செவ்வாய், 22 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
கட்டுரைகள், கட்டுரைகள், நிகழ்வுகள்

சிம்பொனி என்றால் என்ன ...? சிம்பொனி பற்றிய ஒரு விளக்கம்..

09 மார்ச் 2025 707 பார்வைகள்
சிம்பொனி என்றால் என்ன ...? சிம்பொனி பற்றிய ஒரு விளக்கம்..

சிம்பொனி என்றால் என்ன ...? சிம்பொனி பற்றிய ஒரு விளக்கம்

ஒரு கதை அல்லது சம்பவம் அல்லது நிகழ்ச்சியை இசை வடிவில் நான்கு பகுதிகளாக சொல்வதற்கு சிம்பொனி என்று அழைக்கப்படுகிறது. எளிமையாக சொல்லவேண்டுமானால், சிம்பொனி என்பது ஒரு ஆர்கஸ்ட்ரா (Orchestra) ஆகும்.

உலகில் பல வகையான ஆர்கஸ்ட்ரா உள்ளன, அதில் முக்கியமானவைகள்:

  1. சேம்பர் ஆர்கஸ்ட்ரா (Chamber Orchestra)
  2. சிம்பொனி ஆர்கஸ்ட்ரா (Symphony Orchestra)

16வது நூற்றாண்டு வரை இசை மற்றும் பாடல்கள் ஒருங்கிணைந்திருந்தன. அதாவது, இசையை தனியாக கேட்க முடியாது. இசையின் ஆழத்தை உணர்வதற்காக பாடல் இல்லாமல் இசையை மட்டும் கேட்கும் வகையில் சிம்பொனி உருவானது.

சிம்பொனியின் நிதானமான வடிவத்தை உருவாக்கி புகழ் பெற்றவர் ஜோசப் ஹைடன் (1732-1809), இவர் "Father of Symphony" என அழைக்கப்படுகிறார். மொசார்ட் மற்றும் பீத்தோவன் இருவருக்கும் இவர் குருநாதராவர்.

சிம்பொனி என்பது எப்போது என்று அழைக்கப்படுகிறது?

சிம்பொனி என்று அழைக்கப்படும் ஒரு இசை வடிவம் எப்போது உருவாகிறது? அதற்கு சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

  1. ஒரு சிம்பொனி குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் நீடிக்க வேண்டும்.
  2. சிம்பொனி இசைக்க 18 முதல் 24 வகையான இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட வேண்டும்.
  3. சிம்பொனியை 80 முதல் 120 இசைக்கலைஞர்கள் வரை ஒரு பெரிய அரங்கில் இசைக்க வேண்டும்.

இந்த அளவுகோல்கள் குறைவாக இருந்தால், அது சிம்பொனி என்று அழைக்கப்படாது. அப்போது அது சேம்பர் ஆர்கஸ்ட்ரா எனப் அழைக்கப்படும்.

ஏன் இவ்வளவு கட்டுப்பாடுகள்?

சிம்பொனி எவ்வாறு உருவாகும் என்பதைப் புரிந்துகொண்டு, இந்த கட்டுப்பாடுகளின் காரணத்தை விளக்க முடியும்.

சிம்பொனி நான்கு பகுதிகளாக அமைக்கப்படுகிறது. இவற்றின் அமைப்பை எவ்வாறு கொண்டுவருவது என்பதற்கான விளக்கத்தை, இங்கிலாந்து இளவரசியின் திருமணத்தை எடுத்துக் கொள்வோம்.

  1. The Fast Movement: திருமணம் காலை நேரத்தில் ஆரம்பமாகும். அப்போது துவக்க நிலை, உறவினர்கள், நண்பர்கள் மற்றும் விஐபிகள் திரண்டிருப்பார்கள். அந்த இடம் கோலாகலமாக இருக்கும். இதை ஒரு துள்ளலான இசை மூலம் பிரதிபலிக்க வேண்டும்.
  2. The Slow Movement: இப்போது அனைவரும் அரண்மனைக்குள் செட்டிலாகிவிட்டார்கள். மணமகன், மணமகள் திகழ்கிறார்கள். இப்போது இசையின் ஆழத்திற்கு செல்ல வேண்டும். இது அமைதியான, மென்மையானதாக இருக்கும்.
  3. The Dance Number: திருமணம் முடிந்து, கேளிக்கை நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கின்றன. அந்த இடம் ஆட்டம், பாட்டுடன் கொண்டாட்டமாக இருக்கும். இசை, நடனத்திற்கு ஏற்ற வகையில் அமைந்திருக்க வேண்டும்.
  4. An Impressive Fast Movement: இப்போது ஒரு அவதி நிலை உருவாகிறது; தீ பிடிக்கின்றது, அனைவரும் பதட்டமாக ஓடி விடுகிறார்கள். இதுவே சிம்பொனியின் உச்ச நிலையாக கருதப்படுகிறது. இங்கு இசையின் பரிசோதனைகள், விரிவுகள் இடம்பெறுகின்றன. இசையமைப்பாளர் தனது முழு திறமையையும் காட்டி சிம்பொனியை நிறைவு செய்யுகிறான்.

இந்த நான்கு பகுதிகளுக்காக 20 நிமிடங்கள் மற்றும் அதற்கு மேல் நேரம் தேவைப்படுகிறது. அதேபோல், எண்பதுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் தேவைப்படுகின்றனர்.

முக்கியமாக, சிம்பொனி இசையை ஸ்டுடியோவுக்குள் உருவாக்கி வெளியிடக்கூடாது. 80க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களுடன், ஒரு பெரிய அரங்கில் 20 நிமிடங்களுக்கும் மேலாக இசைக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் அது சிம்பொனி என்று கருதப்படும்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE