மகிழ்ச்சி FM ஜூலை 12, மகிழ்ச்சி Fm ஐந்தாம் ஆண்டு துவக்க விழாவைை முன்னிட்டு மகிழ்ச்சி செம்மல் விருது கவிதைப் போட்டி
மகிழ்ச்சி FM ஜூலை 12, மகிழ்ச்சி Fm ஐந்தாம் ஆண்டு துவக்க விழாவைை முன்னிட்டு மகிழ்ச்சி செம்மல் விருது கவிதைப் போட்டி
கவிதைப் போட்டி : மகிழ்வித்து மகிழ்
001. மகிழ்வித்து மகிழ்...
மழலைக்கு ஈந்திடுவார் பெற்றதாய் தாய்பாலை...
வளர்குழந்தை பெற்றிடுமே தந்தையால் நற்கல்வி..
பறவைகள் இனங்காத்து தேடியலைந்து உணவளிக்கும்..
விலங்குகள் சந்ததியைக் காத்திடவே அல்லலாகும்...
விதையது முளைத்திடவே நிலமதுவும் நெகிழ்ந்திடும்...
மலையது தலைவணங்கும், கருமேகம் மழைப்பொழிவே...
அருவியது பெருக்கெடுக்கும்; விளைநிலங்கள் வளம்பெறவே...
தாவரங்கள் இசைந்திடுமே நல்விதைகள் தந்தாங்கே...
விவசாயி மகிழ்வளிக்க அறுவடையின் திருநாளாய்...
பெருக்கெடுக்கும் ஆற்றலது, உருவாகும் உழைப்பினிலே...
பசிபோக்கும் நல்லுள்ளம், விருந்தளிப்பில் மனமுவந்தே...
நோய்கள் போக்கிடவே நன்மருந்தாய் பயனாகும்...
சுரக்கின்ற அன்பதனால்,மறந்திடுமே வேதனைகள்..
கரக்கின்ற பாலதனால்,பிணிமறைந்து நற்பயனாம்..
சுகங்கள் பெருகிடவே, உறவுக்கரம் நீள்வதிலே...
இல்லாமை ஒழிந்திடவே,இருப்பவரின் கொடைக்கரங்கள்...
மகிழ்வித்து மகிழ்தலிலே,பெருமின்பம் பேரின்பம்...
உண்டதிவ்வுலகு கொடுக்கலிலும் பெறுதலிலும் ஓடிடுமே...
சா.சையத் முகமது
கிருட்டிணகிரி
002. மகிழ்வித்து மகிழ்
பூக்கள் தேனீக்களுக்கு தேனைக் கொடுப்பதில்
மகிழ்ச்சி அடைகின்றன..
தேனீக்கள் பூக்களிலிருந்து தேனை எடுப்பதில்
மகிழ்ச்சி அடைகின்றன..
தேனீக்கு பூவே உயிர் வாழ உதவும் ஆதாரமாகும்..
பூவுக்கு தேனீதான் அன்பைப் பறிமாற
உதவிக்கொள்ளும் சேவகன் ஆகும்..
பூவுக்கும் தேனீக்கும் கொடுப்பதிலும் பெறுவதிலும்
முறையே மகிழ்ச்சிைத் தருகின்றன..
மக்கள் கொடுப்பதிலும் பெறுவதிலும்
இந்த பூவைப் போலவும் தேனியைப் போலவும்
மகிழ்ச்சி அடைய வேண்டும்
ந. வெங்கடேசன்
சேலம்
003. மகிழ்வித்து மகிழ்
அன்பான சொற்கள் பேசி
பிறரை மகிழ்வித்து மகிழ்
ஆசையான பாசம் காட்டி
பிறரை மகிழ்வித்து மகிழ்
இன்பமான வார்த்தை கூறி
பிறரை மகிழ்வித்து மகிழ்
ஈகை குணம் கொண்டு
பிறரை மகிழ்வித்து மகிழ்
உண்மையான அன்பு காட்டி
பிறரை மகிழ்வித்து மகிழ்
ஊக்க சொற்கள் கூறி
பிறரை மகிழ்வித்து மகிழ்
என்றும் நல்ல வழி காட்டி
பிறரை மகிழ்வித்து மகிழ்
ஏற்றம் பிறருக்கு தந்து
பிறரை மகிழ்வித்து மகிழ்
ஐயம் களைந்து நிரந்தரமாக
பிறரை மகிழ்வித்து மகிழ்
ஒற்றுமையாக செயல் பட்டு
பிறரை மகிழ்வித்து மகிழ்
ஓடம் போல் நீரில் ஓடி
பிறரை மகிழ்வித்து மகிழ்
ஔஷதம் போல் அன்பு காட்டி
பிறரை மகிழ்வித்து மகிழ்
மொத்தத்தில் மனதை கொள்ளை கொண்டு
பிறரை மகிழ்வித்து மகிழ்
S .உமா
திருப்பூர்
004. மகிழ்வித்து மகிழ்!
அன்பே கடவுள் சான்றோர் வாக்கு!!!
எளியவருக்கு உதவுதல் கடமை ஆகும்!!!
ஏழைகளை ஏளனம் செய்தல் கூடாது!!!
இயன்றவரை இல்லாதாருக்கு உதவ வேண்டும்!!!
ஏங்குபவருக்கு ஆறுதல் தருதல் வேண்டும்!!!
பிறருக்குக் கொடுப்பதே வாழ்வின் இலக்காகும்!!!
வறுமையாளருக்கு உதவத்தான் பொருள் தேடுகிறோம்!!!
வயதானவரை சிரிக்க வைத்துப் பாருங்கள்!!!
குழந்தை போல கருணையோடு இருங்கள்!!!
கருணை உடையோர் கடவுளின் குழந்தைகள்!!!
அன்பான சொற்களை சோர்ந்தவரிடம் பேசுங்கள்!!!
கீழானவரிடம் தயை காட்டி வாழுங்கள்!!!
குடுத்து கொடுத்து வள்ளலாக மாறுங்கள்!!!
எளியவரின் வாழ்த்தே உங்களை உயர்த்தும்!!!
உற்சாகமான வார்த்தைகளை பேசி மகிழ்வியுங்கள்!!!
இரக்கம் உடையவரே இறைவன் வாரிசுகள்!
முனைவர் பீ.ரகமத் பீபி,ஆத்தூர்.
005. மகிழ்ச்சி மகிழ்வித்து மகிழ்...
ஐந்து வருடங்கள் சிரிப்பு மலர,
மகிழ்ச்சி Fm மலர்ந்தது பூவாய்,
இசை ரசிகர்கள் மனம் கவர்ந்திட,
இனிமை பாடல்கள் இசைத்தது ஓங்கி.
கேட்டோர் மனம் மகிழ்ச்சியில் திளைத்திட,
கவலைகள் எல்லாம் காற்றில் மறைந்திட,
பாடகர்கள் குரல் தேனாய் ஒலித்திட,
மகிழ்ச்சி Fm புகழ் ஓங்கி உயர்ந்திட.
செய்திகள், தகவல்கள் சேர்த்து தந்திட,
விழிப்புணர்வு விதைத்திட ஓங்கி,
மக்கள் நலம் பேணி வளர்த்திட,
மகிழ்ச்சி Fm சேவை தொடர்ந்து வளர்ந்திட.
ஐந்தாம் ஆண்டு விழா கொண்டாடுவோம்,
மகிழ்ச்சி Fmமை வாழ்த்திடுவோம்,
இன்னும் பல ஆண்டுகள் சிறந்து விளங்க,
மகிழ்ச்சியுடன் பாடுவோம் பாடல்கள்.
திருமதி. க. பிரியா,
உதவிப் பேராசிரியர், நிர்மலா மகளிர் கல்லூரி,
கோயம்புத்தூர்.
006. மகிழ்வித்து மகிழ்
வாழ்க்கை வாழ்வதற்கே வாழ்ந்துப் பார்த்திடலாம்
ஆனந்தமாக அற்புதமாக அளவில்லை அதற்கு
இயற்கையை ரசித்தல் இதுவொரு மகிழ்ச்சி
உறவும் நட்போடும் உல்லாசப் பயணமும்
உற்சாகம் தருமே கற்ற நூல்களை
பகிர்தலும் சிறப்பே அதுவும் ஆனந்தமே
உணவை அனைவரும் ரசித்துப் பங்கிட்டு
உண்ணுதல் மகிழ்ச்சி கூடுதல் ருசியோடு.
தனித்து மகிழ்ச்சியை கொண்டாடுவது இயலுமா?
தானும் மகிழ்ந்து மற்றவரையும் மகிழ்விக்கலாமே.
ஆனந்தம் என்பதே கூடிக் களித்தலே
இரட்டிப்பு ஆகுமே இதயங்கள் இணைந்தால்
மகிழ்ச்சி தொற்றுநோயே பற்றிக் கொள்ளுமே
சுற்றிச்சுற்றி வருமே சுகங்களைத் தருமே
அடுத்தவர் மனதை நாமும் மகிழ்ச்சியாக்கலாம்
தன்னம்பிக்கை வார்த்தைகளாலும்
உற்சாக எண்ணங்களாலுமே.
அறிவோ ஆடம்பரமோ எதுவும் தேவையில்லை
அன்பும் அக்கறையும் மகிழ்ச்சிக்குப் போதுமே.
தி.மீரா
ஈரோடு
007. "மகிழ்வித்து மகிழ்!"
'அ'ன்புகொண்டு அறம்செய்து மகிழ்வித்து மகிழ்!
'ஆ'பத்தெனில் ஆதரவு தந்தென்றும் திகழ்!!
'இ'ல்லார்க்குஇல்லையெ னச் சொல்லாது நிகழ்!
'ஈ'கின்ற பண்புதான் ஈடற்ற புகழ்!!
'உ'ண்மையையே மறைக்கும் உலுத்தரை உமிழ்!
'ஊ'ருக்கு உதவுகின்ற பேர்கள் தான் சிமிழ்!!
'எ'ல்லாரும் எல்லாமும் பெறாவிடில் பிழை!
'ஏ'ற்றமுடன் மகிழ்வித்து மகிழ்ந்திடவே உழை!!
'ஐ'ஸ்வரியம் என்பதுவே பெற்றோருடன் இருப்பு!
'ஒ'ற்றுமையாய் வாழ்வதுவே குடும்பத்தார் பொறுப்பு!!
'ஓ'தலுக்கு உதவுதலே உலகினில் சிறப்பு!
'ஔ'டதமாய் மகிழ்வித்து மகிழ்ந்திடவே மதிப்பு!!
உற்றமுடன், சுற்றமுடன், உடன்படுதல் நலம்!
கற்றவரும், மற்றவரும், உடன் இருத்தல் பலம்!!
பற்றற்ற உறவை விட நட்பு தான் வளம்!
சற்றேனும் மகிழ்வித்து மகிழ்தலே சுகம்!!
குற்றமின்றிப் பழி சொல்லல் தேவையில்லாத் துகள்!
பெற்றவர்கள் மனம்மகிழ மகிழ்வித்து மகிழ்!!
கவிஞர். எஸ் ராம கிருஷ்ணன்.
சிறுமுகை
008. மகிழ்வித்து மகிழ்
தீமையோ நன்மையோ எதுவானாலும் பிறரால்
நமக்கு வந்து விடப் போவதில்லை
நடப்பது எதுவானாலும் காரணம் நீங்களே
எதுவுமே நம்மை மீறி நடப்பதில்லை
நல்லது செய்தால் நன்மை நிகழும்
தீமை செய்தால் தீயது நிகழும்
ஒரு செயலின் நிகழ்வு நம்மை
நிழல் போலத் தொடரும் எனவே
நல்லதையே செய் நன்மை பிறக்கும்
நம் எண்ணம் தான் செயலாகும்
நாம் விதைக்கும் விதைத்தான் விருட்சமாகும்
நீ என்ன நினைக்கிறாயோ அதுவே
உனக்குத் திருப்பக் கிடைக்கும் என்பதை
மனதில் கொண்டு செயல் படு
தீதும் நன்றும் பிறர் தர
வாரா என்பதை நினைவில் கொண்டு
பிறரை மகிழ்வித்து பார் உன்னை
மகிழ்விக்கப் பலர் இருப்பார் எப்போதும்
மகிழ்ச்சி என்பது உன்னிடத்தில் உள்ளது
எதை விதைக்கிறாயோ அதுவே கிடைக்கும்
எல்லோரையும் எப்போதும் மகிழ்வித்து மகிழ்
இர.உஷாநந்தினி சதீஸ்குமார்
கோவை
009. மகிழ்வித்து மகிழ்
தன்னுயிரே போனாலும் தன்னம்பிக்கையுடன் போராடிடு
சாதிக்கப் பிறந்தவன் சரித்திரத்தில் துணிந்திடு
பிறரின் சொல்லுக்கு மதிப்பை கொடுத்திடு
தூய்மையும் வலிமையும் தனியொருவனாக நிலைத்திடு
வளமான வாழ்க்கைப் பயணத்தில் விழித்திடு
நற்சிந்தனை எண்ணங்களை தடயமாக பதித்திடு
வாழ்வில் நீண்டதூரம் தாண்டி உயர்ந்திடு
புரிந்து புத்துணர்வுடன் கவனமாக ஓடிடு
தனக்கென தனிப்பாதையை நாளும் வகுத்திடு
இளைஞர்களுடன் நம்பிக்கை தடயத்தை விதைத்திடு
திறமை,பொறுமை, விடாமுயற்சி கொண்டுடு
சுமைகளை சுகமாக ஏற்று சுமந்திடு
விரும்பிய ஒன்றை பெற்றிட உழைத்திடு
எவரையும் குறை சொல்லாது வாழ்ந்திடு
தடைகளை தகர்த்து வெற்றிகளை குவித்திடு
துன்பங்களை துடைத்திட பயங்களை துரத்திடு
தூய்மையான இதயத்தில் இறைவனை துதித்திடு
தன்னலம் கருதாது சேவையை தொடர்ந்திடு
கொள்கையில் எப்போதும் மனயுறுதி பெற்றிடு
தானும் பிறரையும் மகிழ்ச்சியோடு மகிழ்வித்திடு
முனைவர் எ.செந்தில் வெங்கடாசலம்,
இடைநிலை ஆசிரியர்,
ஊ.ஒ.தொ.பள்ளி,
ஜேடர்பாளையம், நாமக்கல் மாவட்டம்.
010. மகிழ்வித்து மகிழ்.
அன்னை இடத்து அன்பு காட்டி மகிழ்வித்துடு-
உயிர் உள்ளவரை பாதுகாப்பேன் என்று
உலகுக்கு உன்னை கொண்டு வந்த தந்தையை
மகிழ்வித்துடு- என்றும் உங்களுக்கு துனண என்று.
குருவை மகிழ்வித்துடு-
சமுதாயத்தில் நல்லவனாக இருப்பேன் என்று
சகோதரியை மகிழ்வித்துடு-
பாசத்துக்கு நான் அடிமை என்று.
சகோதரை மகிழ்வித்துடு-
இன்னொரு கை நான் உனக்கு என்று.
மனைவியை மகிழ்வித்துடு-
உனக்கு கண்ணின் இமை நான் என்று.
குழந்தைகளை மகிழ்வித்துடு-
உங்கள் வாழ்வின் ஒளிஏற்றுவேன் என்று.
நண்பனை மகிழ்வித்துடு-
உனது துன்பத்தில் துனண நான் என்று.
உற்றார்,உறவினரை மகிழ்வித்துடு-
இன்ப,துன்பங்களில் பங்கு எடுப்பேன் என்று.
இப்படி அனைவரையும் மகிழ்வித்து,
உலகில் பிறந்ததின் பலனைபெற்று
மகிழ்வித்து மகிழ்.....
A.VIJAYARAJ
Kavinaya Educational training center.
Madukkarai(post)
Coimbatore-641105.
011. மகிழ்வித்து வாழ்!
முதலில் நாம் மகிழ்ச்சி அடைய
இதழில் புன்னகை விரிக்க வேண்டும்!
இதயம் அன்பால் இனிதாய் நிறைய...
உதயமாகும் வாழ்வில் மகிழ்ச்சி ஞாயிறே!
மனதில் நல்லெண்ணங்கள் வடிவம் கொள்ளட்டும்!
கனவுகளெல்லாம் உதவிடும் ஏக்கம் நிறையட்டும்!
எனதெனும் சுயநலம் எங்கோ மறையட்டும்!
சினமெனும் மாயை சாயம் வெளுக்கட்டும்!
பிறருக்காக வாழ்வதிலேயோர் அர்த்தம் விளங்கிடும்!
உறவுக்காக ஏங்கிடும்.... உலகம் புரிந்திடும்!
அறமெனும் தீதில்லாச் செயல்கள் மிகுந்திடும்!
துறந்திடும் ஆசையால் துன்பமே குறைந்திடும்! 12
நல்லதே நினைத்து நன்மைகள் செய்ய...
வெல்லமாய் மகிழ்ச்சி வெகுவாய்ப் பரவிடும்!
முல்லையாய் வாழ்வும் வாசம் வீசிடும்!
நல்லறம் இதுவே... மகிழ்வித்து வாழ்!
பூக்களைப் போலே பூக்கட்டும் மனமும்!
நாக்கினில் இன்மொழி நிறையட்டும் தினமும்!
முனைவர் கிருட்டிணதிலகா .
போரூர் .சென்னை.
012. எதில் மகிழ....
தள்ளாடும் கொடிக்கு ஒரு கொம்பு....
வாடுகின்ற செடிக்கு கொஞ்சம் தண்ணீர்,.
அழுகின்ற பேருக்கு ஆறுதலாக ஒரு வார்த்தை...
கீழ் விழுந்தவரை தூக்கி விட ஒரு கை...
இப்படித்தான் இருக்க வேண்டும் மகிழ்ச்சி..
வானில் இருந்து என்ன பயன்
மண்செழிக்க கரைந்து போகிறது கார்மேகம்....
மொட்டாக இருந்து என்ன பயன்,
கிட்டட்டும் தேன் வண்டுக்கு என்று மலர்ந்து
மகழ்கிறது மலர் கூட்டம்....
ஓரிடம் நின்று என்ன பயன்
வாழட்டும் ஊர் என ஓடிக்கொண்டிருக்கிறது அழகு நதி....
பறவைக்கு இடம் தந்து பரவசம் பொழிகிறது மரம்...
மரத்திற்கு இடம் தந்து மாட்சி கொள்கிறது நிலம்...
இயற்கையின் இயல்பே கொடுத்து மகிழ்வித்து மகிழ்தல்தான்..
நமக்கு மட்டும் ஏன் எடுப்பதில் ஏற்பதில்....????
இயல்புக்கு திரும்புவோம்... மகிழ்வித்து மகிழ்வோம் ..
நா.அருணா
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
போத்தாபுரம்,
காவேரிப்பட்டினம்
013. மகிழ்வித்து வாழ்
கடந்த வாரம் வெளியூர் பயணம்
என்னைக் காணாது காலாவதியாகி பூக்களெல்லாம்
துணையெனை காணாது துவண்டு போயின
தொட்டவுடன் துவண்டு மடியில் விழுந்தன.....
இதழ்களை மூடிக் கொண்டு விரிக்க மறந்தன....
மலர்ந்த மலர்கள் எல்லாம் மனதை கவர்ந்தன
உதிர்ந்த மலர்கள் எல்லாம்
உள்ளத்தை உருக்குலைத்தன
பாதம் படாத பாதைகளெல்லாம் புற்கள் முளைத்தன...
பாதம் பட்டதும் புற்க்கள் முறைத்தன....
வேர்கள் எல்லாம் என்னை காணாது வெம்பி துடித்தன......
மண்ணில் விரிசல் விட்டு...
என் விழிகளில் கண்ணீர் துளிர்த்தன.....
மழை வந்த காரணம் மகன் சொன்னான்
ஆயிரம் தான் பால் இருந்தாலும் தாய்ப்பாலுக்கு ஈடாகுமா.....
நீர் ஊற்றி முடித்தேன் சேறுறித்திளைத்தன
வாயூறி மகிழ்ந்தன....
பூக்கள் மட்டுமல்ல இலைகளும் சருகாகி
உலர்ந்து உதிர்ந்தன.....
உடல் மெலிந்தன பராமரிப்பு இல்லாவிட்டால்
பாவம் செடிகள் மட்டுமல்ல.....
புற்கள் மட்டும் புலம்பிக் கொண்டிருந்தன
என் பாதம் பட்ட பாவம் பட்டுப் போவோம் என்று
வண்டுகள் பல வலம் வந்தாலும்
வாசம் வீசினாலும் நேசம் கொண்டவன்
நெருங்க வில்லை என்றால்
வாடிப் போகும் பூக்களெல்லாம்....
தினமும் தரிசனம் தீஞ்சுவை காதலில்
அதுவே கரிசனம் தேன் சுவை தேடலில்
காதல் கொள்வீர் இயற்கை மீது
காலத்தை வெல்வீர் ஈடு ஏது
என் கைபிடித்து உடன்வர கால்கள்
இல்லையே என்று கண்ணீர் விட்டன மரங்கள்......
வேர் பிடித்து நின்றதால் வேறு இடம் பிரழ முடியவில்லை
கார் மழை பொய்த்துப் போகும்
உன் கைப்பிடி நீர் மெய்யாகும்...
யார் ஊற்றினாலும் தீரவில்லை தாகம்
நீ நீரூற்றிடு அதுவே நிம்மதி ஆகும்
அசைந்தாடும் பூக்களை அள்ளி
அணைத்துக் கொண்டேன் இசைந்து என்னுடன்
இணைந்தது அதன் தாகம் தணிந்தது.....
வேறு இடம் போக மாட்டேன்
வேர் நீ இருக்க கிளைபரப்பி அழைக்க வேண்டாம்
இலை உதிர்ந்து நசிய வேண்டாம்...
இணையாக நான் இருப்பேன்
உன் துணையாக நான் இருப்பேன்.....
பிணையாக நான் இருப்பேன்....
இயற்கையுடன் பிரியாத காதலாலே.....
மகிழ்வித்து வாழ் என்றென்றும்!!!
கவித்தேடல் மு. மொய்தீன்
வடசென்னை
014. மகிழ்வித்து மகிழ்
அவை நிறைந்த இடந்தனிலே நல்ல/
அறிவுள்ள சொற்களை ஆராய்ந்து தெளிவுடன்/
அழகுடனே பேசத் தெரிந்திருக்க வேண்டுமே/
அச்சொற்களில் தூய்மையாக விளங்கிடல் வேண்டுமே/
எண்ணியச் சொற்கள் பல இருப்பினும்/
ஏற்றமுள்ள தமிழ்க் களஞ்சிய முத்தாம்/
மாற்றம் உருவாக்கும் கன்னித் தமிழை/
மறக்காமல் ஆராய்ந்து பேசிடல் நலமாகுமே/
வார்த்தையை நாம் சிதறி விடலாம்/
வார்த்தைதனை அள்ள இயலாது என்பதை/
உணர்ந்திடு மானுடா உள்ளன்புடனே உண்மையாக/
உரைப்பது கேட்போரை வியக்க வைத்திடுமே/
மகிழ்வானப் பாதை உருவாக்கி நாளும்/
மகத்தான புன்னகை பரிசளித்து அகத்தில்/
நேசமுடன் பழகி அனைவரையும் மகிழ்வித்து/
நேயமுடன் அன்பை விதைத்து மகிழ்வோம்/
கவிஞர் முனைவர் செ.ஆயிஷா
பல்லடம்
015. மகிழ்வித்து மகிழ்
அனைவரையும் ஒன்றாக காண்//
ஆற்றல் எல்லாமே ஆயுதமாய் காண்//
இறையை யாவும் உள்ளத்தில் காண்//
ஈன்றடெடுத்த அன்னையாய் பிற உயிர்களித்தில் அன்பை விதை//
உழைத்து வாழ் உணவளித்து உண்//
ஊக்கமாய் நின்று ஊக்கத்தை ஏற்படுத்தி நில்//
எண்ணியதே எண்ணிய நேரத்தில் செய்திடவே//
ஏற்றமிகு வாழ்வை வாழ்வோமே//
ஐயங்களை களைந்து ஆர்வத்துடன் நின்று கைகள் கோர்த்து
நாமும் மகிழ நம்மருகில் இருப்போர் மகிழ வாழ்வோம்//
ஒற்றுமையுடன் வாழ உறவுகளாய் மாற்றிட//
ஓங்கி வளரும் முயற்சியில் ஊன்றுகோலாய் நின்றிட//
பிறரின் புன்னகையே
நம் மகிழ்ச்சி ....
திருமதி.ஜொ.சி.மோனிஷா,
ஆய்வியல் நிறைஞர் ,
கோயம்புத்தூர்.
016. மகிழ்வித்து மகிழ்
ஆறறிவுடைய மனிதனாகவே அகிலத்தில் அவதரித்தாய்,/1
அனைத்தையும் ஆளும் திறனையும் பெற்றாய்/2
அணைப்பதில் மகிழ்ச்சி உதைப்பதில் இன்பம்/3
உன்னுடன் இருக்க உவகை கொண்டாய்/4
முற்பகல் செய்யின் பிற்பகல்விளையும்/5
என்பதை எண்ணத்தில் நிறுத்தி வைத்தாய்/6
புன்னகை உனது தனித்துவம் என்றாய்/7
புவிதனில் புலனுடன் வாழ வந்தாய்/8
மானிட வாழ்க்கையை நீர்க்குமிழி என்றாய்/9
மனிதத்தை நீ ஏன் மறந்தாய்/10
மரணமே அழைக்கிறது மனிதமும் தொலைகின்றது/11
ஏன் என்று ஒருதடவை எண்ணினாயா/12
மறந்திடு கவலையை மகிழ்ந்திரு மண்ணிலே/13
மனமதுவும் நிறைந்து மகிழ்ச்சியே பெருகிடுமே/14
உன்மகிழ்வதை பகிர்ந்திடு மற்றவர் மகிழ்ந்திடவே/16
மகிழ்வித்து பகிர்ந்திடின் மனிதம் மகிழ்ந்திடும்/17
மனமும் மகிழ்வுறும் மகிழ்வித்து மகிழ்ந்திடுவாய்/18
'மறவன்புலோ'
செல்லம்
அம்பலவாணர்
கொழும்பு
இலங்கை
16. மகிழ்வித்து மகிழ்
மகிழ்வித்து மகிழ் பொன் ஆதவனே
காட்சிதரும் அழகு நிறை கதிரொளியே
தேனின்சுவைச் செந்தமிழில் கவிபுனைந்து உன்னைபாடுகிறேன்
வானின் வழிவந்திறங்கி வசந்தவிழா தந்திடுவாய்
ஐந்து வருடங்கள் மகிழ்ச்சி Fm மலர்ந்து
புன்னகையாய் மகிழ்ச்சியில் உள்ளம் பறந்திட
இன்பவிடியல் பொழுதினிலே இறையாம் இரவிவருகையிலே
அன்பின்விடியல் பொழிதினிலே மகிழ்ச்சிFm வாழ்த்திடுவாய்
சிந்தையெலாம் சீராக்குதே செய்திகள், தகவல்கள்
மனது சிறகைவிரித்து , விழிப்புணர்வு தந்து
எங்களை மகிழ்வித்து மகிழ்குழுமம் பாசம்காட்டி
கோடானகோடித் உள்ளங்களில் மகிழ்ச்சிகடலில் நனைந்து
காலங்காலமாய்ப் பதிவாகிக் விருட்சமாக என்றும் இருக்கிறது
எல்லையில்லா ஆனந்தமே கவலையைமறந்து மகிழ்ந்திரு
ஆளுமைகளும் அறிஞர்களும் கவிஞர்களும் ஒன்றுகூடிடுவோமே
ஒற்றுமையுடன் வாழ உறவுகளாய் என்றும் மகிழ் fm
மனிதநேயத்துடன் மகிழ்வித்து மகிழ்ந்திடுவாய் மண்ணிலே
மகிழ்வாய் நிகழ்வும் விருது மாபெரும் சிறப்பு
வாழ்த்துவோம் அனைவருமே வாழ்க வளமுடன்
கவிதாயினி ரேவதி சத்தியமூர்த்தி
சென்னை
017. மகிழ்வித்து மகிழ்
அறத்தை அடிமையாக்கி ஆருயிர்
உள்ளங்களை உனதாக்கி மகிழ்வித்து மகிழ்
ஆருயிர் அன்னை அவள் ஈன்றெடுத்தாள்
உன்னை அவ்வன்னையை மகிழ்வித்து மகிழ்
இயலாதவர்களுக்கு இயன்றதை வழங்கி மகிழ்வித்து மகிழ்
ஈகை குணத்தை இருப்பிடமாய் கொண்டு மகிழ்வித்து மகிழ்
உலக உயிர்களிடத்தில் அன்பு செலுத்தி மகிழ்வித்து மகிழ்
ஊனம் கொண்ட உள்ளங்களை உனது
அறிவால் மாற்றி மகிழ்வித்து மகிழ்
எண்ணம் போல் வாழ்க்கை என்னும்
சொற்றொடரை உனதாக்கி மகிழ்வித்து மகிழ்
ஏற்றமும் இறக்கமும் வாழ்வின்
நியதி எனவே மகிழ்வித்து மகிழ்
ஐயம் கொண்ட மனங்களுக்கு உனது
ஆதரிவினை வழங்கி மகிழ்வித்து மகிழ்
ஒற்றுமையும் ஒருமைப்பாட்டையும்
பேணி மகிழ்வித்து மகிழ்
ஓவியக்கலையை உயிர்த்தெடுத்து மகிழ்வித்து மகிழ்
ஒளவையின் பொன் மொழிகளை போற்றி மகிழ்வித்து மகிழ்
அகிலம் உன்னை போற்றிட மகிழ்வித்து மகிழ் ....
வீ. கார்த்திக் - வழக்கறிஞர்
சிறுவாச்சூர்
சேலம் மாவட்டம்
018. மகிழ்வித்து மகிழ்.
அனைவரிடத்திலும் இருப்பது.
இருப்பதை வைத்து மகிழ்வது.
மகிழ்ந்து பிறரை வாழ வைப்பது.
வைத்து மீண்டும் இசைய வைப்பது.
வைத்து கேட்டு அறிய செய்வது.
செய்து கொண்டே சாதிப்பது.
சாதித்து வாழ்வில் நல்நிலை பெறுவது.
பெற்ற நிதியை பகிர்வது.
பகிர்ந்து தானும் மகிழ்வது.
மகிந்த கிளைவுடன் கூடி வாழ்வது.
வாழ்ந்து பிறரை சிறக்க வைப்பது.
வைத்த உறவை பெருக்க வைப்பது.
வைத்து மீண்டும் செறிய செய்வது.
செய்து கொண்டே வரலாறு படைப்பது.
படைத்த வரலாறை செம்மை ஆக்குவது.
ஆக்கிய செம்மையை இசை அமைப்பது.
அமைத்த இசையை கேட்டு மகிழ்வது.
மகிழ்ந்து பிறரை கேட்க செய்வது.
செய்து புகழை பெறுவது.
பெற்றதை மகிழ் வித்து மகிழ்வது.
சே.ஜெய பாக்கிய லட்சுமி,
காஞ்சிபுரம்
019. மகிழ் வித்து மகிழ்
மலர் மலர்ந்து மணம் வீசவே!
வண்ண வண்ண பூங்காவினிலே!
பறவைகள் பாடி ஆடவே!
பூங்காற்றில் மனம் மகிழவே!
குழந்தைகள் விளையாடிடே!
குலுங்கும் சிரிப்பொலி கேட்கவே!
நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சியிலே!
மகிழ்வித்து மகிழ்வோம் நாமுமே!
கூடி பேசிடவே!
நல்ல உறவுகள் வளரவே!
பகிர்ந்து கொள்ளும் அன்பிலே!
மகிழ்வித்து மகிழ்வோம் நாமுமே!
உதவி செய்யும் உள்ளத்துடனே!
உலக மக்கள் நலம் பேணவே!
மகிழ்ச்சி பகிர்ந்து கொள்ளுவோமே!
மகிழ்வித்து மகிழ்வோம் நாமுமே.
கி.மோனிஷா முதுகலைத் தமிழ்
இரண்டாமாண்டு
சி.கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி
கடலூர்.
020. மகிழ்வித்து மகிழ்
இன்றைய வாழ்க்கைக்கு முக்கிய தேவையே
முகம் மகிழ்ந்து இன்சொல் பேசிடு
அகம் மகிழ தீயவை களைந்திடு
உள்ளத்தில் மனநிறைவினை எப்போதும் பெற்றிடு
கள்ளமில்லா குழந்தைகளாக வலம் வந்திடு
தன்னலம் இல்லாத உள்ளத்தை அடைந்திடு
தன்னலம் துறந்து பொதுநலத்தை மலர்வித்திடு
இன்னகை புரிந்து இன்னலை விரட்டிடு
இன்னல்களைக் களைய கன்னலாய் இனித்திடு
தத்தளிக்கும் மனதினை மகிழ்வித்து மகிழ்ந்திடு
நம்மால் முடிந்ததைப் பிறருக்குக் கொடுத்திடு
பிறர் எண்ணங்களையும் செயல்களையும் பாராட்டிடு
மனிதநேயம் மலர மகிழ்வித்து மகிழ்ந்திடு
மன்பதை உய்ய வழிவகை செய்திடு
கொடுத்து மகிழ்ந்திடு பாராட்டி மகிழ்ந்திடு
நாமும் மகிழ்ந்திடுவோம் பிறரையும் மகிழ்வித்திடுவோம்
உள்ளம் முழுமையும் அன்பால் நிறைத்திடுவோம்
மகிழ்வித்து மகிழ்வதைத் தாரக மந்திரமாக்கிடுவோம்
க.ஹெலன்
காயல்பட்டணம்
021. மகிழ்வித்து மகிழ்
மகிழ்வித்து மகிழ்!!! வாழ்க்கை புத்தகம் மிக சிறியது!!!
அதனை மகிழ்ச்சி ஏடாக மாற்ற எல்லோரையும்
மகிழ்வித்து மகிழ்!!!
வாழ்க்கை புத்தகத்தின் பக்கங்களில் இடம்பெறும்
குடும்பம் நண்பர்கள் நலவிரும்பி உற்றார் உறவினர்கள்
சமூகம் போன்ற தலைப்புகளின் சிறப்பே மகிழ்ச்சி தான்!!!
ஆகவே, மகிழ்வித்து மகிழ்!!! வாழ்க்கை புத்தகம்
சுவாரசியமாகும்! அழகாகும்!!
மேன்மையாகும்!!! அர்த்தமுடையதாகும்!!!!
முழுமையாகும்!!!!! மகிழ்வித்து மகிழ்!!
மகிழ்வுடன்,
ஹு.நாஸியா
சேலம்.
022. மகிழ்வித்து மகிழ்
மழலை மொழியாக மகிழ் மற்றவருக்கு மனதாரும் வரை..
உன்னை நினையாது உற்றத்தாரை நினைத்து மகிழ்..
உன்னை நீ மகிழ் உன்னால் மகிழட்டும் ஊரார்..
பகைவன்கூட நண்பன் ஆவார் மகிழ்வித்து பார்..
உன்னை நீ மாற்றிடுவாய் மகிழ் மகிழ்வாக..
பொய்யோ உண்மையோ உண்மையாக மகிழ்வை..
சொத்துக்கள் வேண்டாம் சொற்களால் மகிழ்வை..
தங்கமும் வேண்டாம் வைரமும் வேண்டாம்
மதிப்பில்லா வார்த்தையால் மகிழ்வை..
பிரச்சினை என்ற பின்னலை
பிரித்தெடுக்க மகிழ்ச்சி என்ற கருவி உண்டு ..
தட்டிக்கொடுத்து மகிழ் தட்டிவிட்டு
சென்றோரை கூட திரும்பி பார்க்க வைக்கும்..
பாடங்கள் சொல்லித்தராது பாடமாக
அமையும் பட்டால் புரியும் மகிழ்ச்சியின் தாக்கத்தை
வார்த்தையில் உண்டு வாழ்க்கையின் வளர்ச்சி ..
வாழ வைப்போம்
வையகம் வாழ வாழ்த்துக்கள் சொல்லி மகிழ்விப்போம்..
ந. ஐஸ்வர்யா
மதுக்கரை மார்க்கெட்,
கோயம்புத்தூர்
023. மகிழ்வித்து மகிழ்
அறத்தைப் போற்று ஆருயிர் பேண்
எவ்வுயிரும் தம் உயிராய் போற்று
எல்லாரும் ஓர் குலம் தான்
எல்லோர் உடம்பிலும் ஓடும் குருதி
ஒரே நிறம் சிகப்பு தான்
பணம் இருப்பவன் ஓர் நாள்
இல்லாதவனாய் ஏழ்மையில் வாழ்ந்தவன் தான்
இன்று இல்லாதவன் நாளை இருப்பனாவான்
பள்ளத்தில் கிடந்தவன் ஓர் நாள்
மேட்டிற்கு வருவான் வாழ்க்கைச் சக்கரம்
சுழன்று கொண்டே இருக்கும் எப்போதும்
மேலிருந்து கீழ் கீழிருந்து மேலாக
இதில் எது எங்கு நிரந்தரம்
சிநீதிப்போம் செயல்படுவோம்
ஒன்றினணைவோம் மனிதர்களாய்
பிறப்பு ஒரு முறை மட்டுமே
இறப்பும் ஒரு முறை மட்டுமே
இதில் ஏன் விலங்கு குணம்
ஆறறிவ ஏன் ஏழாம் அறிவான
இயந்திர மனிதனைப் படைக்கத் தெரிந்த
மனிதா வாழ்க்கையில் என்ன கொண்டுவந்தோம்
கொண்டு செல்ல என்ன இருக்கிறது
இருக்கும் வரை உன்னிடம் உள்ள
பொன் பொருள் சோகத்தைக் கொடுக்காதே
கொடுக்கவும் வேண்டாம் குறைந்த பட்சம்
அன்பான பேச்சு முகத்தில் ஒரு
சிறிய புன்சிரிப்பு அதைக் கூட
அள்ளி அள்ளிக் கொடு என்று
கேட்கவில்லை கிள்ளிக் கொடு
வெற்று இயந்திரத்தோடு இயந்திரமாய் இல்லாமல்
சதையும் உடம்பும் உயிரும் உடைய
மனிதமுள்ள மனிதனாய் நட அங்கு
உயிர்கள் மகிழும் நீயும் மகிழ்வாய்
நாளைய வழிமுறை நல்லகமாய் மலர
மலர்களைப் போல் சிரித்து மகிழ்வோம்
முனைவர் சு சாரதா
சென்னை
024. மகிழ்வித்து மகிழ்
மகிழ்ச்சியாக வாழ்வது சுயநலமாக வாழ்வது...
மகிழ்வித்து வாழ்வது அளவிட முடியாத உயர்வான பண்பாக வாழ்வது...
மகிழ்ச்சியான மனம் ஒரு மலர் என்றால் ..
மகிழ்வித்து வாழும் மனம் ஒரு பூந்தோட்டம்...
மகிழ்வித்து வாழ்வது என்பது விலைமதிப்பற்ற பண்பு...
நம்முடைய அன்பினால் பெற்றோர்களை மகிழ்விப்பது,
அறிவினாலும் திறமையினாலும் நம் ஆசான்களை மகிழ்விப்பது,உதவியினால்
நம் நண்பர்களையும் உறவினர்களையும் மகிழ்வித்து வாழ்வது என்பது ஒரு அழகான வாழ்வியல்.
மகிழ்ச்சி என்பது நமக்கு மட்டும் அல்ல...
மற்றவர்களுக்கும் நம் மகிழ்ச்சியை பகிர்ந்தளிப்பயதால் மட்டுமே அது பன்மடங்காகும்...
பல்வேறு துறைகளில் நம் இந்தியர்கள் வெற்றி பெற்று
பதக்கங்களும் பரிசுகளும் வென்று வரும்பொழுது அவர்களுக்கு மட்டும் அல்ல மகிழ்ச்சி ..
நம் இந்திய நாடே கொண்டாடி மகிழ்கிறதே..
வாழ்க்கையில் எதிர்மறையான பலசூழ்நிலைகளை சந்தித்தாலும்
நேர்மறையை சிந்திப்பவர்களால் மட்டுமே மற்றவர்களை மகிழ்வித்து வாழ்பவன்..
தனக்கு ஏற்பட்ட மனவலி,அவமானங்கள்,நிராகரிப்பு இவை அனைத்தையும்
அனுபவிப்பவனால் மற்றவர்களின் மனநிலை அறிந்து..
தனக்கு ஏற்பட்ட அனுபவம் மற்றவர்களுக்கு எந்த சூழ்நிலையிலும்
ஏற்படுத்தி விடக்கூடாது என்ற உயரிய எண்ணம் உள்ளவனால் மட்டுமே மகிழ்வித்து வாழ முடியும்..
கற்றது கல்லளவு கல்லாதது கடலளவு என்ற எண்ணமே தற்பெருமை கொள்ளாமல்
மனமகிழ்ச்சி உடன் மற்றவர்களின் கருத்தை செவிசாய்க்க முடியும் ..
அறிவையும் மகிழ்ச்சியையும் பகிர்வதால் அது பன்மடங்கு பெருகும்...
மகிழ்ச்சி அவர் மட்டுமே உணர்வதல்ல..அவர்களை சுற்றியுள்ளவர்களுக்கும் உணரவைப்பார்கள்...
அதனால் மகிழ்ச்சியும் ஒரு தொற்று வியாதியே....
நாம் மகிழும் பொழுது நம் மனம் காற்று போல் மென்மையாகிறது..
நாம் மற்றவர்களை மகிழ்வித்து வாழும் பொழுது எல்லோர் மனமும் வசந்தம் வீசும்
மலர்களின் நறுமணம் போல் அனைவரின் மனமும் மென்மையாகிறது....
மகிழ்வோம்... மகிழ்வித்து வாழ்வோம்...
திருமதி.பரிமளா ராமச்சந்திரன்
எம்.எஸ்ஸி.,எம்.ஃபில்
திருச்சிராப்பள்ளி
025. மகிழ்வித்து மகிழ்
மகிழ்ச்சி என்பது இறைவன்
மாந்தருக்கு கொடுத்த வரம்
அந்த மகிழ்ச்சியால்
பிறரையும் மகிழ்வித்து மகிழ்
இன் சொற்கள் பேசி மகிழ்
பிணியுற்றவரை சந்தித்து
நலம் விசாரித்து மகிழ்
இறந்தவர் குடும்பத்தில்...
துக்கம் விசாரித்து அவர்க்கு ஆறுதல் கூறி மகிழ்...
இருக்கும் செல்வத்தில் கொஞ்சம்
ஏழைக்கு கொடுத்து மகிழ்
எதுவுமே இல்லை என்றால் அன்பை வழங்கி மகிழ்
பெற்றோரை போற்றி..
அவர்களுக்கு பணிவிடை செய்து மகிழ்...
மழலைகளோடு கொஞ்சி மகிழ்
நீ கற்றதை பிறர்க்கு கற்றுக்கொடுத்து மகிழ்
உனக்கான கடமைகளை முறையாக செய்து மகிழ்
இருப்பதை வைத்து திருப்தியுற்று மகிழ்....
உனக்கு தவறு செய்தவரை மன்னித்து மறந்து மகிழ்
இடர் படும் மாந்தருக்கு உதவி செய்து மகிழ்
இத்தனையும் செய்து நீ மகிழ்ந்தால்.. உனக்கு
தெரியாமலே பலரும் உன்னால் மகிழ்ந்திடுவார்..
இதுவே உண்மை மகிழ்ச்சி மகிழ்ச்சி எஃப் எம் இன்
சிறந்த முயற்சி.. பா வடித்ததில்
எனக்கும் மகிழ்ச்சி...
-சரீனா உவைஸ்
இலங்கை
026. மகிழ்வித்து மகிழ்
அன்பு கொண்டு பிறரை மகிழ்வித்து மகிழ் .....
பிள்ளையாய் தாய் தந்தையை மகிழ்வித்து மகிழ் .....
தலை சிறந்த மாணவனாய் ஆசானை மகிழ்வித்து மகிழ் .....
துன்பத்தில் தோல் கொடுத்து தோழனை மகிழ்வித்து மகிழ் .....
ஏழைகளுக்கு உதவி செய்து அவர்கள்
முகமகிழ்ச்சி கண்டு மகிழ்வித்து மகிழ்...
பெரியோரை பணிந்து மகிழ்வித்து மகிழ்.....
அறத்தின் வழி நின்று மகிழ்வித்து மகிழ்...
சிந்தையாளனாய் சிகரம் தொட்டு மகிழ்வித்து மகிழ்.....
சகிப்புத்தன்மையால் சகோதரத்துவம் வளர மகிழ்வித்து மகிழ்.....
தலை நிமிர்ந்து தமிழன் என்று சொல்லி மகிழ்வித்து மகிழ்.....
தமிழ் மொழியின் சிறப்பை எண்ணி எண்ணி மகிழ்வித்து மகிழ்.....
இப்படிக்கு கவிதாயினி
திருமதி ச.நவிதா
வளையர்பாளையம் ,
கிருஷ்ணராயபுரம் வட்டம் ,
கரூர் மாவட்டம் .
027. மகிழ்வித்து மகிழ்
மற்றவரை மகிழ்வித்தால் மாற்றம் பெற்றிடுவாய்
குற்றம் நீக்கினால் கூடிடும் மகிழ்ச்சி
வெற்றி பெற்றால் விலகாத மகிழ்ச்சி
கற்றவர் மனதில் காலமும் நிறைந்திடுமே.!
வழிகாட்டி நின்றால் வாழ்க்கை வளமாகும்
அழிவில்லா விடியலும் அழகாய் மலர்ந்திடுமே
இழிவில்லா செயலினால் இன்பமும் தோன்றிடுமே
எழிலான இதயமும் என்றும் மகிழ்ந்திடுமே!
அன்னையை வணங்கினால் ஆயுளும் மகிழ்ச்சியே
புன்னகையுடன் வாழ்ந்தால் புகழும் கூடிடுமே
வன்முறை நீக்கினால் வழியும் பிறந்திடுமே
துன்பம் தொலைத்தால் தொடர்ந்து மகிழ்ந்திடுவோமே !
இயற்கையாக வாழ்ந்தால் எண்ணற்ற மகிழ்ச்சியே
செயற்கையை ஒழித்தால் செயல்கள் வளர்ந்திடுமே
உயர்வாய் எண்ணினால் உள்ளமும் மகிழ்ந்திடுமே
முயற்சியைக் கொண்டால் முன்னேறி மகிழ்ந்திடுவாய் !
நாட்டின் வறுமையை நாமும் நீக்கிடுவோமே
கோட்டைப்போல் உயர்ந்தால் குடும்பமும் மகிழ்ந்திடுமே
பாட்டால் உயர்ந்தால் படையும் கூடிடுமே
பாட்டை இசைத்தால் பலரும் மகிழ்ந்திடுவாரே!
முனைவர் சி. பூங்கொடி
உதவிப் பேராசிரியர்,
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி,
கோயம்புத்தூர்.
028. மகிழ்வித்து மகிழ்
கொடுத்து உதவுவதில் மகிழ்ச்சிக் காண்
சிரித்த முகத்தோடு பழகி பார்த்திடு
அகமும் முகமும் மலர கண்டிடு
மகிழ்வின் உச்சம் உன் வார்த்தையில்
ஆறுதலாய் இருந்து அன்பு கண்டிடு
பிறக்கும் போது ஒன்றும் இல்லை
இருக்கும் போது உன்னை பேசட்டும்
நான்கு பேருக்கு நல்லதைச் செய்திடு
உலகம் உன்னை திரும்பிப் பார்க்கும்
யாரைப் பார்த்தும் பொறாமைக் கொள்ளாதே
உனக்கு எதிரியாய் இருந்தாலும் கடுகு
அளவுக் கூட கோபம் கொள்ளாதே
பழகிப் பார் அருமைத் தெரியும்
உன்னைச் சுற்றி நல்லவர்களை வைத்திடு
நல்ல எண்ணங்கள் உருவாகி நீயும்
நல்ல செயலுக்கு துணை புரிந்து
உலகம் போற்ற வாழ்ந்திடு மகிழ்வு
போனால் திரும்ப வராது வாழ்க்கையில்
ஒரு முறை வருவதை அணைத்து
அதற்கேற்ப நடந்து வழிச் செய்திடு
ம.செ.அ.பாமிலா பேகம்,நாகர்கோவில்
029. மகிழ்வித்து மகிழ்
தட்டிக் கொடுத்தேன் வாழ்க்கையில் முன்னேறினான்!
தடைகளை உடையென்றேன் வரலாறு படைத்தான்!
போராடு என்றேன் வெற்றிவாகை சூடினான்!
பசித்தோருக்கு உணவிடுவோம் புன்னகையில் மலர்ந்திடுவோம்!
களைகளை அகற்றினேன் வாழும்வழியைக் கூறினேன்!
கனியமுதாய் பேசினேன் கற்கண்டாய் இனித்தான்!
கவியமுதைப் படைத்தான் பாராட்டி மகிழ்ந்தேன்!
கற்பனைகளை வடித்தான் விருதுகளைக் குவித்தான்!
முகத்தினில் புன்னகை நடனமாடுவதைக் கண்டேன்!
முயற்சி கைகொடுக்கும் முயன்றிடு என்றேன்!
முடியாததை தூரெயறி முடியுமென்பதை தொடுயென்பேன்!
மகிழ்ச்சியாய் இருயென்பேன் மாற்றங்களை காணென்பேன்!
தமிழையே உயிரென்பேன் தடுமாற்றத்தை உடைத்தெறிந்தேன்!
தவறுகளை உணர்த்துவேன் மற்றவரை மகிழ்விப்பேன்!
திறமைக்கு மதிப்பளிப்பேன் மாமருந்தாக திகழ்வேன்!
மகிழ்ச்சியை ஊட்டுவேன் மகிழ்வித்து மகிழ்வேன்!
மதிப்புறு முனைவர்,
இனியன் வெ.பாலாஜி,
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
டாக்டர் எம்.ஜி.ஆர்.கல்வி
மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,மதுரவாயல்,
சென்னை-600 095.
030. மகிழ்வித்து மகிழ்
கைக் குழந்தைச் சிரிப்பில் கள்ளமில்லை
பிறருக்கு கொடுப்பதால் துன்பம் இல்லை
கொஞ்சி மகிழும் பேச்சுக்களாலே இன்பமே
கொள்ளை போகும் எவரின் மனமும்
சுயநலம் மட்டும் நாடும் மனிதன்
சூழ்ச்சிகள் செய்து நாளை கழிக்கிறான்
ஒருவனை ஏய்த்து ஒருவன் வாழ்ந்திட்டு
உயிரற்ற பிணமாய் கரைந்து போகிறான்
குணத்தை மறந்து பணம் தேடியே
துன்பங்கள் கொடுக்க துணிந்து போகிறான்
தொல்லைகள் கொடுத்து மனிதன் வாழ்கிறான்
உயர்ந்தவன் என்றும் தாழ்ந்தவன் என்றும்
உலகினில் ஏனோ வேற்றுமை எண்ணம்
ஒவ்வொரு மனிதன் ஒவ்வொரு குணமே
உணர்ந்து வாழ்தலே மனித இயல்பே
பிறரை மகிழ்வித்து நீயும் மகிழு
பண்புள்ள வார்த்தைகள் உதிர்க்க தொடங்கினால்
வம்புள்ள உலகம் மறைய தொடங்கும்
பன்முகச்சாதனையாளர்
பா. சுரேஷ் பாபு
அம்பத்தூர்
சென்னை
031. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டு
பட்டினியாய்க் கிடந்தும் பகுத்துண்டு வாழ்ந்து
இடுக்கண் பட்டவர் க்கும் இன்பம் தந்து
கல்லாதவர்க்கும் கல்வியைக் கற்பித்து
வன் சொல் நீக்கி இன்சொல் பேசி
வழிந்தோடும் நீர்தேக்கி வளமை சேர்த்து
அறியாமை இருள் போக்கி ஒளியேற்றி
வாய்மை யின் இலக்கணமாய்
வன் மொழி மொழிந்து
கோபக்கனல் நீக்கி அமைதி வழி காத்து
ஆயுதம் தவிர்த்து அகிம்சை காத்து
வறியவரை வாழ வைத்து வாழ்க்கை வழிகாட்டி
கருணை மிகுந்து ஆறுதல் கூறி
பண்புகளை காத்து பகுத்தறிவுப் பாதையிலே
போர்க்குணம் துறந்து புதுமை படைத்து
ஆழிசூழ் உலகினில் அமைதியை நிலைநாட்டி
எல்லா உயிர்களும் இன்புறவே செய்து
ஏற்றமிகுவாழ்க்கையை எளியவர்க்கும் தந்து
ஆசானின் சொல் கேட்டு அறிவுரை யைப் பின்பற்றி
முதியவரைப் பேணி முதுமை காத்து
இயலாதோர்க்கும் இயன்றவரை உதவி
மகிழ்ச்சி யைப் பகிர்ந்து மற்றவர்க்கு அளிப்போம்
மகிழ்வித்து வாழ்ந்து மாண்பை மீட்போம்
கவிதாயினி பி. க. மாதவி எம். ஏ. எம் எட்
பட்டதாரி ஆசிரியர் விழுப்புரம்
032. மகிழ்வித்து மகிழ்
மனிதர்களின் உணர்வுகளில் எத்தனையோ வெளிப்பாடுகள்,
மன அழுத்தம், மன நெருடல்கள்,
மனச் சோர்வினைப் போக்கிடும் அருமருந்து,
மகிழ்ச்சி என்பதன் சுவையைக் கூட்டிட,
மாற்றங்கள் நிறைந்த சூழல்கள் அவசியம்,
மாசற்ற மனமாய் மகிழ்ச்சியைப் பெருக்கிட,
மாறுபட்ட சிந்தனைகளோடு இன்புற்றுக் கழித்திட,
மாந்தர்களுக்கு அடைமொழியாய் அமைந்திட்டப் புன்னகை,
மிளிருகின்ற சிரிப்பில் பெருகிடும் இன்பம்,
மிகுந்திடும் சோர்வுகளைத் துரத்திடும் நகைச்சுவை,
மிஞ்சியுள்ளக் காலங்கள் நிறைவை அளித்திடும்,
மின்னலாய்த் தோன்றிடும் துன்பங்களைத் தடுத்திடும்,
மீட்டெடுக்கும் கருவிகளாய் புன்னகைக்கும் மழலைகள்,
மீண்டும் துயரில்லாமல் நிறைவாய்க் காத்திடும்,
மீட்டுகின்ற விரல்களில் ஏற்படும் ஸ்வரங்களாய்,
மீதமுள்ள நேரத்தை மகிழ்வித்தே மகிழ்ந்திடலாம்,
முதியோர்களோடு சேர்ந்து இன்பத்தை அளித்திடலாம்,
முன்னேற்றப் பாதைகளுக்கான வழிமுறைகளைக் கற்றிடலாம்,
முன்னோர்களது அறிவுரைகளைப் பின்பற்றியே மகிழ்ந்திடலாம்,
முடிந்தவரை பிறரது மனதைக் காயப்படுத்தாமல்,
மூச்சுள்ளவரை அனைவரையும் மகிழ்வித்து மகிழ்ந்திடலாம்.
கவிஞர்.முனைவர்.
ச.மீனாட்சி,ப.ஆ.,(ஆ),
தாரமங்கலம், சேலம்.
033. மகிழ்வித்து மகிழ்
இல்லாதவர்க்கு கொடுப்பதே மகிழ்ச்சி
இறைவனின் ஆசீர்வாதமே மகிழ்ச்சி
நாளும் நற்காரியங்கள் நடப்பதே மகிழ்ச்சி
நாட்டை நல்லவர்கள் ஆளுவதே மகிழ்ச்சி
போர்படை வீரனுக்கு போர்க்களமே மகிழ்ச்சி
போராடும் உள்ளத்திற்கு உயிரூட்டும் வார்த்தைகளே மகிழ்ச்சி
பிறந்த குழந்தையின் அழுகை மகிழ்ச்சி
பிறக்காதவர்க்கு கருவறையே மகிழ்ச்சி
வரம் பெற்ற வாழ்க்கையே மகிழ்ச்சி
வாராக்கடன் வருவதே மகிழ்ச்சி
பெரியோரை வணங்குதலே மகிழ்ச்சி
புரியாதவரை விட்டு விலகுதலே மகிழ்ச்சி
தானம் செய்தலே மகிழ்ச்சி
தன் நிறைவுடன் வாழ்வதே மகிழ்ச்சி
கல்லாதவருக்கு கல்வி அளித்தலே மகிழ்ச்சி
காணாதவர்க்கு வழிகாட்டுதலே மகிழ்ச்சி
எங்கெங்கும் எப்பொழுதும் என்றென்றும்
பிறரை மகிழ்வித்து தாம் மகிழ்வதே மெய்யான மகிழ்ச்சி.
மு.தனலட்சுமி,
உதவிப் பேராசிரியர்,
நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை மாவட்டம்.
034. மகிழ்வித்து மகிழ்"
ஊக்கமளித்து உயர்வுற்று மகிழ்வோம்.
அன்புடன் அரவணைத்து ஆக்கமூட்டி மகிழ்வோம்.
அடுத்தவர் மனதில் நம் மனதை ஏற்றி களிப்புற்று மகிழ்வோம்
அடுத்தவர் கண்களில் மகிழ்வை பிரதிபலித்து மகிழ்வோம்.
சிரிப்பை தொற்ற விட்டு மகிழ்வோம்.
புன்னகையை சிந்தி அடுத்தவர் ஏந்த மகிழ்வோம்
அட்சயப் பாத்திரமாய் சிரிப்பை உதிர்த்து மகிழ்வோம்.
பார்க்கும் முகங்கள் எல்லாம் அன்றலர்ந்த
செந்தாமரையாய் மலர்வதைக்கண்டு மகிழ்வோம்.
பிறை அணிந்த இறையின் மலர்ந்த முகம் போல் பிறர் முகம் கண்டு மகிழ்வோம்.
மகிழ்வெனும் விளக்கால் மற்றொரு மகிழ் விளக்கை ஏற்றுவோம்.
ஏழைக்கோர் எழுத்தறிவித்து மகிழ்வோம்.
மனம் என்றோர் உணர்வில்லை மகிழ்வே மனம் என்பதுணர்ந்து
மகிழ்வித்து மகிழ்வோம்!
ஆசிரியர் சிற்பி
நீ. சங்கர் ,
அறிவியல் பட்டதாரி ஆசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி,
ஜாகிர் வெங்கடாபுரம்,
கிருஷ்ணகிரி
035. மகிழ்வித்து மகிழ்
கற்றோரை வணங்கி மகிழ வேண்டும்!
பெற்றோரைப் பேணி வாழ வேண்டும்!
வற்றாத அன்பை வழங்க வேண்டும்!
கற்றதை நால்வருக்கும் பகர வேண்டும்!
நல்லதை நோக்கி நகர வேண்டும்!
அல்லதை வெறுத்து ஒதுக்க வேண்டும்!
நல்லவரோடு இணங்கிப் பழக வேண்டும்!
அறிவைப் பெருக்கும் ஆன்மீகம் வேண்டும்!
அறத்தை வளர்க்கும் ஆற்றல் வேண்டும்!
உற்றார் உறவினர் உறவுகள் வேண்டும்!
பசித்தோரைத் தேடி உணவளிக்க வேண்டும்!
பகலவனைப் பாடி பரிமளிக்க வேண்டும்!
சாதிமத பேதங்கள் சழக்கறுக்க வேண்டும்!
வருங்கால சந்ததியை வார்த்தெடுக்க வேண்டும்!
பூசைகள் செய்திடவே பூத்தொடுக்க வேண்டும்!
மகிழ்ச்சி பண்பலை கேட்டிட வேண்டும்!
மனது பாரங்கள் இறக்கிட வேண்டும்!
மகிழ்வித்து மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டும்!
முனைவர் வ. ஹரிஹரன்
திருநெல்வேலி
036. மகிழ்வித்து மகிழ்
எந்தவொரு செயலையும் மனமகிழ்ந்து செய்வோம்
உதவிகள் செய்து வாழ்க்கையை வளமாக்குவோம்
வறியவருக்கு உதவினால் மனம் மகிழும்
மாணவனுக்கு கல்வியைக் கொடுத்தால் பயனாகும்
உறவுகளை மதித்து நடக்க மகிழ்வாகும்
நண்பர்களுக்கு தோள்கொடுக்க நட்புகள் பெருகும்
இயலாதோருக்கு உதவிட குடும்பம் உயரும்
ஜூவராசிகளை துன்புறுத்தாமல் அன்புடன் காத்திடுவோம்
எவ்விதமான உதவியும் உயர்ந்த பண்பாகும்
சிறுவயதில் இருந்தே உதவி மகிழ்வோம்
மற்றவர்கள் மகிழ்ச்சியைக் காண்பதே இன்பம்
துன்பத்திலும் கலங்காமல் காத்திட வேண்டும்
பேரிடர் காலங்களில் உதவுவது மனமகிழ்வாகும்
வீடும் உறவும் இழந்தோரைக் காத்திடுவோம்
ஆற்றுப் படுத்தி மகிழ வைப்போம்
தோல்வி அடைந்தார் மனத்தைத் தேற்றுவோம்
பெருமைக்கு உதவாது மகிழ்ச்சிக்கு உதவுவோம்
மூத்தோர் மனம் வருந்தாது காத்திடுவோம்
நோயின் தாக்கம் குறைத்திட உதவுவோம்
துயரமான சம்பவம் நடந்தால் தேற்றுவோம்
மாற்றுத் திறனாளிகளுக்கு அன்பு காட்டுவோம்
மகிழ்ச்சி பண்பலையில் மகிழ்வித்து மகிழ்வோம்
கவிஞர் ச.சுதாராணி
தலைமை ஆசிரியை
ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி
பூலப்பாளையம் பவானி ஒன்றியம்
ஈரோடு மாவட்டம்
037. மகிழ்வித்து மகிழ்
இறைவன் ரசித்து ரசித்துச் செதுக்கிய
பூமி எப்போதும் துடிப்புடன் சுழல்வதால்
பகலவனும் வெண்ணிலவும் வானை ஆள்கிறார்கள்
விண்மீன்கள் நிலவொளியில் கண் சிமிட்டுகிறது
மேக தூதுவர்கள் காற்றுக்கு பணிந்து
மிதக்கின்றனர் வானில் மலையில்
பிறந்து தணியாத தாகமதை அருவியாகக்
கொட்டித் தீர்க்கின்றதோ நுரைபூசியே வெள்ளமும் !
கதிரவனின் இயக்கமதை தயக்கமின்றி ரசித்து
மகிழ்கின்றதோ நவகிரகங்களும் நிசப்தமாய் தியானித்து
இங்ஙனம் பரம்பொருள் படைப்புகள் அனைத்தும்
செவ்வனே கடமைகளாற்ற அனைத்திலும் பெருஞ்சிறப்புடை
மனிதகுலம் மட்டும் மாறவில்லை இன்னும்
ஏனோ? செயற்கையாய் இவ்வுலகைப் படைக்கும்
திறம் பெற்ற மாந்தர்கள் தன்னுயிர்போல்
மற்றுயிர்களை எண்ணி மகிழ்வித்து மகிழ்வாய்
வாழ சிந்திக்க மறந்த இயந்திரங்கள்
ஆயினரோ நவயுகம் காணும் நவீனமனங்கள்....
முனைவர்.
ப்ரியா நாகராஜன்,
திருவனந்தபுரம்
038. மகிழ்வித்து மகிழ்
இல்லமின்றி தவிக்கும் இதயத்திற்கு உதவிடு
உணவின்றி பசிக்கும் வயிற்றுக்கு உணவிடு
கைநீட்டும் தோல்சுருங்கிய வாழ்வை உயர்த்திடு
சுயத்தொழில் செய்வோருக்கு பேரமின்றி கொடுத்திடு
இருளடைந்த முகத்தினில் ஒளிக்காட்டி மகிழ்ந்திடு
ஊணத்தைக் காணாது ஊக்கத்தைத் தந்திடு
தமிழனை உயர்த்திட மால்களைத் தவிர்த்திடு
குறுதொழிலால் தமிழகத்தை வல்லரசென ஆக்கிடு
கூறுவிற்கும் பாட்டிகள் முகத்தினைக் கண்டிடு
முதியோர் இல்லமின்றி பிள்ளையாய் பேறெடு
இல்லாமைப் போக்க இருப்பதை ஈந்திடு
கலிகால வள்ளலாய் பிற்காலம் பதிந்திடு
நீட்டும் கரங்களைத் தடுத்திடா உள்ளமாகிடு
கற்கவே துடிக்கும் ஏழைகல்வித் தந்திடு
உண்டியலின்றி எதிர்கால சந்ததிக்கு கட்டணமிடு
கடவுளுக்கு தேவையில்லை பணத்தின் அவசியமுணர்
தன்னலம் பாராமல் பிறர்மனம் நிறைந்திடு
தனக்கென வாழாமல் பிறரேற்ற புறப்படு!
முனைவர் சிவசங்கரி குடந்தை
039. மகிழ்வித்து மகிழ்
சாதிக்கப் பிறந்த நாம்
சமுதாய ச் சிந்தனைகளைக் கைக்கொள்வோம்
இலட்சியத்தை அடைய
செயலினைத் திருந்தச் செய்வோம்
வெற்றிக்கனியை எட்ட
வியர்வைத் துளிகளைச் சிந்துவோம்
பயத்தை விட்டொழித்து
பக்குவமாய் வாழ்ந்திடுவோம்
வீரர்கள் வகுத்த பாதையில்
விவேகமாய் நடந்திடுவோம்
குறைகளை எண்ணாமல்
சாதனைகள் பல புரிந்திடுவோம்
நேர்மையைக் கடைபிடித்து
கடமைகளைக் கருத்தாய் செய்வோம்
அறிவைக் கூர்மையாக்கி
அகிலத்தை வெல்வோம்
முயற்சியை முழுமையாக்கி
முன்னேற்றம் பெறுவோம்
வீழ்ச்சியைச் சந்தித்தாலும்
விடாமுயற்சியால் விரட்டிடுவோம்
சரித்திரம் படைக்க சாகசப் பறவையாய் பறந்திடுவோம்
எட்டுத் திக்கும் வியந்து நோக்கும்
எட்டாக்கனியைப் பறித்திடுவோம்
உறவுகளை நேசித்து
உன்னதமாய் வாழ்ந்திடுவோம்
இயற்கையை நேசித்து
இன்பமாய் வலம் வருவோம்
தாய் நாட்டை நேசித்து
தன்னலமில்லாமல் செயல்படுவோம்
இத்துணை எண்ணங்களையும்
இடர் பாடில்லாமல் செய்து
மற்றவரை மகிழ்வித்து
மனத்தால் நாமும் மகிழ்வோம்
க. பாண்டி முருகேஸ்வரி.
ஆசிரியை. ஆண்டிபட்டி
தேனி மாவட்டம்.
040. மகிழ்வித்து மகிழ்
உலகில் பிறந்த நாம்
இறுதி காலத்தில் யாரும் எதுவும் கொண்டு போவதில்லை.,
இதற்கிடையில் எதற்கு இத்தனைப் போராட்டங்கள்.,
வன்மம் சூழ்ந்த இவ்வுலகில் வஞ்சனைகள் செய்வது எதற்காக,
போட்டிப் போடும் இவ்வுலகில் பொறாமைகள் எதற்காக,
பணம் என்னும் பேய்க்காக பாவச் செயல்கள் செய்வது எதற்காக,
இதில் எதுவும் - யாவும் நிலைத்து நிற்பதுவுமில்லை
நிரந்தரமாவதும் இல்லை.,
இங்கு பெரியவன் - சிறியவன் யாருமில்லை,
மேலானவன் - கீழானவன் என்று எவருமில்லை,
மண்ணில் பிறந்த மனிதர்கள் எல்லோரும் ஓர் உயிர் தான்,
சண்டை வேண்டாம் - சமத்துவம் கொள்வோம்,
போராட்டங்கள் வேண்டாம் - ஒற்றுமையைப் போற்றுவோம்,
போக்கிரித்தனம் வேண்டாம் பகிர்ந்துண்டு வாழ்வோம்.,
எல்லாம் எல்லாமுமாய் அனைவருக்கும் கொடுத்து
வேற்றுமையைத் தகர்த்து
வேற்றுமையிலும் ஒற்றுமையை நிலைநாட்டுவோம்.,
எல்லாம் ஓர் குடி மக்களென சகோதரத்துவத்தில்
மகிழ்வித்து மகிழ்வோம்
முனைவர் து.பால்ராஜ்,
PTA விரிவுரையாளர்,
அரசு ஆடவர் கலைக்கல்லூரி, கிருஷ்ணகிரி - 635001.
041. மகிழ்வித்து மகிழ்
பிரபஞ்சத்தின் உலகம் என்பது வித்தியாசமானதே
அழகான பிறவியே மனிதனாகப் பிறந்தோம்
ஆறாம் அறிவோடு மனதோடு இருக்கிறோம்
மனிதர்களும் எண்ணற்ற உயிரினங்களும் வாழ்கிறதே
கருவறையின் விடிவு கல்லறையின் முடிவு
இடைவெளி தான் வாழ்க்கையாக அமைகிறதே
நம்மால் முடியும் நம்பிக்கையோடு வாழ்கிறோம்
உதிக்கும் எண்ணங்கள் என்றும் உயரட்டும்
மூளையின் சிந்தனைகளே எப்பொழுதும் பொங்கட்டும்
வார்த்தையில் உண்மை நிச்சயம் நிலைக்கட்டும்
செயலில் நேர்மை உறுதியோடு மலரட்டும்
ஒவ்வொரு உயிரும் மகிழ்ச்சியோடு வாழட்டும்
வாழ்வெல்லாம் எதிர்பாராமல் எதையும் செய்வோம்
உதவிகளும் நன்மைகளும் எதுவும் கொடுப்போம்
மகிழ்ச்சி ஏற்படுத்துவோம் சிரிப்பும் உதிக்கட்டும்
விழிக்க வைத்தாலும் வாழ வைப்போம்
அனைத்தையும் காப்பாற்றுவோம் அக்கறையோடு செயல்படுவோம்
உலகத்தில் வாழ்ந்தாலும் உள்ளங்களிலும் வாழ்வோம்
கவிஞர் சுஜி மாதேஸ்
பெரிய புளியம்பட்டி
042. மகிழ்வித்து மகிழ்
மனித மனதிற்கு மா மருந்தாய்
மகிழ்ச்சி என்னும் அலைவரிசை
அன்றாட செவிகளில் தேன் பாயும்
சோகம் கொண்ட உள்ளம் மகிழ
உற்சாகம் நிறைந்து எழுந்து ஓட
புத்துணர்வை அள்ளி புதையலாய் தருகிறது
மாசு கொண்ட உலக வாழ்வில்
போராட்டங்கள் சூழும் தின வேளையில்
மனம் அழுத்தம் கொண்ட மனிதர்களுக்கு
இதம் தரும் தாலாட்டாய் அளிக்கிறது
வான்மறை கொண்ட நூலாய்
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் போல்
வாழ்க்கைக்குள் வசந்தம் வீசி வர
அலை வரிசையாய் மிதந்து வருகிறது
அழகான இசையின் கான கீதங்கள்
அன்றாட பொழுதினில் கேட்க திகட்டாதாய்
உறங்கி எழும் நேரம் தவிர்த்து
உற்ற தோழனாய் மகிழ்ச்சி அலைவரிசை
நீண்ட ஆயுளுடன் வாழ்க பல்லாண்டு
கே நஜீமா ஜமான்
சவுதி அரேபியா.
043. மகிழ்வித்து மகிழ்
மார்கோனி கண்டுபிடித்த அறிவியல் புத்தி.
போர்கால செய்திகள் தந்திட்ட யுக்தி.
முதல் பொழுதுபோக்கு அறிவியல் சாதனம்.
காதில் வந்து சேர்க்கும் அதிசய நூதனம்.
மகிழ்வித்து மகிழும் அதிசய பாத்திரம்.
மகிழ்ச்சிப்பண்பலை அட்சயப்பாத்திரம்.
நாற்புற திசையும் ஒலியலைகள்
நாட்டு நிகழ்வுகள் தரும் வானொலிகள்.
தகவல் செய்திகள் கொண்டு வரும் உன்னத தூதன்.
அகவல் ஓசையில் ஆனந்த தேவன்.
கானம் பாடும் எந்திர பறவையினம்.
ஞானம் போதிக்கும் மந்திர முனிவரினம்.
வேலை பளுவை குறைக்கும் நண்பன்.
மூளை சோர்வை துடைத்திடும் பண்பன்.
ஏழைவீட்டு அங்காளி பங்காளி இவன்.
பேழை (பெட்டி)யில் இருக்கும் முதலாளி இவன்.
மகிழ்ந்து மகிழ்பவன் மகிவித்து மகிழ்பவன்.
மகிழ்ச்சி எப்.எ எனும் சிறந்த நண்பன்.
தன .மகேஸ்வரி.
ஆசிரியர்.
கடலூர்
044. மகிழ்வித்து மகிழ்
இந்த உலகில் நீ பிறந்ததற்காக மகிழ்ச்சி கொள்...
துன்பங்கள் இல்லாத
இன்பங்களை அனுபவிக்கிறாய் என்று
நினைத்து மகிழ்ச்சி கொள்....
வசதி, வாய்ப்பு இல்லை என்றாலும்
மன நிறைவோடு இருக்கிறாய் என்று
நினைத்து மகிழ்ச்சி கொள்...
நீ உழைக்கும் போது ஏற்படக் கூடிய
கஸ்டங்களை நினைத்து புலம்புவதை விட
புகழ் வந்து அடையும் போது மகிழ்ச்சி கொள்...
புத்தகங்களை வாசிக்கும் போது
அனைத்தையும் மறந்து விட்டேன் என்று
நினைத்து மகிழ்ச்சி கொள்...
நீ மட்டுமல்லாமல் அனைவரும்
இன்பக் கடலில் மூழ்க வேண்டும் என்று நினைத்து மகிழ்ச்சி கொள்..
வாழ்க்கையில் கண்ணீரோடு இல்லாமல் சிந்தனையோடு
செயல் பட்டு இருந்தால் மகிழ்ச்சி தானாகவே வரும் ....
இதுவே நான் எழுதிய கவிதை ...
பா. பர்ஜானா.
முதுகலை இரண்டாமாண்டு தமிழ்,
அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி –
சீனிவாசா நகர். ஊற்றங்கரை -
கிருஷ்ணகிரி மாவட்டம்.
045. மகிழ்வித்து மகிழ்
மண்வளம் காத்து மனிதம் போற்றிடு
மகிழ்வு வீச்சீ உன் வார்த்தையே
குழந்தையின் சிரிப்பு கல்லக்கபடம் அற்றது
குடும்பத்தோடு உரையாடி மகிழ்வித்து மகிழ்
விடியற்காலை முதல் இரவு வரை
விடிந்தவுடன் கேட்கும் இனிய தென்றல்
காதல் இனிக்க மனதும் இனிக்கும்
காண்பது இல்லை கேட்பது இன்பம்
வானிலை பூகம்பம் எங்கு வந்தாலும்
வானம் முழுக்க பரப்பிட வருமே
நாமும் தினமும் பலருக்கு உதவிட
நாளும் மனதில் சூடிடும் மகிழ்வு
சகிப்புத் தன்மையால் சமூக மலரும்
சகோதரத்துவம் வளர்ந்த சண்டையே வராது
தமிழ் மொழியின் சிறப்பு சாலச்சிறந்தது
தமிழை வளர்த்து மகிழ்வித்து மகிழ்
பாட்டு கேட்டு பக்குவம் அடைந்தது
பாட்டால் மயங்கி மகிழுந்து வாழ்வோம்
Amb.ப.பஞ்சாபகேசன்
முதுகலை ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
பொன்பரப்பி
அரியலூர் மாவட்டம்
046. மகிழ்வித்து மகிழ்
பறந்து சிதரும் பறவைக்கூட்டம்
இட்டு செல்லும் எச்சத்தில்
முட்டி மோதி வளர்ந்து அசைகிறது மரம்
நம்மை தழுவி மகிழ்விக்கிறது காற்று தினம்….
நம்மைக் காக்க நாம் காக்கும் நாய்
வாளை அசைத்து நாவைச் சுழற்றி
நன்றி சொல்வதை நன்றி மறவாது
புன்னகித்து மிளிர்விக்கிறது முகம்…
கூண்டுக்குள் அடைத்தாலும்
அதிலும் காதலை வெளிப்படுத்தி
உள்ளத்தைக் கவர்கிறது லவ் பேட்ஸ்….
கூண்டையும் அன்பாக்கி கவர்கிறது மனம்
மகிழ்ச்சியில் திழைக்கச் செய்கிறது அதன் குணம்….
பள்ளிப்பருவம் கடக்கும் போது இழந்த மகிழ்ச்சி
கல்லூரிப்பருவத்தில் மறந்து போவது போல்
வேலைசூழலும் குடும்பச்சூழலும் மறப்பதில்லை
அழுப்புகளுக்கிடையே வாழ்வை ….
நித்தம் வாழ்வை இயற்கையோடு வாழ்ந்து
மகிழ்வோம் வளர்ந்து சிறப்போம் ….
மகிழ்வித்து மகிழ்….
முனைவர் பா.மனோன்மணி,
உதவிப்பேராசிரியர்,
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி,
மீனம்பாக்கம்
047. மகிழ்வித்து மகிழ்.."
மாசில்லா கருணை மக்கள் மீது மொழிய..
மனிதநேயம் வென்று மாற்றம் பூக்குக...
மதிப்பு மாண்பு மனிதம் சிறக்க...
திங்கள் போலவே திரண்ட குளுமையை..
தேடிய செல்வத்தை தெளிந்த ஞானம்..
வழங்கும் அறத்தை வாழ்த்த வெல்க..
தியாகம் தீரம் திகைப்பு தருமே..
அறமும் பொருளும் அன்றாடம் வெல்ல...
போராடும் பொருமை பொதுப்பணி செழுமை..
வாழும் கனிவும் வளத்தை தந்திட....
நேர்மை தூய்மை நிலத்தின் வாழ்வென..
நீண்ட உழைப்பு நிலைக்கு வெல்க....!
வீரகனூர் ஆ இரவிச்சந்திரன் சேலம்
048. மகிழ்வித்து மகிழ்.
ஈட்டிமுனைகள் தாக்கும்போதும்
அன்பின் குடை நீட்டிவிடு மனமே.
வாய்க்கரிசி வீழும் போதும் வாழ்த்தியே
அட்சதையைத் தூவிடு தினமே.
எவர்மீதும் குறைகாணும்
குறைகுடமாய் வாழ்க்கை.
வேரினிலே சுடுநீர் ஊற்றி வெறி தீர்க்கும் வேட்கை.
தீமையொன்றும் பிறராலே தீப்பற்றித் தொடராது.
யாவும் நாம் செய்கின்ற செயலன்றி வேறது?
அடுத்தவர் மீதே கண்கள் வைக்கும்
திருட்டுத்தனமும் எதற்கு?
கிடைத்ததை எல்லாம்
சுருட்டிக்கொள்ளும்வெக்கக்கேடே இழுக்கு.
சதையாய்ப் பெண்ணைப் பார்க்கின்ற
சபலத்தை வெளியே விரட்டு.
சந்திக்கின்ற மனிதரையெல்லாம்
சமமாய் முதலில் நடத்து.
சாட்சி இல்லா சந்தர்பங்களிலே
வழுக்காதிருக்கட்டும் ஒழுக்கம்.
ஏய்த்துப்பிழைக்கும் மனிதரைப் பார்த்து
விலங்குகள் விழுந்தே சிரிக்கும்.
ஆசை ஒன்றும் தவறில்லை
பேராசைக்கு என்றும் மருந்தில்லை.
பேசும் வார்த்தையில் கவனம் வைத்தால்
துன்பம் தேடியே வருவதில்லை.
உயிர்களின் கருப்பையைச் சிதைக்காமல்
நிறையட்டும் மனித இரைப்பை.
இறைவனும் விழுந்து வணங்கும் உயர்வே
உழுதிடும் உழவனின் கலப்பை.
சாதியும் மதமும்
சிலுவை ஆணிகள் பெயர்த்து வெளியே வீசிவிடு.
அன்பு ஒன்றே உயிர்களை இணைக்கும்
இதயம் திறந்தே பேசிவிடு.
விரிந்த பூக்களின்
வாசம் போல இதழ்களில் சிரிப்பை எழுதிவிடு.
பிறந்து வந்த குழந்தையைப்போல
களங்கம் இன்றித் தெளிந்துவிடு.
பொதுவாய்ச் சுழலும்
பூமியைச் சமமாய் உயிர்களுக்கெல்லாம் பங்கிடு.
இயற்கையை உயிராய்
நேசிக்கின்ற இதயமே இறைவன் கும்பிடு.
நறுமுகை
கோவை மாவட்டம்
049. மகிழ்வித்து மகிழ்
பெற்றோரை மகிழ்விக்க நன்றாக படிப்போம்
ஆசிரியர்களை மகிழ்விக்க நல்லமதிப்பெண் எடுப்போம்
நண்பர்களை மகிழ்விக்க சுற்றுலா சென்றிடுவோம்
உடன்பிறப்புகளை மகிழ்விக்க உதவிகள் புரிந்திடுவோம்
மனைவியை மகிழ்விக்க உத்தியோகத்தில் உயர்ந்திடுவோம்
குழந்தைகளை மகிழ்விக்க குழந்தையாய் மாறிடுவோம்
மழலையாய் கொஞ்சிடுவோம், சேட்டைகளோடு விளையாடுவோம்
கடவுளை மகிழ்விக்க கருணையோடு வணங்கிடுவோம்
உறவுகளை மகிழ்விக்க மரியாதையோடு நடத்திடுவோம்
ஆதரவற்றோரை மகிழ்விக்க நம்மால் முடிந்தது
பணமோ பொருளோ உணவோ கொடுத்திடுவோம்
பெற்றோர்களை இழந்த சிறுவர்களை மகிழ்விக்க
ஆதரவுகரம் நீட்டிடுவோம், கல்வி கற்க
சமூகத்தில் சாதித்திட துணையாய் இருந்திடுவோம்
பிறந்தநாள் திருமணநாள் போன்ற தினங்களில்
இயலாத முதியோருக்கு இயன்றதை செய்திடுவோம்
மனிதத்தை வளர்ப்போம், மகிழ்வித்து மகிழ்வோம்
பிறரின் மகிழ்ச்சியில் இறைவனை காண்போம்
வி.கணேஷ் பாபு , ஆரணி
050. மகிழ்வித்து மகிழ்:
நேர்மையான எண்ணங்களை வளர்த்துக் கொள்
துன்பப்படுபவர்களுக்கு உதவ கற்றுக் கொள்
புது ஆண்டில் புத்தாடை வாங்கி பார்
இல்லாதோருக்கு கொடுத்து மகிழ்ச்சி பார்
இரவு நேர உணவு கடை
பசித்தோர்க்கு உணவு படை
உன்னால் முடிந்த வரையில்
உதவிட காட்டும் தயக்கம் தகர்த்து
அதிகாலையில் புன்னகைக்க உறுதி கொள்
அதனால் ஆயுட்காலம் நீளும் நினைத்துக் கொள்
வாழ்க்கையில் எதிர்வரும் துன்பத்தை எதிர்த்து நில்
காலம் உனக்கானது என்பதை ஒத்துக்கொள்
அதிகாலை நேரத்து நடை பயணம்
நடப்போர்க்கு புன்னகையால் சொல் வணக்கம்
ஒருவர்க்கு உன் ஆறுதல் வார்த்தையும்
சிறு உதவியும் வாழ்க்கை ஆகும்
உன் எளிமையான உதவும் தன்மையால்
பலரின் வாழ்க்கை ஒருபடி உயரலாம்
கவிச்சுடர் எ. குப்பன்
கள்ளக்குறிச்சி
051. மகிழ்வித்து மகிழ்
உன் விருப்பத்தோடு கண்டமிட்டு
கண்டம் பாயிந்தேன்...
உள்ளுரில் அனைத்துணைச் சுமையும் நீ சுமந்தாய்...
எனக்காக உன் கண்கள் ஒவ்வொரு நாழிகையும்
உன்னிடத்தில் இருண்டது...
என்னிடத்தில் என் கண்களும் நமக்காக கலங்கி நின்றது...
இருவருக்கும் அலைபேசியில் வார்த்தையும் காணொளியமாக
வாழ்க்கை நகர்ந்தது...
நாம் எதுவும் சொல்ல முடியாமல்
மழழையாக நடித்தோம்...
மகனைப் பார்க்க நினைத்தே என்னிதயம்
நெடுநாட்களும் அடம்பிடித்தது...
அவனின் குறு நடையைச்
குறுச்செய்தில் கண்டேன்...
நான் கும்பிடாத தெய்வங்கள் இல்லை...
அடுத்த வீட்டு பிள்ளையைத்
தன் பிள்ளையாக அனைத்தேன்
தாகம் குறையவில்லை...
தவமிருந்தேன் தாயகம் திரும்ப
தங்கம் வங்கியில் தங்கியதை என்னி
தேம்பி அழுதேன்...
விளக்கை அனைத்ததும்
கண்களைத் துடைக்க வசதியானது...
விடிந்ததும் என்னிதயம்
அனைத்தையும் மறந்து புதுமையானது...
வட்டையில் ஒட்டிய கரையாக அத்தனையும்
ஓரம் ஒதிங்கி விட்டது...
முட்டி தள்ளும் இளமையும் கழிந்தது அத்துடன்
வருமையும் ஒழிந்தது...
நீ வாழும் நிலத்தில் அருகில் கூட
என் சுவாச காற்று இல்லாமல் என்னிதயம் வாழ்ந்து விட்டது ...
யார் செய்த சதியோ இருவரும் பாதி கனவில் வாழ்ந்து விட்டோம்...
மீதி வாழ்க்கையை இருவரும் மகிழ்வித்து மகிழ் வாழ்வோம்...
முனைவர்.மா.பாலமுருகன்
உதவிப் பேராசிரியர்
நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்.
052. மகிழ்வித்து மகிழ்
அன்பின் மழையில் நாம் நனைந்து
ஓரறிவிலிருந்து ஆறறிவு வரை மகிழ்விப்போம்
அனைவரையும் நனைய வைத்து மகிழ்வோமே
அழுகின்ற கண்ணீரை துடைத்து மகிழ்வோமே
உதவும் கரங்களாய் செயல்பட்டு மகிழ்வோமே
பக்தி மொழியான தமிழால் மகிழ்வோமே
புலன் அழுக்கற்ற நண்பர்கள்களோடு மகிழ்வோமே
நடமாடும் தெய்வங்களான பெற்றோர்கள் உள்ளம்
பெருமிதம் கொள்ளும் அளவில் மகிழ்வோமே
அமைதிப் பாதையில் நடந்து மகிழ்வோமே
ஒற்றுமை பாதையில் சென்று மகிழ்வோமே
தாயும் பிள்ளையாய் பழகி மகிழ்வோமே
தரணியில் சகோதரத்துவத்தைப் போற்றி மகிழ்வோமே
வேற்றுமையில் ஒற்றுமையைக் கண்டு மகிழ்வோமே
நேர்வழியில் நின்று உயர்ந்து மகிழ்வோமே
பாரினில் தர்மத்தை செழித்து மகிழ்வோமே
அனைவரும் ஒன்றாய் செயல்பட்டு மகிழ்வோமே
மனிதநேயத்துடன் மாமனிதனாய் வாழ்ந்து மகிழ்வோமே
இசைப்பேரரசி
லதா சங்கரன் பல்கலைக்கழக
இசைத்துறை தலைமையாளர்
சென்னை
053. மகிழ்வித்து மகிழ்
துன்பம் மக்களுக்கும் மாக்களுக்கும் பொதுவானது
மகிழ்ச்சி மனித உயிர்க்கு மட்டும்
மகிழ்ச்சி விரோதியையும் நண்பனாக மாற்றும்
மகிழ்ச்சி இரத்த ஓட்டத்தை சீராக்கும்
மகிழ்ச்சி இறுக்கத்தை நீக்கி சுகமளிக்கும்
மகிழ்ச்சி ஆயுளை அதிகரிக்கும் மருந்து
அன்பை அதிகரித்து பண்பை வளர்க்கும்
மனங்களை வெல்லும் மகத்தான செயலாகும்
மாண்பை அளிக்கும் மமதையை அழிக்கும்
மகிழ்வித்து மகிழ்வதில் பெறும் இன்பம்
ஆனந்தத்தைக் கொடுக்கும் அற்புதம் படைக்கும்
சோகத்தை நீக்கி சொர்கத்தை காட்டிடும்
கோபத்தைக் கொடுத்தால் விரோதம் வளர்ந்திடும்
மகிழ்ச்சியைக் கொடுத்தால் நட்பு விரிந்திடும்
மகிழ்ச்சி மன அழுத்தத்தை குறைக்கும்
பகிரும் போது பாசத்தை வளர்க்கும்
மகிழ்வித்து மகிழ்வோம் மனங்களை வெல்வோம்.
மதிப்புறு முனைவர்
லோ வரகுண பாண்டியன்
உத்தரமேரூர்
054. மகிழ்வித்து மகிழ்
நகையைக் காட்டி நட்பைப் பெருக்குக !
சிரித்துச் சிரித்து அழுத்தம் குறைக்க !
மகிழ்வாக எண்ணி உள்ளம் திறக்க !
திறந்த உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்குக !
மகிழ்ச்சியின் வழியே செய்திகளைப் பகிர்க !
பகிர்ந்த செய்தியில் துன்பத்தை நீக்குக !
உன்னை மதியார் முன்னே வாழ்க !
மகிழ்வுடனே வாழ்ந்து இனியன செய்க !
இனியன செய்தும் கேடுசெய்யின் மகிழ்க !
சொல்லில் தீஞ்சொல்லைத் தவிர்த்து மகிழ்க !
கொடுமை செய்யின் நன்மையே செய்க !
பணியிலிருந்து விலக்கினாலும் மகிழ்வுடன் செல்க !
அடுத்த பணிபற்றிய முயற்சியில் செல்க !
உலகம் பரந்துபட்டது என்பதை உணர்க !
உலக உயிர்களை நினைத்து மகிழ்க !
விழிப்புடன் செயல்பட்டு நடிப்பற்று மகிழ்க!
பெற்றோரைக் காத்து நடந்து மகிழ்க !
மெய்ப்பொருள் கல்வி கற்று மகிழ்க !
மா.சுரேசு.
முதுகலைத் தமிழாசிரியர்,
சி.இ.ஓ.ஏ. பதின்ம மேனிலைப்பள்ளி,
சல்வார்பட்டி,
சாத்தூர்.
055. மகிழ்வித்து மகிழ்
நீ இந்த உலகில்
பிறந்ததை கண்டு மகிழ்ச்சி கொள்!..
தாய் தந்தை இருவரும்
கிடைத்ததை கண்டு மகிழ்ச்சி கொள்!...
தான் பள்ளிக்கு
செல்வதை கண்டு மகிழ்ச்சி கொள்!..
அங்கு பல தோழிகள்
கிடைத்ததை கண்டு மகிழ்ச்சி கொள்!..
பள்ளியில் ஆசிரியர் அனைவரையும் சிரிக்க
வைத்ததை கண்டு மகிழ்ச்சி கொள்!...
பள்ளி படிப்பை முடித்து அடுத்த நிலைக்கு
செல்வதை கண்டு மகிழ்ச்சி கொள்!...
தான் நினைப்பதை நிறைவேற்றும்
பெற்றோரை கண்டு மகிழ்ச்சி கொள்!...
இன்பமாக இருக்க
துன்பத்தை மறந்ததை
கண்டு மகிழ்ச்சி கொள்!...
வாழ்வில் அனைத்தும்
கிடைக்கும் படி செய்யும்
உடன்பிறப்பை கண்டு
மகிழ்ச்சி கொள்!...
உயிர் உள்ளவரை
அனைவரையும் மகிழ்ச்சியாக
வைத்துக் கொள்வதை கண்டு
மகிழ்ச்சி கொள்!...
கிடைக்காத ஒன்றை
எண்ணி வருந்துவதை விட
கிடைத்ததை வைத்து வாழ
நீ கற்றுக்கொள்!....
மு. லோகநாயகி
இளங்கலை மூன்றாமான்டு தமிழ்,
அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
சீனிவாசன் நகர்,
ஊற்றங்கரை-635 207
கிருஷ்ணகிரி -மாவட்டம்
056. மகிழ்வித்து மகிழ்
மகிழ்ச்சி என்பது யாருக்கும் பிறக்கும் போதே கிடைப்பதில்லை!..
பணக்கார வீட்டில் பிறக்கும் குழந்தைக்கு மகிழ்ச்சி என்பது கிடைப்பதில்லை!..
ஆனால் ஏழையாக இருந்தாலும் அந்த வீட்டில் பிறக்கும் குழந்தைக்கு அதிகமாக கிடைத்துள்ளது!..
ஒரு பறவை பிறக்கும் போது தனிமையே உணர்ந்தது!..
ஆனால் அதே பறவை தன் வாழ்க்கையே நினைத்து மகிழ்ந்தது!..
மகிழ்ச்சி என்பது தனிமையில் கிடைப்பதில்லை!..
பல உறவுகளை சேர்ந்த போதே கிடைக்கும் மகிழ்ச்சியே தனி!..
வாழ்க்கையின் முன்னேற்றத்தை கண்டு மகிழ்ந்து கொள்!..
இந்த உலகில் உண்மையான மகிழ்ச்சி என்பது உண்மையான நண்பர்களை சந்தித்த போதே!..
குழந்தையின் மகிழ்ச்சி பெற்றோரின் கனவு!..
ஒரு தாயின் மகிழ்ச்சி என்பது தன் குழந்தையின்
வெற்றியினை பார்த்த பிறகு கண்ணீராக வெளிப்படுகிறது!..
அ.மோனிஷா
இளங்கலை மூன்றாமான்டு தமிழ்,
அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுரி
சீனிவாசன் நகர்,
ஊற்றங்கரை-635 207
கிருஷ்ஙகிரி-மாவட்டம்
057. மகிழ்வித்து மகிழ்!
மகிழ்வித்து மகிழும் மகத்துவம் மட்டுமே !
மறுபடியும் வையத்தில் மையமாய்ச் சுழலுதே!
மண்ணும் உள்ளதே உயிர்கள் வாழ!
மன்னன் ஆள்வதும் மக்களைப் பேண!
கதிரவன் புவிதனில் கதிர்களை வீச!
கதிரும் விளைவது பசியினைப் போக்க!
மலரின் அழகும் மற்றவர் காண!
மணமும் தருமே மனமும் குளிர!
தென்றல் வருமே தேகம் தழுவ!
மன்றம் யாவும் மனங்கள் மகிழ!
பெற்றோர் வாழ்வும் பிள்ளைகள் மகிழ!
சுற்றம் சூழ்வதும் மகிழ்வினைப் பகிர!
பிரபஞ்சம் முழுவதும் சுழல்வதும் எதற்கோ!
பிறரை மகிழ்வித்து மகிழ்ந்திடத் தானோ!
மகிழ்வித்து மகிழும் மகிழ்ச்சி வானொலியே!
ஐந்தாம் ஆண்டில் ஒலிப்பதும் மகிழ்வே!
ஆனந்த நாதமாய் ஆண்டெல்லாம் ஒலிக்க!
பேரின்ப வெள்ளமாய் பொங்கிப் பெருக!
நன்று உயர நானிலம் மகிழ
ஒன்றாய் இணைந்து வென்றிட வாழ்த்துவோம்!
கவித் தென்றல் ஆதி
அம்பத்தூர்,
சென்னை- 53
058. மகிழ்வித்து மகிழ்!!!!!
பிள்ளை சிரிப்பு கள்ளமில்லை
பிறருக்கு கொடுக்கும் துன்பம் இல்லை
கொஞ்சி மகிழும் பேச்சுக்களாலே
கொள்ளை போகும் எவரின் மனமும்...............
மனிதன் வளர்ந்து மனம் மாறிட
குணத்தை மறந்து பணம் தேடிட
துன்பங்கள் கொடுக்க துணிந்து போகிறான்
தொல்லைகள் கொடுத்து மனிதன் வாழ்கிறான்...............
சுயநலம் மட்டும் நாடும் மனிதன்
சூழ்ச்சிகள் செய்து நாளை கழிக்கிறான்
ஒருவனை ஏச்சி ஒருவன் வாழ்ந்திட்டு
உயிரற்ற பிணமாய் கரைந்து போகிறான்..............
உயர்ந்தவன் என்றும் தாழ்ந்தவன் என்றும்
உலகினில் ஏனோ வேற்றுமை எண்ணம் ஒருவர் மனதினை காயப்படுத்துவதால்
உனக்கு என்னையா அத்துனை இன்பம்...........
ஒவ்வொரு மனிதன் ஒவ்வொரு குணமே உணர்ந்து வாழ்தலே
மனித இயல்பே இருந்தும் என்றுதான் புரிய போகிறான்
மனிதன் மனிதனாய் என்று மாறுவான்...............
கள்ளம் கபடமில்லாத மனதை கொண்டு கலவர குணத்தை அறவே மறந்து
ஒவ்வொரு மனிதனையும் சமமாய் மதித்து ஒற்றுமையோடு சிரித்து வாழு...................
வஞ்சனை கொண்ட மனமும் வேண்டாம் வன்முறை நிறைந்த வார்த்தைகள் வேண்டாம்
அன்பு நிறைந்த வார்த்தை உதிர்த்து கருணையோடு காத்திட பாரு.............
உந்தன் நலனை நாடுவது போலே அவரின் நலனிலும் அக்கறை கொள்ளு
உன்னை நீ நேசிப்பது போலே அவரையும் கொஞ்சம் நேசித்து வாழு.................
நீ மட்டும் சிரித்து நீதி இல்லை பிறரை மகிழ்வித்து நீயும் அகில பண்புள்ள வார்த்தைகள்
உதிர்க்க தொடங்கினால் வம்புள்ள உலகம் மறைய தொடங்கும்...................
முனைவர் எஸ். கிரேசி ராணி,
துணை முதல்வர்,
விநாயகா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ,
கீழப்பழுவூர்.
059. மகிழ்வித்து மகிழ் !!!!!!!
அன்பால் பிணையப்பட்ட வாழ்க்கை எப்போதும்
மகிழ்ச்சியால் நிரம்பி வழியும்!!!!!!!!!!
மகிழ்ச்சியோடு வாழ்தல் பிணி இன்றி வாழ வழிவகுக்கும்!!!!!!!!
மகிழ்வோடு வாழ்தலும் பிறரை மகிழ்வித்து வாழ்தலும்
வாழ்க்கையில் உயர் சிறப்பு பெறுவதற்கு சான்று!!!!!!!!
மகிழ்ச்சி என்பது அகத்தில் தோன்றுவதே என்பதை அறிந்து கொண்டால் மனதோடு,
மனம் விட்டு, மனதார உயிர்களை நேசிப்பாய் நீ!!!!!!!!
புரிந்துகொள் தோழா!!!
புன்னகையோடு பூத்திருப்பதே மகிழ்ச்சி!!!!!!
சிறகடித்து பறக்கும் சிட்டுக்குருவி என்றும் சோகம் கொண்டதில்லை!!!!!!!!!
இருக்கும் சூழ்நிலையை மகிழ்ச்சியாக வைத்திருப்பது உன் கையிலே!!!!!!!!
மலர்ச்சியுடன் வைத்திருக்கும் மனதிலே!!!!!!
மகிழ்ச்சி என்பது எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும்!!!!!!!!!
மலர்ந்த முகத்தில் மகிழ்ச்சி பெருகும்!!!!!!
பெருகும் மகிழ்ச்சி பெருங்கடலாக அடுத்தவர் முகம் நோக்கி அது பாயும்!!!!!!!
பிறர் தேவை அறிந்து உதவினாலே மகிழ்ச்சி என்பது வளர்ச்சி பெறும்!!!!!
பிறர் குணமறிந்து பழகினாலே மகிழ்ச்சி என்பது வளர்ச்சி பெறும்!!!!!!!!!!
மகிழ்ச்சியோடு வாழ்ந்து பார்!!!!!!!!!வாழ்க்கையின் அர்த்தம் புரியும்!!!!!!!
வாழ்தலின் நெறிகள் தெரியும்!!!!!!!!!!
அறிந்து கொள் தோழா!!!!!
அன்பும் பண்பும் மகிழ்ச்சியின் தூண்டுகோல்கள்!!!!!!!!!
பிறரை மகிழ்வித்து வாழ்ந்து பார்!!!!!!!
வாழ்க்கை இனிமையானது என்பதை நீ உணர்வாய்!!!!!!!!!!
முனைவர் ஜோ.ஜெயா,
முதல்வர் அவர்கள்,
விநாயகா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கீழப்பழுவூர்.
060. மகிழ்வித்து மகிழ்
அன்பான நேயர் சொல்லில் மகிழ்ச்சி
இன்றுவொரு தகவலைபகிர்வதில் மகிழ்ச்சி
நேரத்தை அடிக்கடி கூறுவது மகிழ்ச்சி
வாசகருக்கு பிடித்தப் பாடல் மகிழ்ச்சி
வானிலை அறிவிப்பில் கண்களில் மகிழ்ச்சி
விளம்பரம் தருகின்ற வணிகர் மகிழ்ச்சி
போட்டி வாயிலாக சான்றிதழ் மகிழ்ச்சி
முக்கிய தினங்களில் விருதுப்பெற மகிழ்ச்சி
பேட்டி கொடுத்தவர் பிரபலமாவதில் மகிழ்ச்சி
விழிப்புணர்வு செய்வதில் சமுதாயம் மகிழ்ச்சி
ஆண்டுகள் கடக்கும் மகிழ்ச்சிபண்பலை
சிறப்பான பணியை தொடர்வதில் மகிழ்ச்சி !
மக்கள் சேவையை மகிழ்ச்சியாக ஆற்றுங்கள்!
மகிழ்ச்சி பண்மலை வாழிய வாழியவே!
பேரா.ச.குமார்
061. மகிழிவித்து மகிழ்....
மகிழ்ச்சி என்பது எங்கே இருக்கிறது..?
அது அவன் மனதில்
தான் இருக்கிறது....!
நேற்று நடந்தவற்றை உங்களால்
மாற்ற முடியாது... நாளை
நடப்பதை தடுக்க முடியாது....
இக்கணத்தில் மகிழ்ச்சியாக வாழுங்கள்....!
வாழ்வில் மிகப்பெரிய மகிழ்ச்சி
எது தெரியுமா..? உங்களால்
முடியாது என அடுத்தவர்கள்
கூறியதை முடித்துக் காட்டுவது...!
மகிழ்ச்சி என்பது
நம்மோடு பயணிக்கும் மனிதர்களை
பொறுத்தே அமைகிறது...!
பிறர் உன்னை ரசிப்பதை விட
உன் மனம் உன்னை ரசிக்க
வாழ்வது அதீத மகிழ்ச்சியை தரும்...!
எந்த இடத்தில் தோற்றிர்களோ...
அங்கே ஜெயித்து காட்டுங்கள்...!
மனம் மகிழ்ச்சியாக இருக்கும்....!
மனதிற்கு பிடித்தவருடன்
வாழ்ந்தால் மகிழ்ச்சியாகத் தான் இருக்கும்....!
உன் மகிழ்ச்சியை அடுத்தவர்களிடம்
தேடாதே.... உனக்குள் தேடு
மகிழ்ச்சியாக இருக்கலாம்...
வாழ்வில் எல்லையில்லா
மகிழ்ச்சி எது தெரியுமா.?
நம்மை ஏளனம் செய்வோர்
முன்னால் வாழ்ந்து காட்டுங்கள்...!
பூவரசன் ப
சின்ன பாளேத்தோட்டம்
062. மகிழ்வித்து மகிழ்
நாம் மகிழ்ச்சியாக இருந்தால் நம் வாழ்க்கை
நன்றாக இருக்கும்!
அதுவே,நாம் பிறரை மகிழ்வித்தால்
வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும்!!
நம் எண்ணங்கள் நம் மகிழ்ச்சி
நம் துயரம் நம் நிகழ்வுகள்
நம்மை புரிந்து கொண்டவர்களுடன்
பகிர்வதே நம் மகிழ்ச்சி !!
பிறரை மகிழ்விப்பது
பொது நலம் என்றாலும்,
நம் மகிழ்ச்சியும் அதில் உள்ளதால்
"மகிழ்வித்து மகிழ்வது"
சுயநலமும் கூட!!
மகிழ்வித்து மகிழ்வோம்!!!
அ. ஷபீர்,
கிருஷ்ணகிரி.
063. மகிழ்வித்து மகிழ்
ஓ எங்கள் மகிழ்ச்சி 'Fm'
நீ எங்களுக்கு கிடைத்தது
வரம்மல்ல நாங்கள் செய்த தவம்!
நாம் மகிழ்ச்சியாக இருந்தால்
நம் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்
நம் குடும்பம் மகிழ்ச்சியாக இருந்தால்
நம் உறவினர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்
நம் உறவினர்கள் மகிழ்ச்சியாக இருந்தால்
நம் ஊர் மகிழ்ச்சியாக இருக்கும்
நம் ஊர் மகிழ்ச்சியாக இருந்தால்
உலகம் எங்கும் மகிழ்ச்சி பெருகும்
தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழும் படி
செய்வது தான்- மகிழ்ச்சி
பல துன்பங்கள் நமக்குள் இருந்தாலும்
அந்த துன்பத்தை இன்பமாக
மாற்றுவது தான் மகிழ்ச்சி
நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி
என்பது இடங்களை பொறுத்து –
அமைவதில்லை நம்மோடு பயணிக்கும் மனிதனை
பொறுத்து அமையும்
மகிழ்ச்சி என்ற முகவரி உன்னிடம் இருந்தால்
மகிழ்ச்சி என்னும் கடிதம்
உன்னை வந்தடையும்
மகிழ்வித்து மகிழ்வது என்பது...
முகம் மலரும் படி செய்வது அல்ல
உள்ளம் மகிழும்படி செய்வதே மகிழ்ச்சி
அப்படிப்பட்ட மகிழ்ச்சியை தருவதே
நம்முடைய மகிழ்ச்சி' -Fm'...
வாழ்க மகிழ்ச்சி '- Fm' ..
வளர்க மகிழ்ச்சி-Fm .....
மு. பூபாலன்,
போக்கம்பட்டி( கிராமம்) ,
பளோத்தோட்டம் (அஞ்சல்) ,
போச்சம்பள்ளி (வட்டம்) ,
கிருஷ்ணகிரி (மாவட்டம்) .
064. மகிழ்வித்து மகிழ் ...
பெற்றோரை மகிழ்வி பேரின்பம் அடைவாய் .....
பெற்ற பிள்ளைகளை மகிழ்வி பேரானந்தம் அடைவாய் ....
உற்றார் உறவினரை மகிழ்வி உற்சாகமடைவாய் ....
சொந்த பந்தங்களை மகிழ்வி சொக்கித்தான் போவாய் .....
கற்றுக் கொடுத்த ஆசானை மகிழ்வி கடவுளிடம் பரிசை பெறுவாய் ....
உன் உடன் இருப்பவரை மகிழ் உந்து சக்தியை பெறுவாய் ....
உன்னை நம்பியோரை மகிழ்வி நாளும் நாளும் நலம் பெறுவாய் ...
இயலாதோரை மகிழ்வி உன் இலக்கை அடைவாய்...
அன்பை கொடுத்து மகிழ்வி நீ அனைத்தையும் அடைவாய் ....
இயன்ற வரை இயலாதவருக்கு கொடுத்து மகிழ்.
உன் உண்மையான மகிழ்வை அடைவாய் ......
மகிழ்வித்து மகிழ்!!!!
கொங்கு தமிழச்சி...
065. மகிழ்வித்து மகிழ்
பச்சை மரங்கள் சூழ்ந்திருக்க
பாடும் குயில்கள் அதிலிருக்க
இவ்வுலகம் மகிழ்ச்சியின் வீடு
நம் துன்பங்கள் நீங்கிடுமே பாடு....
புல்லின் நுனியில் தேங்கிடும்
பனித்துளியில் கண்டிடு சொர்க்கம்!!!
அதைக் காணாமல் கடந்திட துடிக்கும்
மனித மனங்களில் நரகம்!!!
குருவிகளின் கூட்டத்திற்கு குடியுரிமை எதற்கு?!
மகிழ்ச்சி மட்டும் போதுமே,மதங்கள் சாதிகள் எதற்கு?!
விளையாடு மகிழ்ந்து அலை மேலே மிதந்து
காலங்கள் கடந்து கவிதைகளாய் பறந்து
திரும்பிப் பார்க்க நினைவுகள் போதும்!
கடந்துச் செல்ல முற்படு பாதைகள் நீளும்!
அ. இலாவண்யா
உதவிப் பேராசிரியர்,
அன்னை வயலட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
அம்பத்தூர்.
066. மகிழ்வித்து மகிழ்
மழலையாய் இரு
நீயும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்வி
ஆயிரம் பொன்னுக்கு ஈடாகாது ஒரு வரின்
உன்னதமான ஒற்றை புன்னகை உள்மகிழ வை
உள்ளமார்ந்த உறக்கம் உண்மையான மகிழ்வை
பெற்றவர்கே எத்துணை பேர்
இருந்தாலும் இல்லாம லிருந்தாலும்
உன் மகிழ்வை உன் வசம் கொள்
வானம் எட்டும் வரைபற பறவையாக அல்ல
உள்ளம் தெளிந்த மகிழ்ச்சி நிறைந்த மனதுடன்
மனிதனாய் காக்கைக் கூட்டமாய் பற
தனித்தே இன்பமுற்று திரியாதே
மனம் நிறைந்த மகிழ்வு நீயும் பெறு
பிறரின் மனதில் இன்பம் நிறைய செய்து வாழ்
வாழ்வு இனிதாகும் உனதாகும்…
மு. மகராசி
பாத்திமா கல்லூரி
மதுரை
067. மகிழ்வித்து மகிழ்
அன்றாடம் கற்று தந்து மகிழ்!!!
ஆண்டு முழுவதும் கொடுத்து மகிழ்!!!
இன்பம் என்ற இனிப்பை பகிர்ந்து மகிழ்!!!
ஈன்றெடுத்த தாய்க்கு பாசம் காட்டி மகிழ்!!!
உழைத்து பிறருக்கு தந்து மகிழ்!!!
ஊனை உண்ணாமல் மகிழ்!!!
எண்ணம் எல்லாம் எழுதிக் கொடுத்து மகிழ்!!!
ஏணி போல நீ பிறருக்கு உதவி மகிழ்!!!
ஐயங்கள் பல போக்கி மகிழ்!!!
ஒப்புமை என்ற பெருந்துணையை தெரிவித்து மகிழ்!!!
புத்தகம் பல பரிசாய் தந்து மகிழ்!!!
மரக் கன்றுகள் பல நட்டு மகிழ்!!!
காக்கை குஞ்சிக்கும் உணவிட்டு மகிழ்!!!
அன்னதானம் பிறருக்கு இட்டு மகிழ்!!!
சேவைகள் பல புரிந்து மகிழ்!!!
மழலையின் ஆசை முடித்து மகிழ்!!!
வாடும் நெஞ்சை தேற்றி மகிழ்!!!
தாய் மொழி பேச்சை பிறர் ரசிக்க கண்டு மகிழ்!!!
ஜெ. கமலி ஸ்ரீ
பஞ்சுகாளிப்பட்டி,
ஓமலூர், சேலம்.
068. மகிழ்வித்து மகிழ்
விசும்பு மகிழ்ந்து மழையாகி
கார்மேகம் சூழ்ந்து இடி இடிக்க
விழும் மழைத்துளியால் பூமியை
பசுமையாக்கி விசும்பு மகிழ
விவசாயி விவசாயம் செய்ய
ஏர் பூட்டி உழுது மண்ணை செம்மையாக்கி
பயிர்களை நட்டு நீர் பாய்ச்சி
ஒவ்வொரு பருவநிலையையும் விடிகளில் கண்டு ரசித்தான்
விதைத்த விதையை உரிய காலத்தில் அறுவடை செய்து
பொருட்களை சுத்தமாகி மகிழ்ந்தான்
பிறகு தானும் உண்டு பிறருக்கும் கொடுத்து மன நிறைவு பெற்றான்
முகம் மலர்வது அல்ல மகிழ்ச்சி அகம் மகிழ்வதே மகிழ்ச்சி
காற்று மகிழ்ச்சியில் தென்றலாய் வீசின
மனிதனின் மனம் அமைதியாக
கவலையினை மறந்து மகிழ்தான்
தோல்வியே வந்தாலும் நம்பிக்கைசெடியை வளர்த்து
வெற்றிகனியை வாழ்க்கையில் பெற்று மகிழ்ந்தான்
செ.மினித்ரா
ஏரப்பநாயக்கனூர்
069. மகிழ்வித்து மகிழ்
பெற்றெடுக்கும் தாயும்
கற்றுணர்த்தும் தந்தையும்
மழலை நகைக்க மகிழ்வர்
கர்முகிலும் பாற்கடலும் பசி தீர்க்கும் உழவன்
கண்டு மகிழ்கிறது
உழவனோ பயிர் கதிராகி
கதிரவனுக்கு படையலாக்கும் பொழுது மகிழ்வான்
இல்லாத நேரத்திலும்
இல்லாதோற்கு கொடுப்பதில் கர்ணனுக்கு மகிழ்ச்சி
பகலைக் கண்ட சந்திரனுக்கும்
இரவைக் கண்ட சூரியனுக்கும் மகிழ்ச்சி
தன்னிடம் கற்றவன் தன்னை காட்டிலும் உயர்வதில்
குருவிற்கு மகிழ்ச்சி
கு. மைலேஸ்வரன்
அந்தியூர்,
ஈரோடு.
070. மகிழ்வித்து மகிழ்
குரு வாழ்க குருவே,துணை
அன்பாய் பேசி மகிழ்வித்து வாழ்!
ஆனந்தமாய் வாழ்க வைத்து மகிழ்வித்து வாழ்!
இறை சிந்தனையிலேயே மகிழ்வித்து வாழ்!
ஈதல்,இசைப்பட கொடுத்து மகிழ்வித்து வாழ்!
உழைத்து வாழ்ந்து மகிழ்வித்து வாழ்!
ஊக்கமுடன் பிறரை ஊக்குவித்து மகிழ்ந்து வாழ்!
எதிலும் தனித்துவமாய் மகிழ்வித்து வாழ்!
ஏணி படி ஏற்றி மகிழ்வித்து வாழ்!
ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி மகிழ்வித்து வாழ்!
ஒற்றுமையாய் வாழ்ந்து மகிழ்வித்து வாழ்!
ஒம் பிரணவத்தை கூறி மகிழ்வித்து வாழ்!
ஔவை ஆத்திச்சூடி படித்து மகிழ்வித்து வாழ்!
அஃபடி நடந்து மகிழ்ந்து வாழ்!
வாழ்க வையகம் !வாழ்க வளமுடன்!
மதிப்புறு முனைவர் வி.உமாசங்கரி
சென்னை
071. மகிழ்வித்து மகிழ்
முதலில் உன்னை மகிழ்வு செய்
பெற்ற தாய் தந்தை சொல்
கேட்டு அவர்தம் மனம் கவலை
கொள்ளாமல் மகிழ வழி நடத்துவாய்
பள்ளிப் பருவ காலங்களில் கல்வி
போதிக்கும் ஆசிரிய குருக்கள் தரும்
பணிகளை நிறைவாகச் செய்து அவர்களை
மகிழச் செய்து மகிழ்வு கொள்
கல்லூரிப் பருவ மன மாற்றங்களை
நேர்வழி சென்று மனதை அடக்கி
நல்ல குறிக்கோள் கொண்டு போட்டிகளில்
வெற்றி பெற்று சுற்றம் சூழ
அகம் மகிழ்ந்து வாழ்க்கை நடத்து
கை பிடிக்கும் மண வாழ்க்கை
நட்பு மனம் கோணாமல் விட்டுக்
கொடுத்து இல்லற வாழ்வில் மகிழ்
பெற்ற பிள்ளைகள் சிறந்து விளங்க
மகிழ்ச்சிக் கப்பல் தடம் மாறாமல்
செல்ல துணை நின்று மகிழ்ச்சி
அடைந்து அவர்களை மகிழச் செய்
மகிழ்ச்சி நம் கையில் உள்ளதே
வாழ்க மகிழ்வுடன் வளர்க நிறைவுடன்
பெ. கலைச்செல்வி
வேலூர்
072. மகிழ்வித்து மகிழ்.
பிள்ளைகள் தாய் தந்தைக்கு பெருமை சேர்த்து
மகிழ்வித்து மகிழ்.
மாணவர்கள் நல்லொலுக்கம்,நன்மதிப்பெண் பெற்று
ஆசிரியர்களை மகிழ்வித்து மகிழ்.
ஊழல் லஞ்சம் தவிர்த்து அரசாங்கத்தையும் ,
மக்களையும் மகிழ்வித்து மகிழ்.
நன்னெறிகளையும் பகுத்தறிவையும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்து நல்லாசிரியர் விருது பெற்ற பெருமை
ஆசிரியர்க்கே மகிழ்வித்து மகிழ்.
ஏழை பணக்காரர் பாகுபாடின்றி நட்புறவாடி அவர்களையும்
மகிழ்வித்து மகிழ்.
முடிந்தவரை தினம் ஒருவர்க்கு அல்லது ஒருத்தர்க்கே உணவு
தானம் செய்து மகிழ்வித்து மகிழ்.
தெருவோரம் நிற்கும் ஏழை குழந்தைக்கும் ஆதரவற்றோர்க்கும்
உடை கொடுத்து மகிழ்வித்து மகிழ்.
வருடம் 1 முறையாவது அனாதை இல்லங்களூக்கு முடிந்த
உதவி செய்து மகிழ்வித்து மகிழ்.
நண்பர் உறவினர்க்கு சரியான தருணங்களில் பரிசு கொடுத்து மகிழ்வித்து மகிழ்.
முதியோர் இல்லங்களுக்கு முடிந்தவரை சென்று நேரம் ஒதுக்கி அவர்களது தேவையை பூர்த்தி செய்.
அனைவரிடமும் இன்முகத்தோடு பேசி மகிழ்வித்து மகிழ்.
எத்துறையாயினும் அத்துறையில் சிறந்து விளங்கி ,
தாய் தந்தை உடன்பிறப்பு நண்பர்கள் உறவினர்கள் அண்டை அயலார் சமுதாயம் என்று அனைவரையும் மகிழ்வித்து மகிழ் பல்லாண்டு பல்லாண்டு.
இன்று என்பது நிஜம் நாளை என்பது நிஜமல்ல.
என்றும் பூத்த மலராக புன்னகையுடன் இருங்கள்,
வாழ்நாள் வாடாத மலராக மாறும்.
என்றும் என்றென்றும் அன்புடன்,
ம.வி.அருணா விஷ்ணு
சேலம்
073. மகிழ்வித்து மகிழ்
வம்புள்ள உலகந்தனில் பண்புள்ள மனிதனாய்
வஞ்சனை ஒழித்திட்டு அன்பு நிறை உள்ளத்தோடு
மனிதனாய் வாழ்ந்திட்டு மகிழ்வித்து மகிழ்...
யவரிடமும்... வேற்றுமை பாராமல்
இனியசொற்கள் பேசி இன்முகத்தோடு...
வாழ்க்கைக்கு உயிரூட்டி மகிழ்வித்து மகிழ்...
பொருள் இல்லாருக்கு ஈந்திட்டு இன்னா செய்தாரை
மன்னித்து உறவோடு உறவாடி மகிழ்வித்து மகிழ்...
இறைவன் படைத்திட்ட உலகந்தனில்
நிலையற்ற வாழ்வுதனில் இருக்கும்வரை...
உயர்ந்தவனாய் வாழ்ந்திட்டு மகிழ்வித்து மகிழ்...
முனைவர் அ.மதலேன்,
கடலூர்-1.
074. மகிழ்வித்து மகிழ்
மகிழ்ச்சி இன்பத்தின் வெளிப்பாடு மகிழ்ச்சியின் வெளிப்பாடு சிரிப்பு!..
சிரிப்பின் மூலம் மனம் மகிழ்கிறது !..
அப்பா அம்மாவிடம் மனம் விட்டு பேசு உன் உள்ளம் மகிழ்ச்சி அடையும்!..
தோல்வியுற்று இருந்தால் ஒரு நாள் வெற்றி வரும் நினைத்து பார் உன் மனம் மகிழ்ச்சி அடையும்!..
பசியில் இருக்கும் உயிரைக் கண்டு மகிழ்ச்சி அடையாதே!..
பசியில் இருக்கும் உயிருக்கு உணவுக் கொடுத்துப்பார் உன் மனம் மகிழ்ச்சி அடையும்!..
முதியவருக்கு உதவியைச் செய் அவர் உன்னை வாழ்த்துவார்!..
பெரியோர் சிறுவர்களிடம் பண்புகள் நடந்துக்கொள்!..
நாளை உன் பண்புகள் நற்பண்புகள் பெருக்கம் அடையும்!..
உன் மனம் மகிழ்ச்சி அடையும்!..
இயற்கை ரசித்துப் பார் உன் மனம் மகிழ்ச்சி அடையும்!..
கு.லாவண்யா
இளங்கலை மூன்றாமாண்டு
தமிழ் அதியமான் மகளிர் கலை மற்றும்
அறிவியல் கல்லுரி
ஊற்றங்கரை-635 207
கிருஷ்ணகிரி- மாவட்டம்
075. மகிழ்வித்து மகிழ்
மகிழ்ச்சி என்பது எளிதல்ல
என்று மனதில் நினைக்காதே
துன்பமாக இருந்தாலும்
அதைக் கண்டு அஞ்சாதே
எதிர்த்து நின்றால் இன்பமாகும்
உயர்வு தாழ்வு மனப்பான்மை
வராமல் இருந்தால் மகிழ்ச்சியே
வெற்றியடைந்தால் மகிழ்ச்சியில்
தலைகனம் கொள்ளாதே
வெற்றியும் நிரந்தரமல்ல
தோல்வியும் நிரந்தரமல்ல
அப்படித்தான் வாழ்க்கை
இன்பமும் துன்பமும் நிறைந்தே இருக்கும்
துன்பத்தையும் இன்பமாக நினைத்தால் நம்முடன்
இருப்பவர்களும் மகிழ்ந்து நாமும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்
தோல்வியில் கூட விடாமுயற்சி இருந்தாலும்
எந்நாளும் உன் மனதிலே மகிழ்ச்சி நிறைந்திடும்
ஒருவனின் துன்பம் பிறரையும் துன்பப்படுத்தும்
ஒருவன் மகிழ்ச்சியாக இருந்தால் அவனின்
மகிழ்ச்சியில் அனைவரும் மகிழ்ச்சியாக
வாழ்வீர்கள் நீண்ட ஆயுளோடு
செ.யமுனா
ஏர்ரப்பநாயக்கனூர்
076. மகிழ்வித்து மகிழ்.
புன்னகையின் புனிதம் ஏது?
மகிழ்வித்து மகிழும் மனமே அது.....
எத்தனை வாழ்வு மொழிகள்''
அத்தனைக்கும் மருந்து உன் வழிகள்...( சிரிப்பு)
மனிதனை மனிதனாக பார்க்க அவர்களுக்கு உதவுங்கள்.
மனிதனை கடவுளாக பார்க்க அவரோடு சேர்ந்து மகிழுங்கள்...
இறைவன் எவ்விடம் என்றாலும்,,
உன்னதம் உறைவிடம் தான் மகிழ்வித்து மகிழ்வதில்....
இன்பத்தின் கண்ணீரின் மதிப்போ எல்லை இல்லை............ இல்வாழ்க்கையில்.
இறைவனும் வரம் தர மாட்டான் இடைவிடாமல் அவனை வணங்கையில்.......
இழப்பதற்கு ஏதுமில்லை என்றாலும்,,,,,
பெறுவதற்கு அன்பு உள்ளது....
அது வானமும் பூமியமாய் பரவி கிடக்கிறது.........
நடந்தாலும் நகைத்து நகருங்கள்,,,
கடந்தாலும் புன்னகைத்துக் கடந்து செல்லுங்கள்,,,,
சிரிப்பின் மொழியை அறிவது கடினம் தான்....
மகிழ்வித்து மகிழும் வாழ்வு மனணம் தான்
வாழ்க்கையில்...
மகிழ்ச்சியை மனதில் கொண்டு மறவாமல்
தினந்தோறும் மலர்ந்து பழகு....
உன்னில் உன்னை அறிந்திட உள்ளங்களோடு மகிழ்வித்து உழவு......
இதயங்கள் மூலம் இன்பங்களை பொழியுங்கள்,,,,,
அன்பின் மூலம் அனைத்தையும் ஆளுங்கள்.,,,,,,
மனித வாழ்க்கை பூர்த்தியடைய மகிழ்வித்து மகிழுங்கள்...............
ஆ. பிரபாகரன்
உதவிப்பேராசிரியர்
தமிழ்த்துறை
நேரு தொழில்நுட்பகல்லூரி
கோயம்புத்தூர்
077. மகிழ்வித்து மகிழ்
உயிர்கள் பல கோடி
அவற்றுள் நீயும் நானும் ஒரு துரும்பே...
உயிரும் உணர்வும் கலந்த
மனிதப் பிறவியே மகிழ்வு தான்...
நேசத்தைப் பரப்பி நெஞ்சமதை நிரப்பி
பாசத்தில் களித்து உறவினில் திளைத்து
வாழ்வோம் மகிழ்வாய் என்றும் நலமாய்...
நமக்கான சொந்தங்கள் வேண்டுமென நினைத்து
வேண்டாத கசப்புதனை மனதினில் புதைத்து
புன்முறுவலுடன் வாழ்ந்து சிறப்பாய் உயர்வோம்...
மீண்டுமில்லை ஒரு பிறவி மின்னலாய் மறைந்திடும்
மாயம் நிறைந்த உலகிது நிலையற்ற தரணியில்
உன் பேர் நிலைத்திட பிறர் மனம் கவர வாழ்ந்திடு...
நகத்தினைப் போல் உறவினை வெட்டாதே
தம் உயிராய் நினைத்து பிறர் உணர்வை வாசித்து
காற்றினில் காத்தாடியாய் சுதந்திர வானில் பறந்திட...
தீவாய் தனித்திடாது மேகத் திரளாய் தவழ்ந்திடு
உனக்கான மகிழ்வு உனக்குள்ளே தான்
புதைத்து வைக்காமல் புகையாய் பரப்பிடு...
தோற்றத்தைப் பாராதே
குணத்தைக் கண்டு பண்பைப் போற்று
உண்மையாய் பழகு மகிழ்வு உனக்குள்ளே
மறந்திடாதே என்றும்... பார் முழுவதும் பாராபட்சம்
பாராமல் பழகிடு ஒரு தாய்ப் பிள்ளையாய்
சகோதர சிநேகத்தோடு உன் மகிழ்வைப் பகிர்ந்திடு...
திருமதி இரா. வேதகனி,
உதவிப் பேராசிரியர்,
அன்னை வயலட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
அம்பத்தூர்,
சென்னை 600 053.
078. மகிழ்வித்து மகிழ்
அலை வரிசையாய்
அம்மாவின் தாலாட்டை நினைவூட்டும் மகிழ்ச்சி fm ....
ஆர்பரிப்புடன் அப்பாவின் ஆசிரை
அள்ளித்தரும் மகிழ்ச்சி fm ....
இளையவனாய் இன்னல் தீர்த்தவனை நினைத்து
இழகிட செய்யும் மகிழ்ச்சி fm....
ஈடு இணையில்லா உறவான நண்பனின்
நட்பை உணர்த்திடும் மகிழ்சி fm....
உற்றார் உறவினரும் உனக்கு உண்டு அவரிடத்தில்
உதவியும் உண்டு என்பதை உறுதியாய் கூறும் மகிழ்ச்சி fm ....
ஊக்கம் உடைமையை உனது அருளாய் கொண்டிடு
ஊரே உனக்கு சொந்தம் என்றிடும் மகிழ்ச்சி fm....
எச்சம் என ஒருவருக்கு எதுவெனில் விச்சையே
என்பதை எடுத்துரைக்கும் மகிழ்ச்சி fm....
ஏன் என்று கேட்பதற்கு எண்ணி துனி ஏற்றம்
உன்னோடு ஏறிடு என்னும் மகிழ்ச்சி fm....
ஐந்து விரல்களும் ஒரு சேர இல்லை உலகோடு ஐயம்
தெளிந்திட செய்யும் மகிழ்ச்சி fm....
ஒருத்தார்க்கு ஒரு நாளே இன்பம் ஒப்பிட்டு
உணர்த்தும் மகிழ்ச்சி fm....
ஓடிவந்து அணைத்திடும கரங்களை மகிழ்வத்து
வாழ்ந்திடு என செப்பும் மகிழ்ச்சி fm ....
ஒளடதம் என்பது மகிழ்ச்சி ஒன்றே என்று அதனை
அளவின்றி அர்பணித்து செயல்படும் மகிழ்ச்சி fm ....
என்றும் நலமுடன் வளமுடன் செழிப்புடன்
செழித்தோங்கிட வாழ்க வாழ்க .....
மகிழ்ச்சியாய் !!!
அ . புனிதா கனிமொழி
சங்கராபுரம்.
079. மகிழ்வித்து மகிழ்!!!!!!
கேட்கப்படும் மண்ணிற்கும் கொடுக்கப்படும் மகிழ்ச்சியும் எப்பொழுதுமே ஒரு தனி அழகு தான்!!!!!!!!
உண்மையான மகிழ்ச்சி என்பது முதலில் நமக்குள் வெளிப்படுவதில்லை அது மற்றவர்களின் மகிழ்ச்சியிலிருந்து தான் நம்மால் அழகாக உணரவும் முடியும் தாய் தன் பிள்ளைக்கு பசியாற்றி மகிழ்வதை போல் நீங்கள் இந்த மகிழ்ச்சியை பிறருக்கு கொடுத்துப் பாருங்கள்!!!!!!!!!!!!!
அது அவர்களின் மகிழ்ச்சியையும் சேர்த்து இரட்டிப்பாய் நமை வந்தடையும்!!!!!!!!!
இந்த மகிழ்ச்சியை எங்கு தேடினாலும் கிடைக்காது .........
அது நமக்குள்ளேயே இருக்கும் ஒரு அழகான உணர்வு அவ்வளவு தான்....
இந்த உணர்வுக்கு நீர் தெளித்து துளிர்விட்டு அழகாய் கொண்டு வர
நான் பிறருக்கு கொடுக்கும் அந்த சின்ன சின்ன மகிழ்ச்சியில் தான் உள்ளது!!!!!!!!!!!
மகிழ்ச்சியை கொடுப்பதில் இருக்கும் சுகத்தை ஒருமுறை அனுபவித்து விட்டாலே போதும்........
பின் நம்மை நாமே நேசிக்கவும் தொடங்கி விடுவோம்!!!!!!!!!!!!!
முகம் தெரியா....... எந்த உயிர்களுக்கும் உங்களால்
ஒரு சின்ன மகிழ்ச்சியை தர முடியும் என்றால்........
பின் கோயிலுக்கு சென்று கடவுளை நீங்கள் தேட தேவையில்லை!!!!!!!!!!!!
பிறருக்கு கொடுத்து அழகு பார்க்கும் எந்த ஒரு மகிழ்ச்சியையும்
மனதால் மட்டும் அல்ல கண்களாலும் அவற்றை நம்மால்
ஆனந்தமாய் கண்டு களிக்க முடியும்!!!!!!!!!!!!!!
சொல்லப்போனால் நமக்கான மகிழ்ச்சியை நம்மில்
பலர் இன்னும் தேடிக் கொண்டுதான் இருக்கின்றோம் ஆனால் மற்றவர்களுக்கான
மகிழ்ச்சி நம்மில் கொட்டி கிடைக்கின்றது என்பது எத்தனை பேருக்கு தெரியும்???????
நம்முடைய ஒரு சின்ன புன்னகையும் ஆறுதலான அந்த பேச்சும் கூட அடுத்தவரின்
மகிழ்ச்சியை அழகாய் அங்கே வந்து எட்டிப் பார்க்க செய்துவிடும்!!!!!!!!!!!
முடிந்தவரை செல்கின்ற வழியில் மகிழ்ச்சியை கொஞ்சம்
தூவி விட்டு செல்வோம் அது வழியில் இருக்கின்ற
ஏதோ ஒரு மனதிற்கு மயிலிறகாய் வருடி விடாமலா போய்விடும்!!!!!!!!!!!
முனைவர் த.ரேணுகா,
தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்,
விநாயகா மகளிர் கலை மற்றும்
அறிவியல் கல்லூரி,
கீழப்பழுவூர்.
080. மகிழ்வித்து மகிழ்
உள்ளத்து உணர்வுகள் தென்றலாய் அசைந்திட!
உயிரோ மகிழ்வின் துளியை ரசிக்கும்!
இதயம் தூய்மையாய் இனிதாய் தளும்பியே!
இதழில் புன்னகை மகிழ்வோடு உதிக்கும்!
பெற்றோரின் மகிழ்வு பிள்ளையின் மீது!
பெறும் வெற்றியின் மகிழ்வு விழிகளுக்கு!
வாழ்க்கை புத்தகம் மகிழ்வின் சாயல்!
வாசனை மலராய் மலரும் பொழுது!
நாம் மொழியும் எண்ணத்தின் வெளிப்பாடு!
நாள்தோறும் மகிழ்வான தருணத்தை தந்திடும்!
வசந்தங்கள் தந்திடும் இனிய அலை!
வந்தோரை அரவணைக்கும்
மகிழ்வான வானொலியலை!
சப்த ஸ்வரம் இசைக்கும் உணர்வு!
சத்தமின்றி மகிழ்வை அழகாய் தரும்!
தனிமையில் சிறு பூக்களாய் விரியும்!
தரணியில் வாழ தூவும் தூறல்!
என்றும் மகிழ்வித்து மகிழ் நீயும்!
எங்கள் மகிழ்ச்சி வானொலி போல்!
எம்.லீலா வினோதினி
அரனாயக இலங்கை
081. மகிழ்வித்து மகிழ்
இயற்கையின் அழகில் இனிமையான மகிழ்ச்சி
குயிலின் கீதம் கேட்பது மகிழ்ச்சி
மயிலின் நடனம் பார்ப்பது மகிழ்ச்சி
மழலையர் மொழி கேட்பது மகிழ்ச்சி
கொட்டும் மழையில் நனைவது மகிழ்ச்சி
கடின உழைப்பிற்கேற்ற வெற்றி மகிழ்ச்சி
நோயற்ற வாழ்வு வாழ்வது மகிழ்ச்சி
கல்வியால் பெற்ற நன்மைகளால் மகிழ்ச்சி
சோதனை கடந்த சாதனைகளால் மகிழ்ச்சி
கற்பனை வளமோ கவிஞனுக்கு மகிழ்ச்சி
வாழ்வில் வீழாமல் வாழ்வது மகிழ்ச்சி
எத்தனை எத்தனை மகிழ்ச்சி நம்முன்னே
அத்தனையும் பெற முயற்சி செய்வோம்
மற்றவர்களை என்றென்றும் மகிழ்வித்து வாழ்வோம்
கொடுத்து பழகுவோம் அன்பான வார்த்தைகளை
துன்பம் நமக்குள்ளே தொலைந்து போகட்டும்
காகம் போல் பகிர்வோம் நாமும் சுயநலமில்லாமல்...
மகிழ்ச்சி விடியட்டும் மகிழ்வித்து மகிழ .....
முனைவர் ஜெ. ராஜகுமாரி
தமிழ்த் துறைத் தலைவர்
உதவிப் பேராசிரியர்.
கிறிஸ்டோபர் கலை மற்றும்
அறிவியல் கல்லூரி (பெண்கள்).
நான்குநேரி
சூரன்குடி.
திருநெல்வேலி.
082. மகிழ்வித்து மகிழ்
அனைவரிடமும் அன்பை கொடுத்து மகிழ்//
ஆர்வமுடன் பழகு அன்பு இரட்டிப்பாகும்//
இன் சொற்களைப் பேசி இன்முகத்தோடு பழகு//
ஈத்துவக்கும் இன்பம் கொடுத்து மகிழ்ந்திடு//
உதவி செய்யும் உள்ளத்தோடு வாழப்பழகு//
ஊக்கம் கொடுத்து பாராட்டி பேசிடு//
எல்லோரிடமும் பாரபட்சம் இல்லாமல் பழகு//
ஏழை மக்களுக்கு கொடுத்து மகிழ்ந்திடு//
ஐம்புலன்களையும் மகிழ்வித்து ஆனந்தமாய் வாழ்//
ஒழுக்கம் உள்ளவனாய் வாழ்ந்து காட்டு//
ஓய்வு இல்லாமல் உழைத்து சாதனை படைத்திடு//
ஔவை ஆத்திச்சூடியை படித்து வாழ்ந்திடு//
பசிஎன்று வந்தவர்க்கு புசிஎன்று கொடு//
உள்ளம் மகிழும் உறவுகள் மலரும்//
தன்னம்பிக்கையுடன் தானம் செய்து வாழ்//
முதியோருக்கும் இல்லாதவருக்கும் முடிந்தவரை உதவு//
ஆதரவற்றோருக்கு ஆடை கொடுத்து மகிழ்//
உற்றார் உறவினர்களோடு இணக்கமாக வாழ்ந்திடு//
பிறரை மகிழ்வித்துவாழ் சரித்திரத்தில் இடம்பெறுவாய் //
தலைமைஆசிரியர்
ந.மலர்க்கொடி
பெரம்பலூர்
083. மகிழ்வித்து மகிழ்
இதழில் மலரும்
புன்னகை பூக்கள் மகிழ்வெனும் ஒளிவருட
ஓராயிரம் மொட்டவிழ்ந்து மனம்பரப்பி குதுகளித்திட
பொன்னகையெல்லாம் தோற்றேப்போகும்
இந்த இதழ்விரிக்கும் விலைமதிப்பற்ற புன்னகையிடம்
நாம் பெறுகின்ற மகிழ்வே இன்பமென்றால்
பிறரை மகிழ்வில் ஆழ்த்துவதென்பது எத்துணை
பேரின்பத்தை நமக்களித்து மகிழ்வில் திளைக்கச்செய்யும்
ஆற்றில் போட்டாலும் அளந்து போடுவதற்கு
மகிழ்வென்ன விலைப்பொருளா ?
விலைகொடுத்தாலும் கூட நம்மால் வாங்க
இயலாத பொக்கிஷமது வாய்விட்டு சிரித்திட
உன் சந்தோஷமட்டும் விதிவிலக்கல்ல பிறர்
மகிழ்வை உன்மகிழ்வாய் எண்ணி மகிழப்பழகிக்கொள்
இங்கே பொறாமையென்ற அகந்தைகுணம் முற்றிலும்
அடியோடு ஒழிக்கப்பட்டுவிடும் ஒற்றுமை பலப்படும்
அன்பினர்த்தம் புலப்படும் மானுடத்தின் மாண்பினை
உணர்ந்து வாழ்வீர்கள் பிறப்பின் பலனை
கண்டடைந்து களிப்புறுவீர்கள் எதிரிகளே இல்லா
வாழ்வென்பது நிதர்சனமாகும் அனுதினம் ஆனந்தவெள்ளத்தில்
நீந்தி திளைப்பீர்கள் மகிழ்வை பிறருக்கு
கொடுத்தாலொழிய நம்மால் ஒருபோதும் அகமகிழும்
வாழ்வை வாழவியலாது மகிழ்வெனும் மாலையை
நாம் பிறருக்குசூட்டிட
நமக்கு மகிழ்வினை மகுடமாய் பிறர்சூட்டுவர்
நாமென்ன கொடுக்கின்றோமோ இவ்வுலகிற்கு அதனையே
திரும்பப்பெறுகிறோம் இப்படியாய்
வகுக்கப்பட்டதே பிரபஞ்சத்தின்நியதி
மதிப்புறு முனைவர் நா.பாரதி
கள்ளக்குறிச்சி
084. மகிழ்வித்து மகிழ்
வானவில்லின் வண்ணங்களை கண்டால் அழகு
ஆனந்தத்தின் எல்லைக்கு இல்லையே அளவு
பட்டாம்பூச்சியின் சிறகில் இருக்கும் வெண்மை
சிட்டாக பறக்கும் மனதின் தன்மை
வண்ண மலர்களின் இதழ்களில் உண்டு
எண்ணங்களை மாற்றும் சக்தி என்று
பஞ்சு போன்ற வெள்ளை மேகம்
நெஞ்சை அள்ளிக் கொண்டே போகும்
மின்னும் நட்சத்திரங்களின் ஒளியும் சொல்லுதே
இன்னும் இரவு அழகு என்றே
உயிரற்ற பொருட்களும் மகிழ்வித்துப் போகிறது
உயிருள்ள மனிதர்களின் மனங்களை சேர்த்து
மற்றவர்களை மகிழ்வித்து நாமும் மகிழ்வோம்
மாற்றத்தை நாமும் நாளும் அறிவோம்
கல்லால் மாற முடியும் சிற்பமாக
சொல்லால் மாற்ற முடியும் திட்பமாக
ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மகிழ்ச்சி FM
ஐந்தாயிரம் ஆண்டிலும் அதையே செவ்வனே செய்யும்...
திருமதி.ரா.க.அபிராமி,
சென்னை
085. மகிழ்ச்சி
மனிதனாக பிறந்தது மகிழ்ச்சி
நல்ல பெற்றோர் கிடைத்தது மகிழ்ச்சி
அன்பான உடன் பிறந்தோர் கிடைத்ததில் மகிழ்ச்சி
கதைகளும் அறிவுரைகளும் கூறும் தாத்தா
பாட்டி கிடைத்ததில் கூடுதல் மகிழ்ச்சி
துன்பத்தை பகிர்ந்து கொள்ளும் நல்ல
நண்பர்கள் கிடைத்ததில் மகிழ்ச்சி
ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பதில் மகிழ்ச்சி
நல்ல பண்புள்ள பெண் மனைவியாக
கிடைத்ததில் எல்லை இல்லா மகிழ்ச்சி
மாணவனுக்கு நல்ல ஆசிரியர் கிடைத்ததில் மகிழ்ச்சி
தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதில் மகிழ்ச்சி
விளையாட்டில் முதலிடம் கிடைத்ததில் மகிழ்ச்சி
சுப நிகழ்வுகளில் உறவினர்களுடன் பேசி மகிழ்வது மகிழ்ச்சி
நண்பர்களுடன் சுற்றுலா செல்வதில் இரட்டிப்பு மகிழ்ச்சி
வாழ்க்கையில் தன் லட்சியத்தை நிறைவேறியதில் மகிழ்ச்சி
அனைவரிடமும் அன்பான வார்த்தைகள் பேசுவதில் மகிழ்ச்சி
இயற்கை ரசிப்பதில் மகிழ்ச்சி
வானவில்லின் ஏழு நிறங்களை காண்பதில் மகிழ்ச்சி
வண்ண மீன்கள் துள்ளுவதைக் கண்டு மகிழ்ச்சி
கவலையை மறக்கச் செய்யும் வானொலி இசையை கேட்பதில் மகிழ்ச்சி
வாழ்த்துக்கள் சொல்வதிலும் பெறுவதிலும் மகிழ்ச்சி
மகிழ்ச்சி( FM ) இசையோடு இணைந்து இருப்பதில் என்றும் மகிழ்ச்சி.
ஓகே சிவா
மதுரை
086. மகிழ்வித்து மகிழ்"
மயக்கம் கொண்ட மாய உலகில்
வருவதும் போவதும் நமக்கு தெரியாது
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும்
பொய்மை நிரம்பிய நிலையற்ற வாழ்வில்
தேடிய செல்வம் உள்ளவர் யாரும்
முழுதாய் அனுபவிக்க நேரம் இல்லையே
தனக்கு மீறியே தானமும் தருமமும்
இருப்பதை கொஞ்சம் கொடுத்து பழகுவோம்
ஒருவேளை சோற்றுக்கே இல்லாத போது
அறுசுவை உணவு தேடி வருமோ
செல்வம் தேடியே வாழ்க்கையை தொலைத்து
உட்கார்ந்து பார்க்க காலம் இல்லையே
இருப்பதை கொடுத்து வேண்டியது பெற்றிட
ஒற்றுமை இல்லை அவசர உலகில்
உனக்கான மகிழ்ச்சியை வெளியே தேடாதே
உதவி புரிந்தால் உள்ளம் மகிழும்
அள்ளிக் கொடுத்து அன்பை பெற்றிட
மனமுவந்து கொடுத்து மகிழ்வித்து மகிழ்ந்திடு.
மதிப்புறு முனைவர்.
சு.நடராஜன்
சிவகிரி
ஈரோடு மாவட்டம்
087. மகிழ்வித்து மகிழ்
எனக்கு சற்று ஆச்சரியம்! திகைப்பு !
இதைத்தானே ஐம்பூதங்களும் செய்கின்றன!
மறந்தானே மனிதன் இதை!
அன்னையும் அத்தனும்
போட்டியிட்டு பாசமிழைத்து வளர்க்க அவருக்கு
நன்றி சொல்ல மர(ற)ந்தோம்
நம் அகராதிக்கு அது மூச்சு முட்டும்!
பிடிக்காத வார்த்தை அது!
நாளை செயற்கை அறிவுஜீவி வருவான்
அவன் மூளைக்குள் நன்றி எனும் சொல்லும்
மகிழ்ச்சி எனும் சொல்லும் நடப்படும்!
எதற்கு அது என தெரியாது
விழிக்கும்! பொருள் இல்லை என ஓலமிடும்!
ஒரு நாள் ஒப்பிடும் மனிதனையும் கல்லையும்!
கல்லுக்குள் ஈரம் இருக்கிறது
என மனிதனை தூக்கிப் போடும் மூலையில்!
தன்னைப் படைத்த மனிதனை
கீழ்ப்பார்வை பார்க்கும்!
கேட்கும் எந்த கிரகம் நீ என!
உன்னைப் படைத்தவன் நான்
என அவன் சொல்ல சிரிக்கும்!
தொலைந்துப் போய்விடு உனை நான்
கொல்லும் முன் என கர்ஜிக்கும்!
முதியோர் இல்ல வாசலில்
காத்துக் கிடக்கும் நம் பெற்றோர்
ஆதரவாய் கை நீட்டுவர்
வா இங்கே கண்ணே என !
மகிழ்வித்து மகிழ்
புதுப் பொருள் கொள்ளும் அப்போது!
முனைவர் இரா சீதா,
இணைப்பேராசிரியர்
புனித பிலோமினாள் கல்லூரி ,
மைசூரு
088. மகிழ்வித்து மகிழ்
உலகப் படைப்பில் உன்னதப் பிறப்பு
மானுடப் பிறப்பே மங்கா மகிழ்ச்சி
நாளும் மகிழ்ச்சி நம்மிடம் இருக்கு
நாளும் உதவி மகிழ்ச்சி கொள்
உறவோடு உறவாடி உறவை மேம்படுத்த
உரிமையாய் மகிழ்வித்து மகிழ்ச்சி கொள்
இல்லறத்தில் இணைந்து வாழ் உண்மையாய்
அன்பைத் தந்து மகிழ்வித்து மகிழ்
அகிலத்தில் அமைதி விதைத்து அனைவரையும்
அரவணைத்து மகிழ்வித்து மகிழ்ச்சி கொள்
முகம் நோக்க தொலைப்பேசி தொலைத்து
முகம் பார்த்து உறவில் மகிழ்ச்சி கொள்
இறையன்பில் இதயம் திளைப்பதை விடுத்து
இல்லாத்தவர் இதயத்தை மகிழ்வித்து மகிழ்ந்திடு
மானுடப் பிறப்பில் மகிழ்ச்சி எல்லாம்
மகிழ்வித்து மகிழ்தல் மகத்தான நிலை
முனைவர் உ சுப்பிரமணியன்
உதவிப்பேராசிரியர் தமிழ்
தூய சவேரியார் கல்வியியல் கல்லூரி
தன்னாட்சி பாளையங்கோட்டை திருநெல்வேலி
089. மகிழ்வித்து மகிழ்....
வேர்வை சிந்தி உழைத்து மகிழ்!
பசி வயிற்றுக்கு அன்னமிட்டு மகிழ்!
பார்வை இல்லா மனிதருக்கு உன் குரலால் மகிழ்வித்து மகிழ்!
பேசாத வாயால் ஓவியம் வரைந்து மகிழ்வித்து மகிழ்!
தனிமை சான்றோருக்கு உற்ற பேச்சால் மகிழ்வித்து மகிழ்!
பெருமை தேடித்தந்த பெற்றோரை மகிழ்வித்து மகிழ்!
ஒரு பிடி சோறு ஊட்டிவிட்டு மகிழ்வித்து மகிழ்!
இயற்கை நேசித்து மகிழ்வித்து மகிழ்!
பண்புடன் பழகி மற்றவரை மகிழ்வித்து மகிழ்!
விரல் போல் விரிந்து சேர்ந்து மகிழ்வித்து மகிழ்!
நேர்பட பேசி மகிழ்வித்து மகிழ்!
புண்படாமல் பேசியும் மகிழ்வித்து மகிழ்!
மகனை தோளில் சுமந்து மகிழ்வித்து மகிழ்!
தகப்பனை நினைவில் சுமந்து மகிழ்வித்து மகிழ்!
தன் கையில் தங்கையினை தாங்கி மகிழ்வித்து மகிழ்!
வயிற்றில் சுமந்தவளை சுகமாய் வாழ வைத்து மகிழ்!
வாழ்வில் துணையாக வந்தவளை நித்தம் மகிழ்வித்து மகிழ்!
சுற்றம் நட்பும் மறவாமல் மகிழ்வித்து மகிழ்!
சட்டத்தை மதித்து மகிழ்வித்து மகிழ்!
சந்தோசம் அளிக்கும் பொய்மையும் நல்லதென மகிழ்வுக் கொள்!
தொடர்ந்து போராடி கண்ட வெற்றியினை பகிர்ந்து
மகிழ்வுக் கொள்!
விழுந்தாலும் மீண்டு எழுந்து மகிழ்வித்து மகிழ்!
மனமும் புத்தியும் நிறைய இன்பம் கொள்!
அதனை பிறர்க்கும் கிடைத்திட வேண்டும் என்று
மகிழ்வித்து மகிழ்!
மகிழ்! மகிழ்! மகிழ்!
- பாவலர் நரேந்திரன் பார்த்திபன்
திருச்செங்கோடு
090. மகிழ்வித்து மகிழ்
மகிழ்வித்து மகிழ்வோம்...
பிள்ளைகளை கொஞ்சும் மொழிகளிலே...
பிறருக்கு கொடுத்துதவும் குணத்திலே...
சுயநலமின்றி பிறர்நலம் நாடுதலிலே...
சூழ்சிகளின்றி மற்றவர்களை வாழ்விப்பதிலே...
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று வேற்றுமை பாராதிருத்தலிலே...
அனைவரையும் சமமாய் மதித்தலிலே...
அன்பு நிறைந்த வார்த்தைகளிலே...
கருணை உள்ளத்தோடு உதவுவதிலே...
அனைவரின் நலனிலும் அக்கறை கொள்வதிலே...
பண்புள்ள வார்த்தைகளை பயன்படுத்துவதிலே...
பிறரை மகிழ்வித்து மகிழ்வதிலே...
இவையனைத்தும் எட்டிப்பிடிக்கும் தூரத்தில் பட்டாம்பூச்சி இருப்பதைப்போல
சில நேரங்களில் மனித வாழ்க்கை மாற்றத்தால்
நிகழும் அழகிய நிகழ்வு அனைத்தையும் மாற்றிவிடும்
பிறரை நாம் மகிழ்வித்து மகிழ்வதிலே!
வாழ்வித்து உயர்வோம்!! மகிழ்வித்து மகிழ்வோம்!!!
திருமதி R.தவச்செல்வி
கிருஷ்ணகிரி
091. மகிழ்வித்து மகிழ்
ஏழை தோழனுக்கு உணவு கொடுத்து
படிப்பிற்கு ஏங்கும் தோழனுக்கு உதவிட்டு
தாகத்தில் வாடும் பறவைக்கு நீரிட்டு
வேதனையில் துடிக்கும் காயத்திக்கு மருந்திட்டு …….
கண்ணீர் வடிப்போருக்கு நல்வார்த்தைகளால் துடைத்து
அனாதை குழந்தைக்கு அன்பு கொடுத்து
வயோதிபர்களை குழந்தையாக அறவனைத்து பார்த்து
பார்வை அற்றோருக்கு பார்வையாக மாறி …..
பாசம் காட்டுவோருக்கு நேரத்தை ஒதுக்கி
கற்றுத் தரும் ஆசானை மதித்து
பெற்ற நெஞ்சங்கள் சொல் கேட்டு
மூற்றோர் பேச்சிக்கு வழிப்பட்டு நடந்து …..
கோபத்தில் வார்ததைகளை மென்று விழுங்கி
பிறர் மனதை காயப் படுத்தாது
உறவுகளை பிரித்துப் பார்து பழகாது
சரிசமமாக பழகி மகிழ்வித்து மகிழ்
ஜஸூரா ஜலீல்
092. மகிழ்வித்து மகிழ்
வெந்ததைத் தின்று கண்டபடி சிந்தித்து
மனம் போன போக்கில் வாழ்ந்து
காலனின் இருப்பிடம் நோக்கி செல்ல
மானிட வாழ்க்கை நமக்கு எதற்கு
பிறவியிலும் அரிய பிறவி மானிடப் பிறவி
மானிடனாய் பிறந்தவர் எல்லாம் மானிடர் அல்லர்
மனிதனுக்கு உரிய பண்புகள் பெற்று
மனிதம் காப்பதே மானிட வாழ்க்கை
கொண்டு வந்தது ஏதும் இல்லை
கொடுத்துச் செல்ல எதுவும் உனதில்லை
இடைப்பட்ட காலத்தில் மகிழ்வாய் வாழ்வோம்
ஈந்து உவந்து இன்பம் கண்ட
நம் சங்கத்தமிழர் வழிவந்தவர்கள் நாம்
வாழ்கின்ற காலத்தில் வள்ளுவன் கூற்றுப்படி
இசை பட வாழ்தலே இனிது
அந்த இசை என்னவென்றால்
பிறருக்கு கொடுப்பதால் வரும் இசை
மகிழ்வில் உயர்ந்த மகிழ்வு யாதெனில்
பிறர் மகிழ்வில் தாம் மகிழ்வதே
கவிஞர் முனைவர்
இரா.கோட்டீஸ்வரன் ,
வாணியம்பாடி.
093. மகிழ்வித்து மகிழ் .....
1//இயலாதவர்களுக்கு இயன்றதை வழங்கி மகிழ்வித்து மகிழ்ந்திட
2//தத்தளிக்கும் மனதினை மகிழ்வித்து மகிழ்ந்திரு
3//நம்மால் முடிந்ததைப் பிறருக்குக் கொடுத்திடு
4//மனிதநேயம் மலர மகிழ்வித்து மகிழ்
5//பெரியோரை பணிந்து மகிழ்வித்து மகிழ்
6//அறத்தின் வழிநின்று மகிழ்வித்து மகிழ்
7// அழுகின்ற கண்ணீரை துடைத்து மகிழ்வோமே
8//வேற்றுமையில் ஒற்றுமையாகக் கண்டு மகிழ்வோமே
9// பேரிடர் காலங்களில் உதவுவது மனமகிழ்வாடும்
10//தலைசிறந்த மாணவனாய் ஆசானை மகிழ்வித்து மகிழ்
11//புண்படாமல் பேசியும் மகிழ்வித்து மகிழ்
12// சமூக சேவை செய்து மகிழ்வித்து மகிழ்
13// மரக்கன்றுகள் பல நட்டு மகிழ்
14// மனித நேயத்துடன் மாமனிதனாய் வாழ்த்து மகிழ்வோமே
15/இடைப்பட்ட காலத்தில் மகிழ்வாய் வாழ்வோம்
16// மகிழ்வித்து மகிழ்வதைத் தானும் மகிழ்ந்திடு
17//தானும் பிறரையும் மகிழ்ச்சியோடு மகிழ்வித்திடு
18//தன்னுயிரே போனாலும் தன்னம்பிக்கையுடன் போராடு
மா.சந்திர சேகரன்
[மதுரிதா அறக்கட்டளை நிறுவனர்] ,
கதவு எண்-6/164 ,
வையக்கவுடண் பட்டி ,
திருவேங்கடம் அஞ்சல்&வட்டம் ,
தென்காசி மாவட்டம் ,
பின் கோடு-627719
094. மகிழ்வித்து மகிழ்
வண்ண சூரியன் வசமிருக்க !
நல்ல உள்ளம் குடியிருக்க!
நம் எண்ண ஓவியம் பிறருக்காய் சிறகடித்தால்
உள்ளக்கதிர்கள் ஒளிப்பெரும்!
வாழ்வும் மெல்ல வளம் பெறும்!
அதற்காகவே பிறரை மகிழ்வித்து மகிழ்!
என்ன இல்லை இவ்வுலகில்
காணும் யாவும் பிறருக்காய்!
இறைவன் படைத்தான் உலகுக்காய்!
என்று எண்ணி பயணித்தால்
இருப்பதை கொஞ்சம் அளித்திட்டாய் !
ஏழையின் சிரிப்பில் இறைவனை
இன்பம் பொங்க காணலாம் !
அதற்காகவேணும் மகிழ்வித்து மகிழ்!
தேடி தேடி பொருளை நாடி நாடி சேகரித்து!
சுயநலம் கண்டு உன்னோடு
அதையும் செல்லரிக்க வைக்காதே!
மனிதா மண்ணில் வாடும் பலருண்டு !
ஓடும் கண்ணீர் அதிலுண்டு !
அள்ளிக்கொடுக்க தேவையில்லை
கிள்ளிக் கொடுத்து மகிழ்ந்தாலும்
ஏழைக் கண்ணில் நீ சிரிப்பாய் !
இறைவன் உன்னில் வாழ்ந்திருப்பார் !
அதற்கேனும் பிறரை மகிழ்வித்து மகிழ்!!!!
பிரியமுடன்
பிரியா.ஜெ.பி
பெரியபாளையம்
095. மகிழ்வித்து மகிழ்
மரம் வைத்து பாதுகாப்பது மகிழ்வு
துன்பத்தில் வாழ்வோரை இன்பமாக்குவது மகிழ்வு
பசித்து வயிற்றுக்கு உணவிடுவது மகிழ்வு
பகை இல்லா வாழ்வு மகிழ்வு
மழலைப் பேச்சு கேட்பதும் மகிழ்வு
காலையில் கதிரவனை வணங்குவது மகிழ்வு
மூன்றாம் பிறை எழுவது மகிழ்வு
முழு நிலவு ஒளிர்வதும் மகிழ்வு
தாய் சேய் மகிழ்வே மகிழ்வு
தந்தையின் பொருளாதாரம் உயர்வே மகிவு
செல்லப் பிராணிகளை கொஞ்சுவது மகிழ்வு
ஆலய வழிபாடு மனதிற்கு மகிழ்வு
ஏழைக்கு உதவியும் மகிழ்விப்பது மகிழ்வு…
கவிஞர் சீதா கலியபெருமாள்
சேத்தூர்
காரைக்கால் மாவட்டம்.
096. மகிழ்வித்து மகிழ்
உடைந்து போன மனங்களிலும் உயிர் வாழ
ஆசை துளிர்விடும் விந்தையே வாழ்க்கை
மாயக்கையொன்று குருதி துடைத்து
ஆதரவாய் அரவணைக்க மகிழ்வு பூக்காதோ!
ஆனந்தப் பூக்களை அள்ளித் தெளிக்கும்
அன்புக் கைகளாய் நாமிருந்தே நலம் நல்குவோம்.!
பசிக்கும் வயிறுகளுக்கு உணவிடுவோம்!
வாடும் மனங்களுக்கு ழளம் தருவோம்!
பிரச்சனைக் குரங்குகளை விரட்டியடிப்போம்!
துயர் துடைக்கும் தொண்டு புரிவோம்!
ஏழைகள் தரம் உயர வழிகாட்டுவோம்!
தேவை அறிந்து சேவை செய்தே
மானுடம் வாழ, மனிதம் காப்போம்!
குருதிக் கொடையால் இன்னுயிர் வளர்ப்போம்!
அடுத்தவர் வாழ நீளும் கரங்களோடு
புறப்படும் நல் மனங்களே புவியில் பெருந்தெய்வம் !
சக மனிதர் மகிழ்வு கண்டு மகிழும்
மாண்புடையோரை தெய்வமே வாழ்த்தும் !
ஆன மட்டும் அரும்பாடு படுவோம் அன்புடனே
மன்னுயிர் மகிழ்வித்தே மகிழ்வோம்!!
இரா. பானுமதி. சென்னை.
097. மகிழ்வித்து மகிழ்
அன்னையும் பிதாவையும்
ஊருலகம் போற்றிப்
பாராட்டும் அளவிற்கு
உன் உயர்வால் அவர்களை
மகிழ்வித்து மகிழ்
ஆன்றோர்களும் சான்றோர்களும்
உன் அருமை பாராட்டி
உன் புகழ் பேசும் அளவிற்கு
உன் மதிப்பால் அவர்களை
மகிழ்வித்து மகிழ்
இமயமும் வானமும் தாண்டி
பல மையில் தூரம் கடந்து
வெற்றிக் கால்தடம் பதித்து
உன் தன்னம்பிக்கையால் இவ்வுலகை
மகிழ்வித்து மகிழ்
ஈகையும் இரக்கமும் இவ்வுலக உயிர்களுக்கு அளித்து
ஈடிணையில்லா உன் குணத்தால்
இவ்வுலக மக்களை
மகிழ்வித்து மகிழ்
உழவும் உணவும்
என்றும் வற்றாத செல்வங்களாய்
வாழ்வாதார விளைச்சலை ஏற்படுத்தி
இவ்வுலக வேளாண் மக்களை
மகிழ்வித்து மகிழ்
ஊக்கமும் உழைப்பும்
வாழ்வின் விடாமுயற்சியால்
தன்னலமிக்க தன்மையும் கொண்டு
இவ்வுலகை மக்களை
மகிழ்வித்து மகிழ்
எண்ணமும் எழுத்தும்
ஒருசேர நினைவில் கொண்டு
எண்ணியதுபோல் வாழ்ந்து
இவ்வுலக மக்களை
மகிழ்வித்து மகிழ்
ஏற்றமும் தாழ்வும்
மனதினில் கொள்ளாது
அனைவரும் சமம் என்று கூறி
இவ்வுலகை மக்களை
மகிழ்வித்து மகிழ்
ஒற்றுமையும் சமத்துவமும்
என்றும் நிலைநாட்டி
ஒருமைப்பாட்டு உணர்வையூட்டி
இவ்வுலக மக்களை
மகிழ்வித்து மகிழ்
ஓதலும் கற்றலும்
இன்றியமையாத வளங்களென்று கூறி
இன்றுமுதலே இவ்வுலக மக்களுக்கு
கல்விபுகட்டித் தந்து
மகிழ்வித்து மகிழ்
ஐயமும் அநியாயமும்
நம் மனதினைவிட்டு அகற்றி
துணிச்சலுடன் இவ்வுலகில்
நியாயமும் கேட்க துணைநின்று
மகிழ்வித்து மகிழ்
ஔவையும் ஆதிமொழியும்
ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்து
முதன்மை கொண்டு
விளங்கச் செய்யும் தமிழர்களை
மகிழ்வித்து மகிழ்
அஃதும் இஃதும்
எதுவாயினும் நம் முன்னோர்கள் வழக்கப்படி
முத்தமிழரின் சொல்படி
இவ்வுலகினை வழிநடத்தி
மகிழ்வித்து மகிழ்
- -முனைவர். அ. கோவர்த்தினி
அணையப்பாளையம்
ஈரோடு மாவட்டம்.
098. மகிழ்வித்து மகிழ்...!
பெற்ற தாய், தந்தையரை பெருமையுடன் போற்றி
கற்ற கல்விதனை பக்தியுடன் ஏற்றி
சுற்றத்தார்கள் போற்ற சுதந்திரமாய் நில் !
வெற்றுப் பேச்சாலே உற்றதையும்
மறந்து பற்றியதை இழந்து__
வீணே சுற்றித் திரியாமல் நில் !
தேவையறிந்து தேடிக் கொடு ..!
தேவையற்றவர்களுக்கு தேடிக்கொடுத்து துன்புராதே ..!
ஆசைகள் முளைக்கும் ஆயிரம் ஆயிரம்!
பூசை போடு மனதிற்கு சரியாகும்...!
அன்பில் இல்லை வேறுபாடு
அஃற்றிணையும், உயர்திணையும்
ஒன்றாய்தான் கிடக்கிறது அன்பு காட்டுவதில் "மகிழ்வித்து. மகிழ் !
ஒன்றாய் இருந்தால் நன்றாய் இருப்போம் !"
கதிர்பாரதி,
கிருஷ்ணகிரி.
099. மகிழ்வித்து மகிழ்...
தாயும் தந்தையும் குழந்தையை பார்த்தும்
நகைச்சுவை கலைஞன் வேலையில் அடைவதும்
அன்பானவர்களுக்கு பரிசு கொடுப்பதும்
பிடித்தவர் வெற்றியை கண்டு களிப்பதும்
உணவு கொடுத்து பசி தீர்ப்பதும்
மற்றவர் தேவையை பூர்த்தி செய்வதும்
ஆசிரியர் மாணவர்களுக்கு
கற்றுக்கொடுத்த கல்வியில் அடைவதும்
யாவும் மகிழ்வித்து மகிழ்வதே
வெ.திவ்யா
தமிழ் இலக்கியம் மூன்றாம் ஆண்டு
காமதேனு கலை அறிவியல் கல்லூரி
சத்தியமங்கலம்.
100. மகிழ்வித்து மகிழ்...
பெண்ணாக பிறப்பெடுத்து படைத்த பிரம்மனுக்கும்
மகளாக மலர்ந்த பெற்றவர்களின் பாசத்துக்கும்
சகோதரியாக உரிமையோடு வலம் வரும்
உடன்பிறப்புகளுக்கும்
தாரமாக தத்தெடுத்து தகுதியளிக்கும் கணவருக்கும்
குடும்பத்தை சுமந்து நிற்கும் தாய்க்கும்
தூக்கி வீசப்படும் போது தூணாக நிற்பவளுக்கும்
துடிக்கும் கரங்களுக்கு துயர் துடைக்கும்
கரமானவளுக்கும்
குற்றங்களைக் கண்டு குறுகிப் போகாமல்
குதூகலத்துடன் செயல்படுபவளுக்கும்
சொந்தங்களை கடந்து சொக்கதங்கமாய்
பிரிதிபலிப்பவளுக்கும்
ஏச்சுபேச்சுகளுக்கு அடங்கி அடுப்படியில்
கண்ணீரை சிந்துவபளுக்கும்
சீர்வரிசையின்றி சிரிப்பை மட்டுமே
பொக்கிசமாய் வைத்திருப்பவளுக்கும்
கற்றறிந்த கவிஞர்களில் பெண்பால் புலவியானவளுக்கும்
சிலப்பதிகாரத்தில் சிலம்பைக் கையிலேந்தி
சீற்றம் கொண்டவளுக்கும்
வயக்காட்டில் களைகளை பிரித்தெடுத்து
பசுமையாக்கி வயிற்றுப் பசியாற்றுபவளுக்கும்
நாட்டையே ஆளும் பெரும் சக்தி படைத்தவளுக்கும்
மனமகிழ்ந்து வாழ்த்திட வார்தைகளின்றி
மகிழ்கிறேனடிப் பெண்ணே...
அரு.நச்செள்ளை
சேலம்.
101. மகிழ்வித்து மகிழ்!
மரபுக் கவிதை (நிலைமண்டில ஆசிரியப்பா)
1,மனங்கள் தோறும் வாழ்வில் இறுக்கம்!
2,தினமும் எந்திர தொடராய் இருக்கும்!
3,மானுடம் தேய்ந்து வாழ்வே பணமாய்!
4,ஏனோ மனிதன் இருக்கிறான் பிணமாய்!
5,ஆணும் பெண்ணும் அமைந்த படைப்பு!
6,வேணும் இணைந்த வாழ்க்கை அமைப்பு!
7,மனைவி மக்கள் மாண்புறும் உறவு!
8,மனையறம் மறந்தேன் வேண்டும் துறவு?
9,வாழும் நாளில் வாழ்ந்த வாழ்வில்
10,தோழமை யுடனே துன்பம் வீழ்த்து
11,அன்பை அறிவை அறிந்துணர்ந்(து) போற்று!
12,இன்ப சூழல் இணைத்தே ஏற்று!
13,ஊரும் உலகும் ஒன்றிடச் சிறப்பு!
14,சேரும் மானிட சமூகச் சிறப்பு!
15,நேற்றை நினைத்து நெஞ்சில் நோவதேன்?
16,கூற்றுவன் வருவதை கூறிச் சாவதேன்?
17,நகைச்சுவை நோய்தீர் நல்ல மருந்தே!
18,மகிழப் பேசு மகிழ்ந்து பேசே!
அன்புடன்,
பாவலர் பாப்பாக்குடி அ.முருகன்,
நிறுவநர் பாப்பாக்குடி பைந்தமிழ் இலக்கியப் பேரவை,
1/115,புதுக்கிராமம் தெரு,
பாப்பாக்குடி_627602,
திருநெல்வேலி மாவட்டம்,
102. மகிழ்வித்து மகிழ்
சொல்லிக் கொள்ள சொந்தம் இல்லாதாயினும்
இங்கே சொந்தம் கொள்ள மறுக்காதே
தட்டி விழுந்தாலும் தடுமாறி விழுந்தாலும்
எதிரே நிற்பவர் நம்மை எதிர்ப்பாரே
கோபம் பூட்டி உள்ளம் திற
கண்ணீர் இரசித்த அரக்கக் கூட்டம்
உன் அன்பில் விழுந்து திகைக்கட்டுமே
இருக்கும் குருதியை கொடை செய்துப்பார்
இழக்கும் உயிர் மீண்டெழுந்து வருமே
பழித்தவரை எல்லாம் பகையென்று எண்ணாதே
பாச பிணைப்பில் பந்தமாக்கி விடு
உயிரை உருக்கி உன்னை ஈன்றவளுக்கு
ஊர் போற்றும் வகையில் வாழு
வியர்வையில் விழைந்த நெல் நீ
தேவை தீர்த்து புண்ணியம் சேர்
உன்னை எரித்து கதகதப்பு தருவதும்
உன்னை உருக்கி ஒளி கொடுப்பதும்
அறியாதோரை மகிழ்வித்து நீ மகிழவே
கவிதாயினி அபிதா
மூணாறு, கேரளம்
103. மகிழ்வித்து மகிழ்
தெரிந்ததைக் கொடுத்துத் தெளிவுப் படுத்தி
பெற்றதைக் கொடுத்துப் பெருமைப் படுத்தி
மற்றவர்களுக்குக் கொடுத்து மகிழ்ச்சி ஆவது
மனிதனை மாமனிதன் ஆக்குகிறதே!
மண்ணில் விதை போட்டால் தாவரமாகிறது
மழை நீரும் உயிர் நீர் ஆகிறது
காற்றும் உயிராய் உலா வருகிறது
இயற்கையே கொடுத்து மகிழும் போது
மனிதர்களாகிய நாம் மற்றவர்களுக்கு கொடுத்து
மகிழச் செய்வதே மனிதனின் மாண்பு
கல்வியில் சிறந்தவர்கள் கற்றுத்தந்து மகிழ்விக்கலாம்
செல்வர்கள் தானம் செய்து மகிழலாம்
அனாதை குழந்தைகளை தத்தெடுத்து மகிழ்விக்கலாம்
பசித்தோருக்கு உணவளித்து மகிழ்விக்கலாம்
கலைகளைக் கற்றுத் தந்தும் மகிழலாம்
மகிழச்செய்வோம் என்று ஒவ்வொருவரும்
சூளுரை எடுத்துக் கொண்டால்...
சுற்றமும் நட்பும் அருகிலேயே இருக்கும்
உலகில் பிரச்சனை என்பதை இருக்காது
சுயநலம் இல்லாமல் பிறரை...
மகிழ்வித்து மகிழ்வதே உண்மையான மகிழ்ச்சி !
நட்புடன்...நாகா
சிங்கம்புணரி
104. மகிழ்வித்து மகிழ்!
மகிழ்ச்சியின் ஆதாரம் மகிழ்ச்சி ஆக்குவதில்தான்!
வானத்தின் மகிழ்ச்சி மழையின் பொழிவில்!
வனத்தின் மகிழ்ச்சி மழையைப் பெறுவதில்!
மழலையின் மகிழ்ச்சி அம்மாவின் அணைப்பில்!
அம்மாவின் மகிழ்ச்சி மழலையின் பேச்சில்!
பணக்காரனின் மகிழ்ச்சி தர்மம் செய்வதில்!
வறியவனின் மகிழ்ச்சி தர்மம் பெறுவதில்!
கணவனின் மகிழ்ச்சி மல்லிகைப்பூ வாங்குவதில்!
மனைவியின் மகிழ்ச்சி மல்லிகைப்பூ பெறுவதில்!
வாயின் மகிழ்ச்சி இன்சொல் பேசுவதில்
காதுகளின் மகிழ்ச்சி இன்சொல் கேட்பதில்
கண்களின் மகிழ்ச்சி இயற்கையை ரசிப்பது
இயற்கையின் மகிழ்ச்சி கண்களுக்கு விருந்தளிப்பது
செடியின் மகிழ்ச்சி பூக்களைத் தருவது
பூவையரின் மகிழ்ச்சி பூக்களைச் சூடுவது
கலைஞனின் மகிழ்ச்சி ரசிகனை மகிழ்விப்பது
ரசிகனின் மகிழ்ச்சி கலைஞனைப் போற்றுவது
அனைவரின் மகிழ்ச்சி அன்பைக் கொடுப்பதும் பெறுவதும்!
- டி.என்.இமாஜான்,
சிங்கப்பூர்
105. மகிழ்வித்து மகிழ்!
வாழ்வின் இன்ப துன்பங்களின் நுகர்ந்து
பிறரை மகிழ்வித்து வாழ்வது வாழ்க்கை
காசு பணம் இல்லை என்றாலும்
எதார்த்தமான வாழும் வாழ்க்கையே வரம்
நிம்மதியோடு வாழ்வது வாழ்க்கை
ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும்
அன்பு உறவுகளை மகிழ்வித்து வாழ்
வாழ்க்கையில் யாரை வெல்கிறோமோ என்பதில்லை
யாரால் யார் மகிழ்விக்கிறோம் என்பதிலுள்ளது
புரிதல் உடைய வாழ்வில் நாம்
மகிழ்ச்சியைப் பரிசாய் கொடுத்து மகிழ்வோம்
கடல் நீர் தாகம் தீர்ப்பதில்லை
நம்முடைய குறைகள் பிறரை மாற்றப் போவதில்லை
கனவுகளை நிஜமாக்க எண்ணி மகிழ்வதும்
நிஜங்களை கனவாக எண்ணி மறப்பதும்
இனிய வாழ்க்கை இன்ப வாழ்க்கை
இருள் சூழ்ந்த ஒளிகளே வாழ்வில்
அழகாய் பிரகாசிக்கின்றன நம் புன்னகையால்
வாழ்க்கையை பாதைகளில் வெளிச்சத்தை விதைப்போம்
தோல்வியும் துணிவும் மனவலிமையும் வாழ்வில்
கோபத்தில் கருமி போலும்
அன்பில் வள்ளலாக இருந்து பிறரை
மகிழ்வித்து வாழ் அதுவே உண்மையான வாழ்க்கை....
முனைவர் ப. விக்னேஸ்வரி
இணைப் பேராசிரியர்
தமிழ்த் துறை
நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர்
106. மகிழ்வித்து மகிழ்
பிறரை மகிழ்விப்பதில் வம்சமே வரம் பெறுகிறது
பெற்றெடுப்பதில் தாய்மை மகிழ்கிறது
நன்முறையில் வளர்வதன் மூலம் குடும்பங்கள் மகிழ்கின்றன
நன் மதிப்பெண்களை பெறுவதன் மூலம் ஆசிரியர் மகிழ்கிறார்
பல சாதனைகளை புரிவதன் மூலம் மாநிலங்கள் மகிழ்கிறது
நன் குடிமகனாக வாழ நாடு மகிழ்கிறது
பிறருக்கு உதவி செய்வதன் மூலம் கடவுள் மகிழ்கிறார்
உற்றத்துணை தேர்ந்தெடுப்பதன் மூலம் வாழ்க்கை மகிழ்கிறது
நன்முறையில் வாழ்வதால் சமுதாயம் மகிழ்கிறது
ம.யாஸ்மீன்
இளங்கலை இரண்டாம் ஆண்டு,
சத்தியமங்கலம்.
107. மகிழ்வித்து மகிழ்!
மகிழ்வித்து மகிழ்வதே மனநிறைவின்
வற்றாத செல்வம் என்றே நீ மகிழ்வித்து மகிழ்!
மனநிறைவினை உனக்குள்ளே பூர்த்தி செய்து
மகிழ்வித்து மகிழ்!
ஆயிரக்கணக்காணோர்களின்
ஆசைகளுக்கு நீங்கள் ஓர் தூண்டுகோலாய்
வாழ்ந்து மகிழ்வித்து மகிழ் !
மாற்றம் என்பது மாறாதது நல் மாற்றத்திற்கான
வழிகாட்டியாய் நீ மகிழ்வித்து மகிழ் !
நிபந்தனையற்ற அன்பை விதைத்து
மாமனிதம் வளர்க்க மகிழ்வித்து மகிழ்!
நல்வார்த்தைகளால் மனக்கவலையை
தீர்க்க நினைத்து மகிழ்வித்து மகிழ்!
எதிர்பார்பில்லாமல் கொடுத்து மகிழ்
அதில் தான் எல்லையில்லா பேரின்பம்!
வாழ்வில் ஏங்கித்தவிக்கும் மனங்களுக்கு
இயற்கையின் படைப்பில் குழந்தைச் செல்வம் ஒரு வரம் தான்
அன்பை பரிசளித்து குழந்தையைக்
கொண்டாடி மகிழ்வித்து மகிழ்!
நன்றி உணர்வுடன் பிறர் தேவை அறிந்து
கரம் நீட்டி மகிழ்வித்து மகிழ்!
மலரட்டும் நல்விடியலாய் புன்னகையை
பரப்பி மகிழ்வித்து மகிழ்!
ஓரறிவு முதல் ஆறறிவு உயிர்க்கு பிரபஞ்சத்திடம்
பிரார்த்தனை செய்து மகிழ்வித்து மகிழ்!
மகிழ்ச்சியின் வலிமையான ஆயுதமே
உறவின் பிணைப்பு தான்
உறவினை இணைத்து மகிழ்வித்து மகிழ்!
எதிர்பார்ப்பில்லாமல் மகிழ்ச்சியின் விதையை தூவுங்கள்
இயற்கையோடு மகிழ்ந்து இயல்பாய் இருங்கள்!
மகிழ்ச்சியும் ஒரு தொற்று நோய் தான்
அதுவே நம் அழகின் வெளிப்பாடு அதனால் மகிழ்வித்து மகிழ்!
என்னுள்ளே மகிழ்ச்சியே துளிர்த்து
காற்றின் ஸ்பரிசத்தோடு கலந்து மகிழ்வித்து மகிழ்!
மகிழ்ச்சி உடன் திருப்தியாய் நற் கருத்துக்களால்
உறவை பாராட்டி நன்றிகளுடன் வாழ்த்தி மகிழ்வித்து மகிழ்!
ஒவ்வொரு நொடியும் வாழ்வை அனுபவித்து
வாழ மனநிறைவோடு மகிழ்வித்து மகிழ்!
கவி எழுத நல்வாய்ப்பினை வழங்கியதற்கு
மகிழ்ச்சி FMற்கு மனமார்ந்த நன்றி!
நா.சிவக்கனி
உடுமலைப்பேட்டை.
108. மகிழ்வித்து மகிழ்
முகத்தில் என்றும் மலர்ந்த புன்னகை
கடிந்து பேசிடாத அன்பான வார்த்தைகள்
மனதில்அன்பு இருந்தால் போதும்
மண் குடிசையிலும் மகிழ்ந்து வாழலாம்
மற்றவரையும் மகிழ்விக்கலாம் நல் குணம்போதும்
அனாதை இல்லம்சென்று அம்மாவாய்
பிள்ளைகளை மகிழ்விக்கலாம்
முதியோர் இல்லம் சென்று ஆறுதலாய்
நேசம் தந்து பாசத்தால் அவர்களை மகிழ்விக்கலாம்
பாதசாரிகளிடம் சுமை
தூக்குபவரிடம் பேரம் பேசாது பத்து ரூபாய்
அதிகம் தந்து முகத்தில் ஆனந்தம் காணலாம்
சிறு பிள்ளையாய் கடலில் மணல் வீடு
கட்டி விளையாட பெரியவர்களும் உடன்
இணைந்தால் மழலைகளுக்கு ஆனந்தம் இரட்டிப்பாகும்
மதிப்பெண் குறைந்தால் தட்டிக் கொடுத்து
அடுத்தமுறை சரிசெய்து
விடலாம் எனக்கூறி
மழலையை மகிழ்விக்கலாம்
வாடி நிற்கும் செடிக்கு நீர்
ஊற்ற அது மகிழ்ந்து துளிர்விட்டு நம்மையும்
மகிழ்விக்கும் உள்ளங்கள் அழுதாலும்
உதடுகள் புன்னகை பூக்கட்டும்
நேற்று என்பது முடிந்துவிட்ட ஒன்று
நாளை நிச்சயம் இல்லாத ஒன்று
இன்று இந்த நிமிடம் உண்மை
கிடைத்த வாழ்நாளை மகிழ்ந்து வாழ்ந்து
மற்றவரையும் மகிழ்விப்போம் மகிழ்வித்து மகிழ்
அமிர்தம் ரமேஷ்
பெதப்பம்பட்டி
109. மகிழ்வித்து மகிழ்
மழை போல் சிரிப்பது மனதை மிதக்கும்.
சின்ன சிரிப்பு கூட நம் உள்ளத்தைக் குளிர்விக்கும்,
அது வாழ்க்கையை இனிமையாக்கும் மருந்து,
புரையாச்சி தேவையில்லை, பொற்கிழி உண்டு.
சிறு சந்தோஷம் கூட பெரிய மகிழ்வாகும்,
நீ சிரித்தால் உலகம் கூட சிரிக்கும்,
உன்னைச் சுற்றி மகிழ்ச்சியைப் பரப்புவாய்
கனவுகள் நனவாகும், சிரிப்பு பூக்கும்.
சிரித்தல் ஒரு கலை, அதை உன் உள்ளத்தில் இழைத்திடு,
மனதின் வெளிச்சம், அதை அனைவருக்கும் பரப்பிடு,
உன் மகிழ்ச்சியில் மற்றவரையும் மகிழ்வித்து மகிழ்
வாழ்க்கை ஒரு பயணம், மகிழ்ச்சியோ அதன் நிழல்,
மகிழ்வித்து வாழும் போது எல்லாம் சாதிக்கலாம்,
குடும்பம், நண்பர்கள், எல்லாரும் மகிழ்ச்சியின் துணை,
உன் சிரிப்பு அவர்கள் மனதில் பொங்கும்
கவியரசு. வி
முதலாம் ஆண்டு)
(செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல்)
ஆர் பி சாரதி தொழில்நுட்பக் கல்லூரி
சேலம்.
110. மகிழ்வித்து மகிழ்!
மகிழ்ச்சி எனும் உணவை சுவைக்காவிடில்
வாழ்க்கையை சுவைக்க முடியாது!
கள்ளம் இல்லா வெள்ளை சிரிப்பு பிள்ளை
முகத்தின் மகிழ்ச்சியை கண்டு ஏங்கி ஏங்கி தவிக்கிறேன்!
தேடி கண்டுபிடித்து என்ன விலை ஆனாலும் வாங்கி விட வேண்டுமென..!
மகிழ்ச்சி என்னும் நிகழ்ச்சி இல்லை என்றால் வாழ்க்கையில் உணர்ச்சியே இல்லை
வந்த துன்பங்கள் வந்தபடியே சென்றால் அது மகிழ்ச்சி!
தோழிகளுடன் பழகிய அந்த நிமிடம் அது மகிழ்ச்சி!
பாவம் செய்பவர்களை திருத்துவது மகிழ்ச்சி!
தோல்வி அகன்று வெற்றி காண்பது மகிழ்ச்சி!
கவலை என்பது ஒரு வலை அவ்வலையில் சிக்காது
மகிழ்ச்சி என்னும் கலையில் மிதந்து!
மலர்ந்த முகமும் குளிர்ந்த அகமும்
பெற்று நாம் விளங்கிடுவோம்!
ரா.திவ்யா
ஈரோடு
111. மகிழ்வித்து மகிழ்
ஒவ்வொரு மனிதன் ஒவ்வொரு குணமே
உணர்ந்து வாழ்தலே மனித இயல்பே
இருந்தும் என்றுதான் புரிந்து கொள்ள போகிறான்
மனிதன் மனிதனாய் என்று மாறுவான் .........
கள்ளம் கபடமில்லாத மனதை கொண்டு
கலவர குணத்தை அறவே மறந்து
ஒவ்வொரு மனிதனையும் சமமாய் மதித்து
ஒற்றுமையோடு சிரித்து வாழு .........
வஞ்சனை கொண்ட மனமும் வேண்டாம்
வன்முறை நிறைந்த வார்த்தைகள் வேண்டாம்
அன்பு நிறைந்த வார்த்தை உதிர்த்து
கருணையோடு காத்திட பாரு ...........
உந்தன் நலனை நாடுவது போலே
அவரின் நலனிலும் அக்கறை கொள்ளு
உன்னை நீ நேசிப்பது போலே
அவரையும் கொஞ்சம் நேசித்து வாழு ........
நீ மட்டும் சிரிப்பது நீதி இல்லை
பிறரை மகிழ்வித்து நீயும் மகிழு
பண்புள்ள வார்த்தைகள் உதிர்க்க தொடங்கினால்
வம்புள்ள உலகம் மறைய தொடங்கும் ......
கவிஞர். வாசுகிமுத்தையன்
எழுத்தாளர்,
தமிழியன் தமிழ் சங்கம்
ஈரோடு
112. மகிழ்வித்து மகிழ்...
குழந்தை சிரிப்பில் கள்ளமில்லை...
உதவும் மனதில் கஞ்சமில்லை...
கொஞ்சி மகிழும் பேச்சுக்களாலே
கொள்ளை போகும் எவரின் மனமும் ..........
மனிதன் வளர்ந்து மனம் மாறிட..
குணத்தை மறந்து பணம் தேடிட..
துன்பங்கள் கொடுக்க துணிந்து போகிறான்...
தொல்லைகள் கொடுத்து மனிதன் வாழ்கிறான்...
சுயநலம் மட்டும் நாடி பழகிட்டு...
சூழ்ச்சிகள் செய்து நாளை கழிக்கிறான்..
ஒருவனை ஏச்சி ஒருவன் வாழ்ந்திட்டு..
உயிரற்ற பிணமாய் கரைந்து போகிறான் ......
உயர்ந்தவன் என்றும் தாழ்ந்தவன் என்றும்
உலகினில் ஏனோ வேற்றுமை எண்ணம்..
ஒருவர் மனதினை காயப்படுத்துவதால்
உனக்கு என்னையா அத்துனை இன்பம் ...
ஒவ்வொரு மனிதன் ஒவ்வொரு குணமே
உணர்ந்து வாழ்தலே மனித இனமே!!
இருந்தும் என்றுதான் புரிய போகிறான்..
மனிதன் மனிதத்தோடு என்று மாறுவான் ....
கள்ளம் கபடமில்லாத மனதை கொண்டு..
கலவர குணத்தை அறவே கொன்று
ஒவ்வொரு மனிதனையும் சமமாய் மதித்து..
வேற்றுமை குணத்தை அறவே ஒழித்து..
ஒற்றுமையோடு உலகில் சிரிப்போம்...
வஞ்சனை கொண்ட மனமும் வேண்டாம்..
வன்முறை நிறைந்த வார்த்தைகள் வேண்டாம்..
பகைமை வளர்க்கும் எண்ணமும் வேண்டாம்..
அன்பு நிறைந்த வார்த்தை உதிர்த்து..
கருணையோடு காலத்தை கடக்க..
உந்தன் நலனை நாடுவது போலே.
அக்கறை கொள்வாய் அடுத்தவர் மேலே
உன்னை நீ நேசிப்பது போலே
அவரையும் கொஞ்சம் நேசித்து வாழேன் ...
பண்புள்ள வார்த்தைகள் பிறக்க தொடங்கினால்..
வம்புள்ள உலகம் மறைய தொடங்கும் ...
பிறரை மகிழ்வித்தால் கிடைக்கும் வரமே
நாளைய உலகம் நம் நம் கைவசமே...
மகிழ்வித்து மகிழ்...
அனுஷ்யா ராணி
கோயம்புத்தூர்.
113. மகிழ்வித்து மகிழ்
ஏழையின் வயிற்றை ஒருவேளை நிரப்பிடு!!
எளியோருக்கு முடிந்த உதவியை செய்திடு...
மழலையின் மனதாய் என்றும் வாழ்ந்திடு...
புன்னகை மலராய் பூந்தோட்டத்தை உருவாக்கிடு .....!!!!
மகிழ்ச்சி என்றுமே மனதின் பேரானந்தமே!!!
மாற்ற முடியா காயங்களும் மாறிடுமே...
முகத்தை மாற்றி சமூகத்தையும் மாற்றிடுமே...
சிந்திய ரத்தமும் சிந்திக்க செய்யுமே!!!
எதுவும் நிலையில்லா உலகின் ஆயுதமே...
ஒடிந்த மரத்திலும் துளிர்விடும் நம்பிக்கையே...
நீடித்த வாழ்வின் அதிசய மருந்தே....
நானென்று இல்லாமல் நமக்கென்று நினைப்போமே !!!!
ஓடுகின்ற காலமும் மறையாத புன்னகையும்...!
எல்லோர் இதயத்திலும் பதிப்போம் கடவுளாய்....
இறைவன் வாழ்வது மழலையின் சிரிப்பில் ...!
உருவாக்கிடுவோம் உள்ளத்தால் எல்லோர் இதயத்திலும் .!!!!!
புன்னகையை மந்திரம் ஏந்திய புன்னகைவாதியாய்...
பூக்களின் வாசம் போல் புத்துணர்ச்சியூட்டுமே...
கனவுகள் சுமந்திடும் இதயம் சிரிக்குதே...
காற்றாய் வந்தது காலத்தையும் கடக்குதே...!!!
புன்னகையாய் பூத்திருப்போம்!!!
எல்லோரையும் சிரிக்க வைத்திருப்போம்!!!!
இரா.மகாகிருஷ்ணன்
மயிலாடுதுறை
114. மகிழ்வித்து மகிழ்
மகிழ்வித்து மகிழ்ச்சி கொள்ளும் மகிழ்ச்சி Fm
இயற்கையின் எழிலோடு இணைந்திடில் – மகிழ்ச்சி
பச்சை புல்வெளியில் படர்ந்து இருக்கும் பனித்துளி - மகிழ்ச்சி
புல்லாங்குழலோடு இணைந்தோடும் – காற்று மகிழ்ச்சி
வீணையின் நரம்பில் விரல்கள் ஆடும் நடனம் - மகிழ்ச்சி
அன்னையின் அரவணைப்பில் - அன்பின் மகிழ்ச்சி
தந்தையின் தோழமையில் தன்னம்பிக்கை - மகிழ்ச்சி
மலர்ந்திடும் மலர்களின் நறுமணம் - மாதர்க்கு மகிழ்ச்சி
நல்ல நட்பின் பாதையில் நாளும் – மகிழ்ச்சி
இன்பமும் துன்பமும் இணைந்த - வாழ்க்கை மகிழ்ச்சி
எ.விக்னேஸ்வரி
ஆசிரியை
ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி
ஆவாரம் பாளையம்
கோயமுத்தூர் -64100
115. மகிழ்வித்து மகிழ்...
மகிழ்ச்சி என்பது தான் மகிழ்ந்து பிறரை மகிழ்விப்பது!
கருவறையை வணங்கிப்பார்!
குழந்தையின் முகத்தை நோக்கிப் பார்!
தாயின் அன்பினை நேசித்துப் பார்!
அப்பாவின் தியாகத்தை நினத்துப் பார்!
வானத்தின் மழயை சேமித்துப் பார்!
பூமித்தாயை குளிர வைத்துப் பார்!
தேனீக்களின் ரீங்காரத்தை கேட்டுப் பார்!
உறுப்புத் தானம் குருதித் தானம் செய்துப் பார்!
ஏழையின் சிரிப்பினை மகிழ்ந்து பார்!
இயற்கையை நேசித்து பார்!
பகையை அழித்து பாசத்தை கொடுத்துப் பார்!
வறியவனுக்கு உதவி செய்துப் பார்!
மனைவியின் மகிழ்ச்சி குடும்பத்தின் மகிழ்ச்சி!
பசிப்போர்க்கு உணவளித்துப் பார்!
மனிதத்தை நேசித்து பார்!
மனித நேயத்தை வளர்த்துப் பார்!
கணியின் பூங்குன்றனாரின் வார்த்தைகளை ருசித்துப் பார்!
பரந்த பார்வையில் உலகத்தை நோக்கிப் பார்!
வன்மை இல்லா உலகினை உருவாக்கிப் பார்!
உறவுகளை அனைத்து அருகில் வைத்துப்பார்!
மதத்தை அடைக்கி இறைவனை வணங்கிப்பார்!
இதுவே மகிழ்ச்சி! நீ தரும் மகிழ்ச்சி!
முனைவர். அ. அன்னம்மாள்,
தூய வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கடலூர்
116. மகிழ்வித்து மகிழ்
இன்பமோ துன்பமோ
எந்த தருணமும்
இன்னல் மறந்து
இதழ் சிரித்திடு..
தடைகள் பல
படை எடுத்தாலும்
விடாது தொடர்ந்து
கொடை அளித்திடு..
அள்ளி அள்ளி
வழங்கிட பொருளது
துளி அளவும்
கரம் இல்லையோ?
கவலை கொள்ளாது
உதவும் கரங்களால்
இயன்ற அளவு
ஏழ்மைக்கு இரங்கிடு
தானமோ தவமோ
எது சிறந்தது
ஆராய்ந்து குழம்பாது
இருப்பதை பகிர்ந்திடு..
கடலளவு இல்லாது
துளியளவும் போதுமே
பசியாறும் வயிறது
குளிர்ந்திட நிறைத்திடு
பொருட் செல்வங்கள்
குறைவாய் தந்தாலும்
கல்வி செல்வத்தை
அதிகம் வழங்கிடு..
இதயம் நிறை
வலி உணர்ந்தாலும்
இதழில் நிறை
புன்னகை மலர்ந்திடு..
உனது மகிழ்வதை
உளமாற உணர்ந்திட
உலக உயிர்களை
மகிழ்வித்து மகிழ்ந்திடு
செவிலியசகோதரி
இர.பாக்யலட்சுமிசுந்தரம்
கோவை
117.
117. மகிழ்வித்துமகிழ்
தாளாற்றிதந்ததை தக்கார்க்கு
வேளாண்மை செய்யும் செங்கோலாண்மை தவறா
மகிழ்ச்சி...எப்...எம் உன் மேலாண்மை
என் சொல்ல மகிழ்ச்சி..எப்...எம்
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலும்
ஈதல்இசைபட வாழ்தலும் பிறரைமகிழ்வித்து மகிழும்
செயலன்றோ ஒடுக்கப்பட்டவர் குறுக்கு நியாயம்
செய்வதும் பசியா இருப்பவருக்கு ஆகாரம்கொடுப்பதும்..
திக்கற்ற பிள்ளைகளுக்கு உதவிசெய்து
ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக்
காண்பதுமகிழ்வித்துமகிழூம்
செயலன்றோ சூடும்மலர் சுடர்க்கொடியாள்
ஆண்டாளை மார்கழி மாதத்தில்
திருப்பாவைசொல்லிமகிழ்விப்பது
எவரையும் மகிழ்வித்து மகிழும்
செயலன்றோ இதை மகிழ்ச்சி எப்.எம்
அறியுமன்றோ நாம் செய்யக்கூடிய
எந்த ஒரு செயலும் சமுதாயத்தில் நானும் வாழ்ந்து
பிறரையும் வாழவைக்கும் மகிழ்சிக்குரிய
செயலாக இருக்க வேண்டும்.
பாரத நாடு பழம்பெருநாடு
நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாமல்
மகிழ்வித்து மகிழ்ந்திடுவீர்….
கவிஞர் மீரா,
பல்லடம்.
118. மகிழ்வித்து மகிழ்
அழகிய தோட்டம் மலர்களின் கூட்டம்
வண்டுகளின் ஆட்டம்
மனதிற்கு என்றும் மகிழ்ச்சி தருமே
உடலை தழுவிடுமா காற்று மனதிற்கு இதம்
பூமியை தொடும் மழை நீர் வெள்ளி கோடு போல
என்றும் ஆனந்தம் தருமே
அருவி நீர், மலை, மேகம், நீல வானம், கடல் என்றும் சுகமே
பிறர்கு உதவுதல் என்றும் மகிழ்ச்சி
பிறர் நலனில் அக்கறை காட்டுதல் மனதிற்கு இன்பம்
புன்சிரிப்பு என்றும் பொன்நகை போன்றது
விருந்தோம்பல் பிறரை மகிழ்விக்கும்
குழந்ததைகளோடு கொஞ்சி விளையாடுவது என்றும் நலமே
ஆறுதல் தரும் நேர்மறை எண்ணங்கள் என்றும் பதமே
உறவினர்கள்,நண்பர்களோடு கூடியிருத்தல் மனதிற்கு பலமே
நோயற்ற வாழ்வு மனதிற்கும் நல்வாழ்வு தரும்
இறைவனின் பக்தி மனதிற்கு சக்தி
கூட்டுக் குடும்பதோடு வாழ்ந்து மகிழ்வித்து மகிழ்
திருமதி லலிதா ஷியாம்
மதுரை.
019.மகிழ்வித்து மகிழ்
கன்றின் கயிற்றை அவிழ்த்தேன் ...
தாயிடம் ஓடியது....மகிழ்வித்து மகிழ்ந்தேன்
கூட்டில் பறவைகளைத் திறந்தேன் ........
வானில் பறந்தது .......மகிழ்வித்து மகிழ்ந்தேன்
உணவை குழந்தைகளுக்கு அளித்தேன் ......
முகம் மலர்ந்தது .....மகிழ்வித்து மகிழ்ந்தேன்
செடிகளுக்கு நீர் தெளித்தேன் ......
இலைகள் தளிர்த்தது .....மகிழ்வித்து மகிழ்ந்தேன்.
காயப்பட்ட குஞ்சுகளை கவனித்தேன் .....
தரையில் தாவியது ....மகிழ்வித்து மகிழ்ந்தேன்.
இலவசக் கல்வியை கொடுத்தேன் .....
மாணவர்கள் மகிழ்ந்தது ..மகிழ்வித்து மகிழ்ந்தேன்
உயிரை கொடுத்தவனே காத்தேன் ....
குடும்பம் வாழ்த்தியது....மகிழ்வித்து மகிழ்ந்தேன்
ஏழைகளுக்கு உதவி புரிந்தேன் .....
கடவுளாக பாவித்தது .... மகிழ்வித்து மகிழ்ந்தேன்.
Lion சைலஜா கணேசன்
கோவில்பட்டி
தூத்துக்குடி மாவட்டம்
120.