புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
சிறப்பு தினங்கள் கவிதை, சிறப்பு தினங்கள் கவிதை, நிகழ்வுகள், நிகழ்வுகள், நிகழ்வுகள்

நீங்களும் ஆகலாம் RJ ரேடியோ ஜாக்கி

31 ஆகஸ்ட் 2023 686 பார்வைகள்
நீங்களும் ஆகலாம் RJ ரேடியோ ஜாக்கி

நீங்களும் ஆகலாம் ரேடியோ ஜாக்கி... 

 மகிழ்ச்சி பண்பலை _ மூன்று ஆண்டுகாலமாக தமிழகத்திலிருந்து மிகவும் சிறப்பாக இயங்கி வருகிறது. குறிப்பிட்ட காலக்கட்டத்தில் உலகளவில் நேயர்களைக் கவர்ந்த இணைய வானொலியாகவும் திகழ்கிறது. அனைவரின் மனதையும் கவரும் வண்ணம் புத்தம்புதிய வித்தியாசமான நிகழ்ச்சிகளின் அணிவகுப்பு அனுதினமும் அரங்கேறுகிறது. 
 
           அனைத்து வயதினரும் விரும்பும் இனிமையான பாடல்களின் தொகுப்புகளோடு 24 மணிநேரமும் இயங்கி வரும் இனிமையான வானொலி. அதிகாலை 5 மணிமுதல் இரவு 12 மணிவரை மழலையர் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் ஆன்மீகம் முதல் அறுசுவை ,இலக்கியம் வரை பல்வேறு மனம் கவரும் நிகழ்ச்சிகளைத் திறமைமிகு தொகுப்பாளரகளைக் கொண்டு வழங்கிக் கொண்டிருக்கிறது. 

     இது தவிர, வாரத்தின் இறுதி நாட்களில் பிரபலங்களின் நேர்காணல், வரலாற்று சிறப்புமிக்க புதினங்கள், வருடத்தின் முக்கிய தினங்களில் அத்தினத்திற்குறிய சிறப்பு நிகழ்ச்சிகளும் ஒளிப்பரப்பப்படுகின்றன. 

        மேலும் தலைசிறந்த தலைவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு கவிதை மற்றும் கட்டுரை போட்டிகளை நடத்தி மின்சான்றிதழ்களையும் அளிக்கின்றது. அந்த கவிதைகள் மற்றும் கட்டுரைகளை "மகிழ்ச்சி இணையதளத்தில்" வெளியிட்டு எழுத்தாளர்களை ஊக்குவிக்கிறது. மேலும் நிறைய கவிஞர்களை உருவாக்கி அவர்களின் புத்தகங்களை வெளியிட்டு சிறந்த கவிஞர்கள், தொகுப்பாளர்கள் மற்றும் சமூக சேவகர்களுக்கான விருதுகளையும் அளித்து வருகிறது. இவை யாவும் எவ்வித  கட்டணமின்றி சேவை மனப்பான்மையோடு செய்து வருகிறது. 

       Rj ஆக வேண்டும் என்பது இப்போது இருக்கின்ற இளையத் தலைமுறையினர் நிறைய பேரின் கனவாக உள்ளது. சிலருக்கு நிறைவேறாத ஆசையாகவும் உள்ளது. Rj பயிற்சி மையங்களில் அளவிற்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுவதால்,  பொருளாதார வசதி காரணமாக பயிற்சி மையங்களில் கட்டணம் செலுத்திட இயலாத சூழ்நிலையில் அவர்களது Rj கனவு, கனவாகவேயுள்ளது. 

          மேலும், பண்பலை வானொலி நிலையங்களிலும் , அனுபவம் உள்ளவர்களுக்கு தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. எனவே இளையத் தலைமுறையினரின் Rj கனவு கனவாகவேத் தொடர்கிறது. அதேபோல், இல்லத்தரசிகள் திருமணமாவதற்கு முன்பு Rj வாகும் கனவோடு இருந்திருப்பார்கள். ஆனால் திருமணமான பின்பு குடும்ப சூழ்நிலை, பணிச்சுமை மற்றும் குழந்தை பராமரிப்பு காரணமாகவும் அவர்களின் Rj கனவும் கனவாகவே இருந்து விடுகிறது. 

       இப்படி Rj கனவை சுமந்து கொண்டிருக்கும் இளைய தலைமுறையினருக்கும் மற்றும் இல்லத்தரசிகளுக்கும் அவர்களின் கனவினை நனவாக்கும் வாய்ப்புக் களமாக  "மகிழ்ச்சி இணைய வானொலி"   விளங்குகிறது. ஊடகத்துறையில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் வாய்ந்த மகிழ்ச்சி பண்பலையின் நிர்வாக இயக்குனர் டாக்டர். மகேந்திரன் அவர்களும், வானொலி துறையில் அனுபவமிக்க நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் இதற்கான பயிற்சிகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்குகிறார்கள். இதற்கு, எந்தவித பயிற்சி கட்டணமும் இன்றி , திறமையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு Rj கனவை நனவாக்குகிறது. எந்தவித கட்டணமும் இன்றி சேவை மனப்பான்மையோடு பயிற்சியளித்து இணைய வானொலியில் தொகுப்பாளராக பணியாற்றும் நல்வாய்ப்புதனை வழங்குகிறது. 

          மகிழ்ச்சி வானொலி முழுக்க முழுக்க இளைய தலைமுறைகளின் திறமையைக் கொண்டு மக்களுக்கு பயன்தரக் கூடிய புதுமையான நிகழ்ச்சிகளை மட்டுமே வழங்கிக் கொண்டிருக்கிறது. மேலும் அரசின் நலத்திட்டங்களை மக்களுக்கு எளிய முறையில் சென்றடையும் விதமாகவும் நிகழ்ச்சிகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. 

       இதுபோன்று மகிழ்ச்சி பண்பலை  இணையத்தளத்திலும் இலக்கிய உலகில் சாதிக்கத் துடிப்பவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் விதமாக அவர்களது படைப்புகளை இணையத்தளத்தில் வெளியிட்டு  களம் அமைத்துத் தருகிறது. 

      மகிழ்ச்சி பண்பலையின் நிகழ்ச்சிகளை கேட்பதற்கு பிரத்தியேகமாக மொபைல் செயலி வாயிலாகவும், இணையத்தள வானொலிகளை கேட்பதற்கு என்று உருவாக்கப்பட்டுள்ள பல இணையத்தளங்களிலும் நிகழ்ச்சிகளைக் கேட்க முடியும். 

       தொகுப்பாளராக வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்துக் கொண்டிருக்கும் இளையத் தலைமுறையினர் மற்றும் இல்லத்தரசிகளும் மகிழ்ச்சி வானொலியோடு இணைந்து உங்களது  Rj கனவை நனவாக்கிக் கொள்ளுங்கள். 

       வித்தியாசமான நிகழ்ச்சிகளோடு இனிமையான பாடல்களையும் கேட்டு எப்போதும் மகிழ்ந்திருக்க மகிழ்ச்சி பண்பலை மறக்காமல் கேளுங்கள். 
மகிழ்ச்சி பண்பலை..
இது ஆனந்தத்தின் அலைவரிசை... 

மகிழ்ச்சி fm  ல் நிகழ்ச்சிகளை கேட்க playstore ல் மகிழ்ச்சி fm ஐ  download செய்துக் கொள்ளவும். 
www.magizhchifm.com. 

நீங்களும் ரேடியோ ஜாக்கியாக தொடர்பு கொள்ளுங்கள்.. 
      

நிர்வாக இயக்குநர், 
மகிழ்ச்சி பண்பலை. 
அலைபேசி எண் :  8838078388.
magizhchifm2020@gmail.com.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE