,   
இறந்த மூன்றாம் நாளில் 
சாவினை வென்று 
*உயிர்த்தெழுந்த* 
இறைமாட்சி இயேசுவின் மகிமை
என்றும் இனிமையே!

முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி
வாலாஜாப்பேட்டை..

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE