வியாழன், 24 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
கட்டுரைகள், கட்டுரைகள், கவிதைகள்

இசையின் தேடலில்  இணைவோம் மகிழ்ச்சியோடு... 

11 ஜூலை 2022 1,320 பார்வைகள்
இசையின் தேடலில்  இணைவோம் மகிழ்ச்சியோடு... 

 

மகிழ்ச்சி Fm 3ம்ஆண்டு கொண்டாட்டம் கவிதை

இசையால் உலகை அளப்போம்
மண்ணின் வாசம்
மனதின் நேசம்
செவிப்பறையின் தேடல் இசை... 
கோடை வெயில் கொளுத்துகையில்
மாலை மழையில் நனைகையில்
தென்றலாய் காற்று வீசுகையில்...

மகிழ்ச்சியால் மனம் திளைக்கையில்
துயரத்தால் துன்புறுகையில்
இரவின் உறக்கம் தொலைக்கையில்...
இவ்வளவு ஏன்?...
கனவின் காட்சியிலும்
நினைவின் மீட்சியிலும் 
தொடர்வதுதான் இசை... 

குழலில் துளையில் நுழைகையில்
காற்றோடு கலந்து உயிரொலியாகிறது இசை.. 
மனதின் பிணிக்கு அருமருந்தாகிறது.. 
இதயத்துடிப்பின் இன்னுமொரு பரிணாமம்
ஸ்வரங்களின் சுவாரஸ்யம்.. 
வார்த்தைகளின் வாழ்க்கை
மொழிகளின் முன்னோடி
இரவுகளின் நாயகன்
வலிகளின் கண்ணீர்...
உறவுகளின் உன்னதம்
நட்புகளின் நாடித்துடிப்பு....

மௌனத்தோடு பேசும் மகத்தான மொழி இசை
சப்தஸ்வரங்களில் சப்தநாடியும் அடக்குவது இசை.. 
இசைக்கு மயங்கா இதயமுமில்லை
மகிழ்ச்சியில் மூழ்கா மனங்களுமில்லை.. 

இசையின் தேடலில் நம்மை இணைத்திடும்
மகிழ்ச்சி பண்பலையோடு 
மகிழ்த்திருப்போம்... 

-சசிகலா திருமால்
கும்பகோணம்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE