இசை ஒளியின் தீபத்திலே என்றும் கரைந்து!
இசை ஒளியின் தீபத்திலே என்றும் கரைந்து!
என்றென்றும் ஒளியாய் மின்னும் பவதாரணிக்கு இரங்கற்பா கவிதை!
பவதாரிணி ,
தன் குயில் இசை மூச்சை நிறுத்திக் கொண்டாள்!
இளையராஜா இசை குடும்பத்தில் இளையவளே!
இனிய குயில் போன்ற குரலுக்கு சொந்தமானவளே!
அண்ணன் தம்பிக்கு இடையில் பிறந்த இனிய
பவதாரணி என்னும் இசைக்குயிலே!
இத் தமிழ் திரையுலகில் உன் பதிவுகள்
உன் பாதச் சுவடுகள் நடை பயணத்தால் தொடங்கியது!
நடந்து ஓடி முடியும் முன்னே உன் உருவம் காணாமல் பறந்தது !
இசை சோலையில் உன் குயில் ஓசை கேட்காது
தமிழ் பறவைகள் எல்லாம் கண்ணீர் வடிக்கிறது!
தமிழக பெண்கள் மனதில் தனியாக இடம்பிடித்த பவதாரணியே !
தனியாக தவிக்க விட்டு தரணியை விட்டு தனிமையில் பறந்து விட்டு!
உன் பாடலுக்காக இசைத்த இசை சுரங்கள் எல்லாம் கண்ணீர் வடிக்கிறது!
கவலை கொண்ட கானப்பறவைகள் எல்லாம் சிறகை விரிக்க மறுக்கிறதே!
பெற்றவளும் பெற்றவரும் விழிகளை
இழந்த உருவமாய் உயிரைப் பிரிந்த தேகமாய்!
பாச உறவுகளோ இரு கைகளும் கால்களும் இழந்த தேகமாய் !
அழும் நிலையானது!
நீ மண்ணை விட்டு பிரிந்தது! மாயமானதே!
கொடும்நோய்க்கு உன்உயிர்பறிபோனதே!
மண்ணுக்குள்மலரை புதைப்பதா!
தீயிலே இசையைஎரிப்பதா!
புலம்புகிறதுநெஞ்சம்!!
கவிதைமாணிக்கம்