அடல் பிகாரி வாஜ்பாய்
அடல் பிஹாரி வாஜ்பாய்
பிறந்த தினம்
மக்கள் தலைவர்,
பொதுசேவையில் ஈடுபாடு,
நேருவின் காலத்திற்குப் பின்
இரண்டு முறை பதவியேற்ற
முதல் பாரதப் பிரதமர் ,
40 வருடங்கள் அரசியல் வாழ்வு,
மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்,
9 முறை மக்களவை
இரண்டு முறை மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட,
இந்தியாவில் உள்நாட்டு/வெளிநாட்டு கொள்கைகளை வடிவமைத்த
அடல் பிஹாரி வாஜ்பாயின்
ஜனன தினம்!
மாணவர் பருவத்திலேயே
அரசியல் வாழ்வு
1942 ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற
அரசியல்/அறிவியல்/சட்ட மாணவர்!
பத்திரிக்கையாளராகி, வெளியுறவுத்துறை அமைச்சர், நாடாளுமன்ற அவையில்
சீர்மிகு பதவி வகித்தவர்!
கவிஞர் /இசை ரசனையாளர் சமையல் கலை அறிந்தவர்!
25. 12 .1924இல்
மத்திய பிரதேச குவாலியரில், கிருஷ்ணா தேவிக்கும்
கிருஷ்ணா பிஹாரிக்கும்
மகனாக ஜனித்தவர்!
பெண்கள் முன்னேற்றம்
சமூக சமத்துவத்திற்கு
அயராது உழைத்தவர்!
இந்தியாவின் முன்னேற்றம்/வலு வளத்தில் நம்பிக்கை கொண்டவர்!
50 வருட காலம் தன்னலமற்ற
சமூக சேவை புரிய
சிறந்த நாடாளுமன்ற தலைவர் பட்டமும் /பத்மபூஷண் விருதும் மகுடமாகப் பெற்றவர்!
அடல் - பெயருக்கேற்ப சிறந்த தலைவர்/இலக்கியவாதி /ஆழமான அரசியல்வாதி/சொற்பொழிவாளர் தேச பற்றாளர் !
1980க்கு முன் ஜனசங்க கட்சி
1980 க்கு பின் பிஜேபி
விக்டோரியா /டிஏவி கல்லூரி படிப்பு ஹிந்தி/சமஸ்கிருதம் /ஆங்கிலம் மொழிகளில் தனித் தகுதி,
கான்பூரில் எம்.ஏ அரசியல் படிப்பு, அம்பேத்கர் மீது ஈடுபாடு
1947 ஆர் எஸ் எஸ் முகாமில்
முழு நேர ஊழியர் பணியாளர்!
1947 ல் பிரிவினை கலவரம் ஏற்பட சட்டப் படிப்பு தொடர இயலாமை, பஞ்சசானியா/ தீனியல் /உபாதியா பத்திரிக்கைகளில் பணி !
குஜராத், டெல்லி/மத்திய பிரதேசம் உத்தர பிரதேசம் தேர்ந்தெடுத்த
ஒரே தன்னலமற்ற அரசியல்வாதி!
1974ல் கச்சத்தீவினை
இலங்கைக்கு அளித்த போது கடுமையாக எதிர்ப்பு அளித்தவர்!
இமயம் முதல் குமரி வரை
*தங்க நாற்கர சாலை*
திட்டம் வகுத்தவர்!
*பொக்ரான் அணிகுண்டு*
சோதனை நடத்தி
உலக அரங்கில் இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த சாதனையாளர்!
அரசியலுக்கு அப்பாற்பட்ட நல்லுறவாளர்!
எதிர்க்கட்சித் தலைவர்களை ஈர்ப்பதில் சாதூரியமிக்கவர்!
டெல்லி நாடாளுமன்றம் மீது பாகிஸ்தான் 13 .12 .2001 ல்
தாக்குதல் நடத்திய போது
இரண்டு வருடங்கள் படைகளை எல்லை பகுதிகளில் நிறுத்தியவர்!
*காலுசோக்* பகுதியில்
23 பேர் பலி கண்ட தாக்குதலில் அதிரடியாக ராணுவ துணை கொண்டு பதற்றம் தவிர்த்தவர்!
2002 ல் குஜராத் மத கலவரத்தில் சமயோசிதமாக தீர்வு தந்தவர்!
நேருவுக்கு பின் இந்தியர்கள் ரசித்த இன்னொரு பிரதமர்!
கட்சி பேதமின்றி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதமர்! கலாபூர்வ ரசனை மிக்கவர்!
பனி புஷ்பங்கள் கவிதையில்
"பச்சை பசும்புல்லின் பனித்துளிகள் இதோ இப்போது இல்லை!
எப்போதும் நம்முடன் வரும் இனிமை சுகங்கள் வரும் தலைமுறைக்கு உந்துதல் ஆகும்!" என எழுதியவர்!
1999 இல் டெல்லி -லாகூர் இடையே பேருந்து வழித்தடம் தந்தவர்!
1994 இல் *விஜய் ஆபரேஷன்* என பெரு வெற்றி கொண்ட
*கார்கில் போர்* எனும் வீர சரித்திரமான தீர செயல் புரிந்தவர்!
1999இல் *காட்மண்டு* வில்
இந்தியன் ஐசி 814 ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட, பேச்சுவார்த்தையில்
தீவிரவாதி மசூத் அசாரை விடுதலை
செய்து சமூக தீர்வு கண்டவர்!
2000ல் உத்தரகாண்ட் /சத்தீஸ்கர், ஜார்கண்ட் என மூன்று மாநிலங்களை உருவாக்கி 25 ஆக இருந்த மாநிலங்களை 28 ஆக மாற்றியவர்!
"ஒரு நாள் நாட்டின் பிரதமர் ஆவார்!" என்ற நேருவின் வாக்கினை மெய்ப்பித்தவர்!
எல் கே அத்வானி/ பைரோன்சிங், ஷெகாபத் எனும் மூவரை
நீண்ட நாள் நண்பராகக் கொண்டவர்!
பத்தாவது இந்திய பிரதமர், நகைச்சுவை உணர்வு மிக்கவர்,
*பாரத ரத்னா** விருது வீட்டுக்கே சென்று அளிக்கப்பட்ட சிறப்பாளர்!
"வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது
நல்லாட்சி கண்ட நாடு இது!" என
உள்துறை அமைச்சர்
அமீத்ஷாவால் புகழப்பட்டவர்!
அன்பை மட்டுமே பிரதானமாகக் கொண்டு அன்பு காட்டியவரிடம்
நேசக்கரம் நீட்டியய,
நாற்கர சாலையால் சாலை விபத்துக்களை குறைத்த,
அடல் பிஹாரி வாஜ்பாயின்
பிறந்தநாளினை நினைந்து
மண்ணிலிருந்து விண்ணிற்கு
ஜனன தின வாழ்த்துக்களை
அகமகிழ பகிர்வோம்!
முனைவர் பெ. தமிழ்ச்செல்வி குணசேகரன்,
வாலாஜாபேட்டை .