வியாழன், 24 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

அண்ணா என்னும் அற்புதம்...! 031

10 செப்டம்பர் 2022 612 பார்வைகள்
அண்ணா என்னும்  அற்புதம்...!  031

அண்ணா என்னும் அற்புதம்

அறிஞர்கள் வரிசையில்
   அழகான நித்திலம்
அரசியல் வாழ்விலோ
   அற்புத சாசனம்
கஞ்சியின் இரத்தினம்
   காலத்தின் சரித்திரம்
தமிழகம் கண்டிட்ட
   தலையாய முதல்வராம்

ஆங்கிலத் துறையினில்
   ஆசானாய் ஒளிர்ந்து
அரசியல் முகமன்கள்
   கூறியே அழைத்திட
விரைந்ததே வைரம்
   விடியலைத் தந்திட
கடமையில் மிளிர்ந்தார்
   கண்ணியத் திலகமாய்

சிலேடையில் சிறந்தவர்
  சந்தமாய் சொலித்தவர்
மேடைகள் கண்டவர்
   மேதகு அறிஞர்
திரைப்படம் மூலமாய்
   தங்கமாய் நின்றவர்
படைப்பிலே சிறந்தவர்
   பண்பாடு மிக்கவர்

அண்ணாவின் பாதையில்
   அடிபற்றிச் சென்றவர்
வாழ்விலே உயர்வது
   திண்ணமாய் நின்றது
எத்தனை அறிஞர்கள் 
   வந்தாலும் என்ன
பேரறிஞர் என்றால்
   இவரின்றி உளரோ

சாதியம் ஒழிந்திட
   சமத்துவம் நிலைத்திட
ஆயுதம் ஆனவர்
   பகுதியாய் இவரே
இறந்தாலும் வாழ்வது
   இறைவனின் செயலே
வையகம் உளவரை
   மறவாது இவரை

வையகம் உளவரை
   மறவாது இவரை

- புவனா பிரகாஷ் 
கோவை.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE