magizhchifm2020@gmail.com ஞாயிறு, 22 November 2026
⚡ சமீபத்திய
நவம்பர் 21 – உலகத் தொலைக்காட்சி நாள்! நபிகள் நாயகம் பன்னிரு பாடல் ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானாவின் படைப்பில் இலக்கிய நயம் நவம்பர் 19 – ஆண்கள் தினம் ! குழந்தைகளின் கனவுகளுக்கு கதை சொல்லும் பேராசிரியர் கார்த்திகா கவின் குமார்! நவம்பர் 16 தேசிய பத்திரிகை தினம் உண்மையின் குரலாக ஒலிக்க வேண்டிய ஊடகங்கள்! பார்போற்றும் பாவையர் பன்னாட்டு கருத்தரங்கில் கட்டுரை எழுதிய ஈரோடு பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தினத்தில் அமைச்சர் விஜய் பாலாஜி அவர்கள் பாராட்டு! பாரம்பரியத்தின் நாதமாக ஒலிக்கும் இளம் கலைஞர் விருதுநகர் தினேஷ் ! காலத்தால் அழியாத சித்திரக்கவிதைகளைக் காக்கும் நவீன காலப் புலவர் சித்திரக்கவி முனைவர் பீ. ரகமத் பீபி தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 21 – உலகத் தொலைக்காட்சி நாள்! நபிகள் நாயகம் பன்னிரு பாடல் ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானாவின் படைப்பில் இலக்கிய நயம் நவம்பர் 19 – ஆண்கள் தினம் ! குழந்தைகளின் கனவுகளுக்கு கதை சொல்லும் பேராசிரியர் கார்த்திகா கவின் குமார்! நவம்பர் 16 தேசிய பத்திரிகை தினம் உண்மையின் குரலாக ஒலிக்க வேண்டிய ஊடகங்கள்! பார்போற்றும் பாவையர் பன்னாட்டு கருத்தரங்கில் கட்டுரை எழுதிய ஈரோடு பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தினத்தில் அமைச்சர் விஜய் பாலாஜி அவர்கள் பாராட்டு! பாரம்பரியத்தின் நாதமாக ஒலிக்கும் இளம் கலைஞர் விருதுநகர் தினேஷ் ! காலத்தால் அழியாத சித்திரக்கவிதைகளைக் காக்கும் நவீன காலப் புலவர் சித்திரக்கவி முனைவர் பீ. ரகமத் பீபி தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் !
கட்டுரைகள், கட்டுரைகள், கவிதைகள்

கோலத்தின் கோலம்

07 ஆகஸ்ட் 2022 3,190 பார்வைகள்
கோலத்தின் கோலம்

கோலத்தின் கோலம்

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்ப
தமிழனின் தத்துவமான, 
தமிழ் மண்ணுக்குரிய பண்பான ,
எறும்பு/ பறவைக்கு உணவாகும்
*அரிசி மாக்கோலம்* !

நடுவில் சாணியுருண்டை 
அழகுற அமர்ந்திருக்க, 
பரங்கிப் பூ செருகி வைத்து, 
வீட்டில் வயது பெண்
இருப்பதை உணர்த்தும் 
*மார்கழி கோலம்* ! 

குத்துவிளக்கு அகல்விளக்கு 
வரைந்த வடிவினில், 
அழகழகாய் செம்மண் தீட்டலில் ,
தீபமாக எரிவது
*கார்த்திகை கோலம்* !

செவ்வந்தி /மல்லி /சாமந்தி 
ஆவாரம் மருதாணி இலையழகில்,
 பள்ளி /கல்லூரி விழாக்களில், மாணவர்கள் கற்பனையில் 
*ரங்கோலி கோலம்* !  

தமிழர்களின் பண்பாட்டு செறிவு 
கலாச்சார பாரம்பரியம் மிளிர்வு
வீட்டுப் பெண்களின் கை திறனில் பொங்கல் விழா போட்டியில் 
வள்ளுவன்/பொங்கல்/கரும்புடன்
*கோடுகளின் கலைக் கோலம்* !

கிருஷ்ண ஜெயந்தி நாளினில் 
பாத அழகின் வெளிப்பாடாக, வாசலிலிருந்து பூஜை அறை வரை, கோகுலக் கண்ணனை வரவேற்கும் 
*மாக்கோலம்* !

மாடுகளின் ஆட்டம் 
மாவிளக்கு படையல் 
பொங்கல் வைத்து நேர்த்தியுடன்
தோகை விரிப்பினில்
*மயிலார் கோலம்* !

 திருமணத் தம்பதிகள் வரவேற்பில் மனைக்கோலம்!
சந்ததி செழிக்க உணர்த்திடும்
ஹிருதய கோலம்! 
சுமங்கலிப் பிரார்த்தனையில் 
மனங்களை இணைக்கும் 
இழைக் கோலம்! 
தெய்வீக சக்தியை 
வீட்டுக்குள் வரவழைக்க 
பூஜை அறை கண்ட
*ஸ்வஸ்திக் கோலம்* ! 

சுத்தமான காற்று கிடைக்க,
இடுப்பு எலும்பு வலுப்பெற,
சிந்தனை ஒருநிலைப்படுத்தி,
மனச் சிதறல் தடுக்கும் பயிற்சியாகி, கண்பார்வையை சீராக்க,
 பாட்டி கற்றுக் கொடுத்து 
பேத்தி அழித்தழித்து  போடும் 
*பூக் கோலம்* !

அதிகாலை புத்துணர்ச்சி, 
அன்றைய தின அலுவல் திட்டமிடல், நிதான இயல்பு குணம், ,
நேர மேலாண்மை பகுத்தல், 
சிக்கலைத் தீர்க்கும் பொறுமை, 
இத்தனையுடன் அரங்கேறும் 
*ஊடு புள்ளி /நேர் புள்ளிக் கோலம்* ! 

கணவருடன் வீட்டு ஆடவர்கள் ரசித்திட, முடிவெடுக்கும் திறன் வெளிப்படுத்த, படிகளில் அவசர ஒட்டு படைப்பாகும் 
*ஸ்டிக்கர் கோலம்* !

பிடித்த தலைவன் வெற்றி பெற ,
ஓட்டு கேட்டு வரும் போது,
கட்சி சின்னம் வரைதலில்
*அரசியல் கோலம்* !

எதிர் வீட்டு/பக்கத்து வீட்டுப் பெண்கள் காலை/மாலையிலே கோலமிட ,
அவள் ஆரோக்கியம் பறைசாற்றும் 
கோலமாகி,

இழப்பு/அமாவாசை/திதி 
தினங்களில் 
கோலமில்லா வாசலாகி,
பெண்ணோடு
மண்ணோடு பிணைந்த
கோலத்தின் கோலத்தை 
வாழ்வியலாக்கி மகிழ்ந்திருப்போம்!

முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி
வாலாஜாப்பேட்டை.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE