நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்
மகாத்மா காந்தி...
மகாத்மா காந்தி
அகிம்சை
இந்தியாவின்
ஓவியர் நீ!
ஆடம்பரம் களைந்து
கதர் ஆடை அணிந்த
துறவி நீ!
சத்தியசோதனை தந்த
ஞானி நீ!
உப்புசத்தியாகிரகம் செய்த சிற்பி நீ!
செய் அல்லது செத்து மடி என்ற
உரம் ஊட்டிய செம்மல் நீ!
வெள்ளையனே வெளியேறு என்ற
வெற்றி நாயகம் நீ!
வாய்மை போதித்த
வல்லவன் நீ!
தண்டி யாத்திரை செய்த தன்னலம் அற்ற மாமனிதன் நீ!
எளிமையின் நாயகன் நீ!
அமைதியின் விடியல் நீ!
சபர்மதி ஆசிரமம் தந்த சாதனையாளன் நீ!
உன் வாழ்வின்
ஒழிவு மறைவு அற்ற
திறந்த புத்தகம் நீ!
உண்மை மட்டுமே போதித்த
உத்தமன் நீ!
பள்ளி பருவத்திலேயே ஒழுக்கம் போதித்த
உயர்ந்தவன் நீ!
மொத்தத்தில்
எங்கள் மகாத்மா நீ!
-முனைவர். எட்.பிரியதர்ஷினி
உதவி பேராசிரியை,
வணிகவியல் துறை,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி),
ரஹ்மத் நகர்,
திருநெல்வேலி-627011