புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

ஒப்பற்ற மனிதர் அண்ணா..! 024

10 செப்டம்பர் 2022 639 பார்வைகள்
ஒப்பற்ற மனிதர் அண்ணா..! 024

ஒப்பற்ற மனிதர் அண்ணா...!

கடமை மூச்சென 
கொண்டவரோ இவர்

கண்ணியம் தவறா
உத்தமரோ இவர்

கட்டுபாடு வகுத்தத்
தலைவரோ இவர்

அறிஞர் அண்ணாயென்றே
அழைக்கப்பட்டாரோ இவர்

கல்வியில் சிறந்த
தலைமகனாய் என்றும்

செருக்கே இல்லாத
செம்மலாய் வாழ்ந்தவராம்

மொழிப் பலவும்
பேசிட அறிந்தாலும்

தமிழ் மொழியைப்
போற்றி வளர்த்தாராம்

திராவிடம் வளர்த்த
தங்கமகனாய்த் தமிழ்நாட்டிலே

மக்களுக்குப் பிடித்த
முதல்வராம் இவரே

கொண்ட கொள்கையில்
நிற்பாரே என்றும்

மக்களின் நலப்பணிக்
காப்பாரே அண்ணா

தமிழ்நாடு என்னும்
பெயரையே வைத்த

தன்னிகரில்லாத் தலைவரே
மக்களின் அண்ணா

பேச்சாற்றல் கொண்ட
பெருமகனாய் இருந்தாரே

மண்ணில் மறைவு
அவரின் உடலுக்கே

தமிழ் மக்களின்
மனதில் என்றென்றுமே

நிலைத்து நிற்கும்
அண்ணாவை வணங்குவோம்!..

மு.ரம்யாமுத்துபாபு

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE