கட்டுரைகள், கட்டுரைகள், கவிதைகள்
மனச்சலனம்
மாக்களெல்லாம் "மாரியாய்" மாறி
அன்பினை பொழிந்திட்ட போதிலும் கூட
மானுடங்கள் மட்டும் மறுக்கின்றதே...!
காயமதை ஏற்படுத்திடத்
துடிப்பதுவும் அதை ஏற்படுத்திக் கொள்வதிலும் கூட
மானிடா உனக்கு நிகர் நீயோ...!
சிந்தையதை சிதலமடையச் செய்வதோடு
உனை நீயே சிறையிட்டும் கொள்கிறாயே
நின் மனமென்னும் கடலிலிருந்து
"மனிதம்" அதை வெளிப்படுத்திட மட்டும்
மெளனம் தான் ஏனோ....?
த. முருகேஸ் அகிலாண்டபுரம்.