புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
தன்னம்பிக்கை கவிதை , தன்னம்பிக்கை கவிதை , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

தாய்...!

21 ஜனவரி 2023 592 பார்வைகள்
தாய்...!

தாய்
-----
தேவதை செதுக்கிய
சிற்பம் உன் வடிவாய்
உருப்பெற்று நின்றதுவே
வான் நிலா குளித்த நீர்
உன் உடலின் வெண்மை ஆனதுவே

கருவறை தோட்டத்தில்
விதை என்னை 
புதைத்து வைத்தாய்
உன் சத்தை உரிஞ்சி திண்ணும்
ஒட்டுண்ணி என்னை
உபசரித்து நீ வளர்த்தாய்

பத்துமாதம் உயிர்வதை 
செய்த என்னை
பக்குவமாய் பெற்றெடுத்தாய் 
சிறுசெடி வாடக்கூடாதென்று
பாலுணவு நீ தந்தாய்

மழை கண்ட
பாலைவனம் போல்
எனைக்கண்டு நீ மகிழ்ந்தாய்
வா மகனே என்று சொல்லி
மார்போடு அனைத்துக் கொண்டாய்

ஹஸன் எம் பஜீத்
இலங்கை

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE