வியாழன், 24 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

அறிஞர் அண்ணா..! 039

11 செப்டம்பர் 2022 704 பார்வைகள்
அறிஞர் அண்ணா..! 039

அண்ணாவே மீண்டும் வந்திடுக

தமிழ் நாடெனப் பெயரைத்
தந்திட்ட தலைவரே!
கமழ்கின்ற கலைமணத்தை
கைவழியும் வாய்வழியும்
உமிழ்கின்ற ஆற்றலினை
உடைமை எனக் கொண்டவரே !
அழைகின்றோம் வந்திடுக !

மீண்டும் இங்கு நீ வந்தால்
மீண்டு வரும் நல்வாழ்வு ;
மூடப் பழக்கமெலாம்
பூண்டோடு அழிந்து பின்னர்
பூத்துவரும் நல்லுலகு !

எழுதுகின்ற  கோலதனை
எடுத்தே நீ பிடித்திட்டால்
அழுத பிள்ளை வாய்மூடும்
அப்படியே உருகி விடும்!

சொல்லேர் உழவன் என்றே
சோதி மிகப் பெற்றவரே!
வில் கொண்டே விளையாடும்
வீரர் குலக் கொழுந்தே !
தொல்லை துடைத்தருளத்
துரிதமாய் வந்திடுக !

பாராளுமன்றம் அதில்
பல்லறிஞர் முன்னிலையில்
சீரான சொல்லெடுத்து
சிறப்புறவே ஆங்கிலத்தில்
ஆராதனை புரிந்தீர் ;
அது கேட்க மீண்டும் உமைப்
பாரோர் அழைக் கின்றார் ;
பரிந்து ஒருநாள் வந்திடுக !

- சு.சுஷ்மிதா
 சாமியாபுரம் கூட்ரோடு,(கிராமம்),
பட்டுக்கோணாம்பட்டி (அஞ்சல்),
பாப்பிரெட்டிப்பட்டி (வட்டம்),
தருமபுரி (மாவட்டம்)
அஞ்சல் எண்: 636905 

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE