பெண்கள், பெண்கள், கவிதைகள்
கெடும் ...!
கெடும் ...!
அன்பில்லாது அனைத்தும் கெடும்!
ஆண்மை இல்லாத இல்லறம் கெடும்!
இன்பம்இல்லா இணைவுகெடும்!!
ஈகை இல்லா ! கொடை கெடும் !
உண்மை இல்லா ! நட்பு கெடும் !
ஊக்கம் இல்லா முயற்சி கெடும்!
எளிமையில்லா! வளமை கெடும்
ஏன் என்று கேட்கா செய்கை கெடும்!
ஒற்றுமை இல்லா உடன்பிறப்பு கெடும்!
ஓசை எழுப்பா நாவு கெடும்!
ஓளவியம்பேச! அனைத்தும் கெடும்!
இஃதே நினைக்காது எல்லாம் கெடும் !
- கவிதை மாணிக்கம்