வியாழன், 24 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
கவிதைகள்

பைந்தமிழ் பாவலன் பாரதி..! 027

26 நவம்பர் 2022 1,071 பார்வைகள்
பைந்தமிழ் பாவலன் பாரதி..! 027

பைந்தமிழ் பாவலன் பாரதி

தமிழ்த்தாயால் உயந்தவன்-பின்
தமிழ்த்தாயை உயர்த்தியே உருகியவன் !
அமிழ்தினும் தமிழை-நாளும்
அள்ளியே பருகியவன் !
அற்ப மூடங்களுக்கு - கவியெனும்
கொள்ளியை சொருகியவன் !
முத்தமிழ் கடலுக்குள் மூழ்கி
முதன்முதலாய்
புதுக்கவிதை எனும்
முத்தினை எடுத்த வித்தகன் !
கனல் தெறிக்கும் கவிகளால்
மடமையாம்
மாசுகளை ஈங்கு
மடிய செய்த மாசித்தன் !
தமிழ்த்தேனை உண்டு நாளும்
சிந்தனைகளை ஊற்றி சென்ற
செந்தமிழ்த்தேனி !
அறத்தையும் மறத்தையும்
அருந்தமிழால் உயர்த்தி நின்ற
புவியின் கவிஞானி !
பாப்பா பாட்டும் கண்ணன் பாட்டும்
பாஞ்சாலி சபதம் குயில்பாட்டும்
பக்திப்பாட்டும் சக்திப்பாட்டும்
படிக்கவே இன்பத்தை கூட்டும் !
ஞானப்பாட்டும் மாந்தருக்கு
ஞானத்தை ஊட்டும் !
தமிழ் செழிக்க
தமிழர் தலைநிமிர்ந்து நிற்க,
உயிப்புள்ள கவிகளை
உதிர்த்த நற்கவிஞன் !
தமிழ்நிலம் பெற்றெடுத்த
தன்மான தமிழ்மகன் !
பாரதியின் புகழ் பாடி நாளும் !
பரவசம் கொள்வோம் மேதினில் நாமும்...!!!

 கவிஞர் து.ரா.சங்கர்,
 கடலூர்

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE