புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
அன்புக் கவி விருது கவிதைப் போட்டி , அன்புக் கவி விருது கவிதைப் போட்டி , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

காதலிக்கிறேன்...

14 பிப்ரவரி 2023 568 பார்வைகள்
காதலிக்கிறேன்...

காதலிக்கிறேன்.

என்னால் வரையப்பட்ட வாசல் கோலத்தை.

காதலிக்கிறேன்.
என் கை பட்ட சமையலை.

காதலிக்கிறேன்
நான் வளர்த்த செம்பருத்தியை

காதலிக்கிறேன்

நான் பெற்ற முதல் பள்ளிப்பரிசை.

காதலிக்கிறேன்

என் முதல் சுற்றுலாத்தலத்தை.

காதலிக்கிறேன்

என் தந்தையின் தோள் சவாரியை.

காதலிக்கிறேன்.

என் கூந்தலுக்கு மலர் சூட்டி அழகு பார்த்த என் லதாவை.

காதலிக்கிறேன்

நான் உண்ணும் அழகை ரசித்து உணவிட்ட வாசுகியை.

காதலிக்கிறேன் என் றோ என் வயிற்றுப் பசி போக்கிய முகம் மறந்த அன்னமிட்ட கையை.

காதலிக்கிறேன்

உலக வாழ்கையைக் கற்றுக்கொடுத்த வஞ்சனைகளையும் சூதுகளையும் துரோகங்களையும்.

காதலிக்கிறேன்

என்னுள் வாழ்ந்து கொண்டிருக்கும் இத்தனை காதல்களையும்.

 

ஜோதி லட்சுமி,ஶ்ரீவி 

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE