வியாழன், 24 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

புத்தாண்டே வருக..! வளங்கள் பெருக..!

01 ஜனவரி 2023 983 பார்வைகள்
புத்தாண்டே வருக..! வளங்கள் பெருக..!

புத்தாண்டே வருக, வளங்கள் பெருக...!

*பெருகிடும்* *வல்லமையை,*
*நித்தமும் தருக...!*

*தருகின்ற அமைதியோ,*
*தரணியில் நிலைத்திட...!*

*நிலைக்கின்ற நிம்மதியை,*
*நீயாகவே வழங்கிடு...!*

*வழங்கிடுவாய்*
*புதிய நல்ல*
*வாய்ப்புக்களை...!*

*வாய்ப்புகள் கைமீறாமல்,*
*காத்தருள் செய்திடு...!*

*செய்கின்ற செயலுக்கு,*
*ஆற்றலையே*
*அள்ளிக்கொடு...!*

*கொடுக்கின்ற நிலையினை,*
*அனைவருக்குமே*
*வரமாக்கிடு...!*

*வரமாக்கிய வளங்களை,*
*அபரிதமாய்*
*பெருக்கிடு...!*

*பெருகுகின்ற*
*மகத்துவத்தை,*
*பாங்காய் விதைத்திடு...!*


*விதைத்திட்ட பண்பாட்டை,*
*விழாமல் பாதுகாத்திடு...!*

*பாதுகாத்த*
*கலாச்சாரத்தை,*
*பக்குவமாய்*
*மீட்டெடு...!*

*மீட்டெடுத்த தமிழுணர்வை,*
*தயங்காமல் அவையேற்றிடு...!*

*அவையேற்றி அடியாளை ,*
*வையகத்தில் ஆளாக்கிடு...!*

*ஆளாக்கிடும் சூழ்நிலையை,*
*அனுதினமும்*
*உருவாக்கிடு...!*

*உருவாக்கியே*
*எம்மை,* *உயர்ந்திடவே*
*வாழ்த்திடு...!*

*வாழ்த்தி* *நல்ஆசியினை,*
*வாரியே வழங்கிடு...!*

*வழங்கிட*
*வருகின்ற,*
*வரலாற்று*
*நாயகியே...!*

*நாயகியே*
*இலக்கினை,*
*வென்றெடுக்க*
*விரும்பிவிடு...!*

*விரும்பிய*
*ஏக்கத்தை,*
*வீணாகாமல்*
*அடையவிடு...!*

*அடையவிடும்*
*பாக்கியத்தை,*
*அருளுகின்ற*
*புத்தாண்டே...!*


*புத்தாண்டே*
*உம்மை,*
*வணங்கியே*
*வரவேற்கின்றேன்...!*

*அன்பிற்கினிய எனது அனைத்து நல் உறவுகளுக்கும்...*

*ஆத்மார்த்தமான இனிய ஆங்கிலப்  புத்தாண்டு நல்வாழ்த்துகள்...!*


-முனைவர் ம.ப.சாந்தி சங்கரி, புதுச்சேரி.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE