magizhchifm2020@gmail.com திங்கள், 23 November 2026
⚡ சமீபத்திய
தென்காசியில் டிசம்பர் 5-ஆம் தேதி “YOUTH FACES OF INDIA இந்தியா இளைய முகங்கள்” சர்வதேசக் கருத்தரங்கம் மற்றும் உலக சாதனை முயற்சி! நவம்பர் 21 – உலகத் தொலைக்காட்சி நாள்! நபிகள் நாயகம் பன்னிரு பாடல் ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானாவின் படைப்பில் இலக்கிய நயம் நவம்பர் 19 – ஆண்கள் தினம் ! குழந்தைகளின் கனவுகளுக்கு கதை சொல்லும் பேராசிரியர் கார்த்திகா கவின் குமார்! நவம்பர் 16 தேசிய பத்திரிகை தினம் உண்மையின் குரலாக ஒலிக்க வேண்டிய ஊடகங்கள்! பார்போற்றும் பாவையர் பன்னாட்டு கருத்தரங்கில் கட்டுரை எழுதிய ஈரோடு பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தினத்தில் அமைச்சர் விஜய் பாலாஜி அவர்கள் பாராட்டு! பாரம்பரியத்தின் நாதமாக ஒலிக்கும் இளம் கலைஞர் விருதுநகர் தினேஷ் ! காலத்தால் அழியாத சித்திரக்கவிதைகளைக் காக்கும் நவீன காலப் புலவர் சித்திரக்கவி முனைவர் பீ. ரகமத் பீபி தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தென்காசியில் டிசம்பர் 5-ஆம் தேதி “YOUTH FACES OF INDIA இந்தியா இளைய முகங்கள்” சர்வதேசக் கருத்தரங்கம் மற்றும் உலக சாதனை முயற்சி! நவம்பர் 21 – உலகத் தொலைக்காட்சி நாள்! நபிகள் நாயகம் பன்னிரு பாடல் ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானாவின் படைப்பில் இலக்கிய நயம் நவம்பர் 19 – ஆண்கள் தினம் ! குழந்தைகளின் கனவுகளுக்கு கதை சொல்லும் பேராசிரியர் கார்த்திகா கவின் குமார்! நவம்பர் 16 தேசிய பத்திரிகை தினம் உண்மையின் குரலாக ஒலிக்க வேண்டிய ஊடகங்கள்! பார்போற்றும் பாவையர் பன்னாட்டு கருத்தரங்கில் கட்டுரை எழுதிய ஈரோடு பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தினத்தில் அமைச்சர் விஜய் பாலாஜி அவர்கள் பாராட்டு! பாரம்பரியத்தின் நாதமாக ஒலிக்கும் இளம் கலைஞர் விருதுநகர் தினேஷ் ! காலத்தால் அழியாத சித்திரக்கவிதைகளைக் காக்கும் நவீன காலப் புலவர் சித்திரக்கவி முனைவர் பீ. ரகமத் பீபி தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் !
நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

அதிசய மரங்கள்

21 செப்டம்பர் 2022 1,379 பார்வைகள்
அதிசய மரங்கள்

இயற்கையின் படைப்பில் அதிசயமான மரங்கள்..


பறந்த கிளியை/ஓடிய அணிலை
திரும்ப வைத்து *கலாமை* மகிழ்வித்த,
புல்லாகி பூடாய் புழுவாய் மரமாகி
எனும் *தேவாரப் பாடல்* வரியிலான,
மத்தமர் தாம் தெங்கு தனை மாறுவாரே
என்று *நீதிவெண்பாவில்* நின்ற,
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
என்றே *திருமந்திரம்* வார்த்தைகளாகி,
ராமன் ஓரம்பில் ஏழு மராமரத்தை
துளைத்து வலிமை நிரூபித்த சிறப்புகள் யாவும் *இராமாயணம்*
காதை தந்த இயற்கையின் அதிசயமான
 மரங்களாலே!

சங்கிலியாரை *சுந்தரர்* மணந்த
சுகந்மான மகிழ மரத்தடி,
*மாங்காடு அம்மன்* தவமிருந்த
மகத்துவம் நிறைந்த மாமரம் ,
திருவானைக்கால் *சக்தி* நீரால் லிங்கம்
பிரதிஷ்டை செய்த நாவல் மரத்தடி,
அஞ்ஞான வாசத்தில் *பாண்டவர்களின்*
போர்க்கருவி புகலிடமான வன்னிமரம்,
மதுக்கூரில் *ஸ்ரீகாளி* குடியிருக்கும்
ஒப்பில்லா வாழ்வு தரும் உடைமரம்,
*சிவசக்தி* சொரூபமாகி நாகம் புடைசூழ
காற்றிலுள்ள தூசு வட்டி நாகலிங்கமரம்,
*ருத்ர வழிபாடு* உணர்த்தும் இலுப்பை,
பிரம்மன்/சிவன்/*விஷ்ணு* வாசம்
செய்யும் /விநாயகன் வாச அரசமரம்,
திருஒத்தூர் கோயிலிலே பதிகத்தை
*சம்பந்தர்* பாட காய்த்து தள்ளிய பனை,
இத்தனையும் சரித்திரமானது இயற்கையின் அதிசயமான 
 மரங்கள் மகிமையே!

புத்தருக்கும்/திருமூலருக்கும் *ஞானம்* அருளிய அரச மரம்!
*நம்மாழ்வாருக்கு* ஞானப் பேரொளியான
புளியமரம்!
சுழி அளவும் துயரம் தராமல் 
நிழலோடு /நீண்ட ஆயுளையும் தரும்
விருட்சம்/தரு எனும் பெயரிலான
பிறப்பின் போது தொட்டிலாகி,
நடக்கும் போது நடைவண்டியாகி,
வாழும் போது கதவு/சன்னலுடன்
ஓலைக் குடிசையாகி,
பருவமெய்த பச்சைத் தடுக்காகி,
திருமணத்தில் அரசாணிக் 
கொம்புடன் பச்சைப் பந்தலாகி,
இறக்கும் போது பாடை/சவப்பெட்டியாகி
*மனித வாழ்வினை* அரவணைப்பதே
இயற்கை அன்னையின் வரமான  மரங்கள்!

முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி குணசேகரன்,
வாலாஜாப்பேட்டை..

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE