புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
அறிவர் அம்பேத்கர் அறிவுச் சுடர் விருது கவிதைப் போட்டி , அறிவர் அம்பேத்கர் அறிவுச் சுடர் விருது கவிதைப் போட்டி , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

சட்ட மாமேதைக்கு சமர்ப்பணம்

13 ஏப்ரல் 2023 670 பார்வைகள்
சட்ட மாமேதைக்கு சமர்ப்பணம்

சட்ட மேதைக்கு சமர்ப்பணம் ...

மராட்டிய மாநிலத்தில் பிறந்த மாண்பு உள்ளவரே//

"ஜெய்பீம்" முழக்கத்தை உயிர்நாடியாக கொடுத்த அன்பரே //

எண்ணற்ற துன்பங்களையும் எண்ணில்லா இன்பங்களையும் பெற்றவரே //

கற்ற கல்வி யாரும் கல்லாத கல்வி //

அமெரிக்கா சென்று முதல் இந்தியனாக படித்தவரே //

குறுதிகள் அனைத்தும் சிவப்பு நிறத்திலே ஓடுகின்றனவே//

ஓடிவிடு தீண்டாமை எண்ணம் பேயே என்றவரே //

பொறுப்பேற்ற துறைகள் கூறுமே உன் திறனை //

தன் வாதத் திறத்தால் காந்தியையும் மாற்றியவரே //

விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானவரே//

குடிமக்களின் உரிமைக்காக பல சட்டங்களை எழுதியவரே//

வாசிப்பே நாள் முழுதும் உனது சுவாசிப்பானதே//

நூல்களை நேசித்து நேசித்து அறிவை பெருக்கியவரே //

பொருளாதாரத்தை பற்றிய புத்தகம் வழங்கிய அறிஞரே//

பௌத்த மதம் பின்பற்றி விளக்கம் கொடுத்தவரே //

எதற்கும் பயம் கொள்ளாத நெஞ்சம் படைத்தவரே //

இன்னல்களையும் அநீதிகளையும் வேரோடு அறுத்த நாயகனே //

பொ.ச.மகாலட்சுமி
கோவை

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE