magizhchifm2020@gmail.com வியாழன், 19 November 2026
⚡ சமீபத்திய
நவம்பர் 19 – ஆண்கள் தினம் ! குழந்தைகளின் கனவுகளுக்கு கதை சொல்லும் பேராசிரியர் கார்த்திகா கவின் குமார்! நவம்பர் 16 தேசிய பத்திரிகை தினம் உண்மையின் குரலாக ஒலிக்க வேண்டிய ஊடகங்கள்! பார்போற்றும் பாவையர் பன்னாட்டு கருத்தரங்கில் கட்டுரை எழுதிய ஈரோடு பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தினத்தில் அமைச்சர் விஜய் பாலாஜி அவர்கள் பாராட்டு! பாரம்பரியத்தின் நாதமாக ஒலிக்கும் இளம் கலைஞர் விருதுநகர் தினேஷ் ! காலத்தால் அழியாத சித்திரக்கவிதைகளைக் காக்கும் நவீன காலப் புலவர் சித்திரக்கவி முனைவர் பீ. ரகமத் பீபி தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் நவம்பர் 19 – ஆண்கள் தினம் ! குழந்தைகளின் கனவுகளுக்கு கதை சொல்லும் பேராசிரியர் கார்த்திகா கவின் குமார்! நவம்பர் 16 தேசிய பத்திரிகை தினம் உண்மையின் குரலாக ஒலிக்க வேண்டிய ஊடகங்கள்! பார்போற்றும் பாவையர் பன்னாட்டு கருத்தரங்கில் கட்டுரை எழுதிய ஈரோடு பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தினத்தில் அமைச்சர் விஜய் பாலாஜி அவர்கள் பாராட்டு! பாரம்பரியத்தின் நாதமாக ஒலிக்கும் இளம் கலைஞர் விருதுநகர் தினேஷ் ! காலத்தால் அழியாத சித்திரக்கவிதைகளைக் காக்கும் நவீன காலப் புலவர் சித்திரக்கவி முனைவர் பீ. ரகமத் பீபி தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன்
தன்னம்பிக்கை கவிதை , நிகழ்வுகள், தன்னம்பிக்கை கவிதை , நிகழ்வுகள், நிகழ்வுகள்

சூப்பர் மூன் - ப்ளூ மூன்

30 ஆகஸ்ட் 2023 775 பார்வைகள்
சூப்பர் மூன் - ப்ளூ மூன்

சூப்பர் மூன் - ப்ளூ மூன்

ஆகஸ்ட் 30 - இன்று சூரியன் மறையும் போது, 2023 இன் மிகப்பெரிய மற்றும் பிரகாசமான நிலவு கிழக்கில் உதயமாகும். ஒரு சூப்பர் ப்ளூ மூன் என்பது - ப்ளூ மூன் மற்றும் சூப்பர் மூன் ஆகியவற்றை இணைக்கும் மிகவும் அரிதான வான நிகழ்வு ஆகும். நிலவு பூமியை நீள்வட்ட ( கோழி முட்டை போன்றது) பாதையில் சுற்றி வருகிறது. இதன் பொருள் அதன் சுற்றுப்பாதையின் போது அது பூமிக்கு அருகில் இருக்கும் போது அதன் புள்ளிகளை(பெரிஜி) மற்றும் அது தொலைவில் இருக்கும் போது அதன் புள்ளிகளை (அபோஜி) என்று  குறிப்பிடுகிறோம். ஒரு முழு நிலவு பெரிஜியின்  அருகில் வரும்போது    போது ஒரு சூப்பர் மூன் ஏற்படுகிறது,
(நீள் வட்டப்பாதையில் பூமியை நிலவு 4,05,696 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் நிலை - அப்போஜி - சூப்பர் ப்ளூ மூன் இன்று, 3,57,244 கிலோ மீட்டர் தூரத்தில் பூமியை வலம் வரப்போகிறது- பெரிஜி) இதனால் நிலவு 14% பெரியதாகவும் 30% பிரகாசமாகவும் தோன்றும்.
அது என்ன ப்ளூ மூன்:
ஆங்கிலத்தில் "ஒன்ஸ் இன் ஏ ப்ளூ மூன்" என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு அர்த்தம் எப்போதாவது அதிசயமாக ஒருமுறை வருவது. சாதாரணமாக உங்கள் நண்பரோ, உறவினரோ அடிக்கடி உங்களை சந்திக்காமல் இரண்டு மூன்று வருடம் கழித்து சந்திக்கும்போது இந்த பதத்தை பயன்படுத்தலாம். ப்ளூ மூன் என்பது வெறும் ஒரு சொல்லாடல்தான்.
பொதுவாக, ஒவ்வொரு மாதமும் ஒரே ஒரு முழு நிலவு மட்டுமே இருக்கும், நிலவின் சுழற்சியில் சுமார் 29.5 நாட்கள் இருக்கும், சூப்பர் மூன் தோராயமாக 2.7 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும்.
அதாவது ஒரே மாதத்தில் இரண்டு முறை முழு நிலவு - பௌர்ணமி வருவதை ப்ளூ மூன் என்று அழைக்கிறார்கள். இதனால் நிலவு நீல நிறமாக இருக்கிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்.
ஆகஸ்ட் 30-31 முழு நிலவு மாதத்தின் இரண்டாவது முழு நிலவு ஆகும். எனவே, இது நீல நிலவு ( ப்ளூமூன்) என்று அழைக்கப்படுகிறது. மேற்கூறிய இரண்டு நிகழ்வுகளையும் (பெரிஜியைச் சுற்றியுள்ள ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது முழு நிலவு) ஒருங்கிணைத்து, இன்றிரவு பார்க்கக்கூடிய சூப்பர் ப்ளூ மூன்னாக உள்ளது. இந்த மாதம் ஆகஸ்டு ஒன்றாம் தேதி முழு நிலவு தெரிந்தது, அதற்குப் பிறகு ஆகஸ்ட் 30 மீண்டும் முழு நிலவு தெரிகிறது. இந்த நிகழ்வை தான் ப்ளூ மூன் என்று குறிப்பிடுகிறார்கள்.
இருப்பினும், இந்த நிகழ்வை இன்னும் சிறப்பாக்கும் மற்றொரு விஷயம் உள்ளது. ஆகஸ்ட் 30 இரவு நீங்கள் நிலவைப் பார்க்கும்போது, ​​அதற்கு அருகில் ஒரு பிரகாசமான ஒளியைக் காண்பீர்கள். இது ஒரு நட்சத்திரம் அல்ல, அது அழகிய வளையத்தைக் கொண்ட சனி கிரகம். இரண்டு வான் பொருட்களும்  சில டிகிரி இடைவெளியில் இருக்கும். இன்று இரவு வானில் இந்த அற்புதமான காட்சியை பார்த்து  பரவசப்படுங்கள்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE