magizhchifm2020@gmail.com செவ்வாய், 24 November 2026
⚡ சமீபத்திய
இந்திய முகங்கள் ஆய்வுக் கட்டுரைகள் மிகப் பிரம்மாண்டமான 15 தொகுதிகள் புத்தகம் திருக்கார்த்திகை தீபத்திருநாள் இருள் நீங்கி ஒளி பிறக்கும் ஆன்மிகத் திருவிழா தென்காசியில் டிசம்பர் 5-ஆம் தேதி “YOUTH FACES OF INDIA இந்தியா இளைய முகங்கள்” சர்வதேசக் கருத்தரங்கம் மற்றும் உலக சாதனை முயற்சி! நவம்பர் 21 – உலகத் தொலைக்காட்சி நாள்! நபிகள் நாயகம் பன்னிரு பாடல் ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானாவின் படைப்பில் இலக்கிய நயம் நவம்பர் 19 – ஆண்கள் தினம் ! குழந்தைகளின் கனவுகளுக்கு கதை சொல்லும் பேராசிரியர் கார்த்திகா கவின் குமார்! நவம்பர் 16 தேசிய பத்திரிகை தினம் உண்மையின் குரலாக ஒலிக்க வேண்டிய ஊடகங்கள்! பார்போற்றும் பாவையர் பன்னாட்டு கருத்தரங்கில் கட்டுரை எழுதிய ஈரோடு பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தினத்தில் அமைச்சர் விஜய் பாலாஜி அவர்கள் பாராட்டு! பாரம்பரியத்தின் நாதமாக ஒலிக்கும் இளம் கலைஞர் விருதுநகர் தினேஷ் ! இந்திய முகங்கள் ஆய்வுக் கட்டுரைகள் மிகப் பிரம்மாண்டமான 15 தொகுதிகள் புத்தகம் திருக்கார்த்திகை தீபத்திருநாள் இருள் நீங்கி ஒளி பிறக்கும் ஆன்மிகத் திருவிழா தென்காசியில் டிசம்பர் 5-ஆம் தேதி “YOUTH FACES OF INDIA இந்தியா இளைய முகங்கள்” சர்வதேசக் கருத்தரங்கம் மற்றும் உலக சாதனை முயற்சி! நவம்பர் 21 – உலகத் தொலைக்காட்சி நாள்! நபிகள் நாயகம் பன்னிரு பாடல் ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானாவின் படைப்பில் இலக்கிய நயம் நவம்பர் 19 – ஆண்கள் தினம் ! குழந்தைகளின் கனவுகளுக்கு கதை சொல்லும் பேராசிரியர் கார்த்திகா கவின் குமார்! நவம்பர் 16 தேசிய பத்திரிகை தினம் உண்மையின் குரலாக ஒலிக்க வேண்டிய ஊடகங்கள்! பார்போற்றும் பாவையர் பன்னாட்டு கருத்தரங்கில் கட்டுரை எழுதிய ஈரோடு பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தினத்தில் அமைச்சர் விஜய் பாலாஜி அவர்கள் பாராட்டு! பாரம்பரியத்தின் நாதமாக ஒலிக்கும் இளம் கலைஞர் விருதுநகர் தினேஷ் !
தங்கேஸ் கவிதைகள் , நிகழ்வுகள், தங்கேஸ் கவிதைகள் , நிகழ்வுகள், கவிதைகள்

பிரியா விடை...

22 ஆகஸ்ட் 2022 2,242 பார்வைகள்
பிரியா விடை...

பிரியாவிடை...

பிரிவென்ற சொல்லிற்கு
அர்த்தம் தேடி அலைகின்றேன்
அது ஏனோ தெரியவில்லை
அகராதியிலுள்ள பொருளெல்லாம்
பொருந்தவேயில்லை எனக்கு...
எங்ஙனம் பொருந்தும்?...
யாக்கை மட்டுமே தனித்து தவித்திருக்கிறது
மனமோ நின் நினைவுகளை
மனனம் செய்துக் கொண்டிருக்கிறது....

அதீதமென்பது வெறும் சொல்லல்லவே
ஆழ்மனதை ஆக்கிரமித்து
துளையிட்டுச் செல்லும்
ஆலகால விடம்...
அதீதத்தின் ஆதியும் அந்தமும்
முடிவில்லா பிரிவில் தான்
நிறைவடையுமோ என்னவோ?...
பிரிய மனமின்றி பிரியாவிடையளித்து
முட்களின் படுக்கையில் முகம் புதைக்கிறேன்
உனை மறக்கவியலா தருணங்களில்....

சசிகலா திருமால்
கும்பகோணம்

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE