புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
அறிவர் அம்பேத்கர் அறிவுச் சுடர் விருது கவிதைப் போட்டி , அறிவர் அம்பேத்கர் அறிவுச் சுடர் விருது கவிதைப் போட்டி , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

புரட்சி நாயகன் அம்பேத்கர் 044

06 ஏப்ரல் 2023 638 பார்வைகள்
புரட்சி நாயகன் அம்பேத்கர் 044

புரட்சி நாயகன் அம்பேத்கார் 

தன்னம்பிக்கையின் அடையாளம்  அண்ணல் அம்பேத்கர் //

அன்று அண்ணல் விதைத்த விதைகளே // 

இன்று வளர்ந்து நிற்கும் விருட்சமாய் // 

தன்னலம் இன்றி வாழ்ந்த அண்ணல்  இவர் // 

பொதுநலம் பேணிய இந்தியாவின் பொக்கிஷம் இவர் // 

பழுது படாத எண்ணங்களுக்கு சொந்தக்காரர் // 

பல விழுதுகளுக்கு அம்பேத்கரே மூலமாய் இருப்பவர் // 

கல்விக் கண் திறக்க கடைசிவரை போராடியவர்//
 
இனமானம் போற்றியதோடு தன்மானம்  காத்தவர் // 

தன்னம்பிக்கையின் அடையாளமாய் தரணி போற்ற வாழ்ந்தவர் // 

நடமாடும் பல்கலை கழகமாய் நகர்வலம் வந்தவர் // 

கண்ணயத்தோடு கம்பீரம் காட்டிய காந்தம் இவர் // 

மூன்றாம் தலைமுறையும் நினைவுகூறும் ஆளுமை இவர் //

ஏற்ற தாழ்வெனும் தடைகளை தாண்டி  தகர்த்தவர் //   

உலகமே வியந்து பார்க்கும் உன்னதம் இவர் // 

தடைகள் தாண்டி தீண்டாமை அழித்த தீச்சட்டி இவர் //

சமூக மாற்றத்திற்கான பாதைகள் அமைத்த மேதை இவர்// 

 வாழ்க தமிழ், வளர்க தமிழ்! 

வாழ்க வளமுடன், நன்றியுடன்!

 
 -வி.கணேஷ் பாபு,ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE