அண்ணல் அம்பேத்கர் 010
அண்ணல் அம்பேத்கர் .
சட்ட மாமேதை என சட்டென கூறி சதுர சட்டத்திற்குள்
அடைத்து விட முடியாதவர்...
குற்றங்களை குறிபார்த்து
சட்டம் இயற்றியவர்...
கோணிப்பையை தூக்கிக் கொண்டு
கல்வி கற்க செல்ல வேண்டிய சூழ்நிலையிலும்
தன் மனம்
கோணாமல்
கல்வியை கற்ற
வெற்றித் திருமகனார்...
கல்வியின் துணைகொண்டு கயவர்களை
களை எடுத்தவர் ...
சாதிய வன்முறைக்கு சாட்டையடி கொடுத்தவர்...
அடக்குமுறை இவரை அடுத்தடுத்து துரத்தினாலும்
அதற்குள் அடங்காது அன்றாடம் ஏழை மக்களுக்காக
அரும்பாடு பட்டவர்...
பரோடாவின்
ராணுவ பதவியை துறந்து
சட்டத்திற்கு பட்டுக் குஞ்சம் வைத்திட லண்டனுக்கு பறந்தவர்..
பூத் நாயக் பத்திரிக்கையைத் தொடங்கி
பூலோகத்தின் நாயகன் ஆனவர்...
சவுதார் குளத்தை பொதுவுடமை ஆக்க தனது
சௌகரியங்களை எல்லாம் இழந்தவர்...
அவமானங்களை அம்மணமாக்கி ,
அவமானங்களை அடக்கி ,
அவமானங்களை அச்சுறுத்தி,
அவமானங்களை மென்று தின்று ,
விழுங்கி செரித்து ,
வெற்றி மகுடம் ஆக்கியவர் ...
புத்தகங்களின் வாசனையில்
புரண்டு புரண்டு புத்தியின்
துணை கொண்டு
புத்தத்தை தழுவியவர்...
" கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய் "
எ ன்ற தாரக மந்திரத்தை காலத்திற்கும் கற்றுக் கொடுத்தவர் ...
தமிழ்
மக்களின் தன்னிகரில்லா தலைவர்..
வாழ்க்கையே போராட்டமாக
இருந்த போதிலும் ,
வழக்குரைஞராக
ஆக வேண்டும்
என்ற கொள்கையை வலுவாக
பிடித்துக் கொண்டவர்..
சிறந்த போராளி ...
மொத்தத்தில்
மனித மகான் ..
அண்ணல் அம்பேத்கர் ..
எழுத்தாளர்
ஆ . சுதா
அரசு மருத்துவமனை அம்பாசமுத்திரம் .