புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
கட்டுரைகள், கட்டுரைகள், கவிதைகள்

பாரதி நவரத்தின நாயகனே..! 017

22 நவம்பர் 2022 754 பார்வைகள்
பாரதி நவரத்தின நாயகனே..! 017

பாரதியார்  நவரத்தின நாயகனே...

தமிழ் மொழியின்  நவரத்தின தூவலனே//

 உன்னுடைய பாடல்களே சுதந்திர கீதமாகும்//

 அதுவே நாம் பெற்ற வேதமாகும்//

 உன்னுடைய எழுத்துக்களே சுதந்திர கருவூலமாகும்//

 முக்காலத்திற்கும் நமக்கு கலங்கரை விளக்கமாகும்//

 விடுதலை வீரர்களை உருவாக்கிய முத்தே//

 வைராக்கியத்துடன் வைரிகளை எதிர்த்த வைரமே// 

 வந்தே மாதரம் முழக்கமிட்ட  வைடூரிபமே//

 பெண் விடுதலைக்கு பாடுபட்ட மாணிக்கமே//

 நீலக் கண்ணனை பாடிய நீலமே//

 ஓடி விளையாடு பாப்பாக்களின் மரகதமே//

 அச்சமில்லை என  முழக்கமிட்ட புஷ்பராகமே//

 செந்தமிழ் நாடு பாடிய பவழமே//

 தமிழனுக்கு பெருமை சேர்த்த கோமேதகமே//

 நவரச மாலையான உன்னை போற்றி//

 நான் பாடும் நவரத்தின மாலை //

லதா சங்கரன் 
சென்னை

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE