புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
புதுமைப்பெண் விருது "பெண்மையை போற்றுவோம்" கட்டுரைப் போட்டி, புதுமைப்பெண் விருது "பெண்மையை போற்றுவோம்" கட்டுரைப் போட்டி, பெண்கள், பெண்கள், கவிதைகள்

அண்ணல் அம்பேத்கர் 039

03 ஏப்ரல் 2023 651 பார்வைகள்
அண்ணல் அம்பேத்கர் 039

அண்ணல் அம்பேத்கர் 

 மத்திய பிரதேசத்தில் பிறந்த மாணிக்கமே

 மக்களின் துயர துடைக்க வந்த தலைமகனே 

ஏழ்மை சூழலில் பிறந்த அண்ணலே

 ஏழை மக்கள் ஏற்றம் பெற பாடுபட்டவரே

 மேலைநாட்டுக் கல்வியில் சிறந்தவரே

 மேட்டுக்குடி அஞ்சும் அறிவுச்சுடரே

 சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரே

 சட்டங்களை கட்டமைக்க வழிவகை செய்தவரே

 சாதி மத பாகுபாடு ஏதுமின்றி

 சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று 

 சூளுரைத்து வெற்றிக்கொடி நாட்டி

நாட்டின் இறையாண்மைக்கு வித்திட்ட வித்தகரே

 இருட்டில் இருக்கும் ஏழைகள் வாழ்வில்

 ஒளி ஏற்ற தூண்டுகோலாக இருந்த மாவீரனே

 நீரிழிவு நோய் ஆட்கொண்டு கண்பார்வை 

மங்கிய போதும் உலகத்தின் பார்வையில் 

சுதந்திர இந்தியாவின் ஒளியை 

சுடர் விட்டு பிரகாசிக்க செய்த அண்ணலே.

- சு. நடராஜன் ,
சிவகிரி ,
ஈரோடு மாவட்டம்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE