புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
அன்புக் கவி விருது கவிதைப் போட்டி , அன்புக் கவி விருது கவிதைப் போட்டி , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

ஊனாகி உயிராகிய காதல்...! 041

09 பிப்ரவரி 2023 864 பார்வைகள்
ஊனாகி உயிராகிய காதல்...! 041

ஊனாகி உயிராகிய காதல்...

கட்டியணைத்து முத்தங் கொடுக்கவில்லை

காதலியே கற்கண்டே என்று  கொஞ்சவில்லை

நீயின்றி நானில்லை என்று வெண்பா பாடவில்லை 

ஓரவிழிப்பார்வையிலே ஓராயிரம் கவிதை வடிக்கவில்லை

பட்டும் பிளாட்டினமும் தந்தென்னை படபடக்க வைக்கவில்லை

என் வலியறிந்து எனக்கு ஆறுதல் சொன்னாய்!
களைப்பறிந்து கை கொடுத்தாய்!
என்ன செய்வேனோ என்று நான் கலங்கிய தருணம்  நான் இருக்கிறேன் என்று எனக்குத் தோள் கொடுத்தாய்!

காதலென்பது பாகாய் உருகி பனியாய் கரைவது மட்டுமல்ல -
வீழாமல் பற்றிக்கொள்வதும்
வீழ்ந்துவிட்டால் எழ கரம் கொடுப்பதுமே

#அன்புக்கவி
#vpr

- வாணிப்ரியா இரகுநந்தன்

  சிட்னி - ஆஸ்திரேலியா.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE