புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
அன்புக் கவி விருது கவிதைப் போட்டி , அன்புக் கவி விருது கவிதைப் போட்டி , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

இனிக்கிறது இதயம்...! 039

09 பிப்ரவரி 2023 511 பார்வைகள்
இனிக்கிறது இதயம்...! 039

இனிக்கிறது இதயம்...

முதல் சந்திப்பு

முத்தானதா?  

நான் அறியவில்லை!

இரண்டாம் சந்திப்பு

இன்பமானதா? 

நான் அறியவில்லை!

நம் வாழ்வின் தொடக்கம் 

நனி சிறந்ததா?

நான் அறியவில்லை!

பசுமையான நாட்கள்

பரிசுகள் நிறைந்தவையா?

நான் அறியவில்லை!

வாழ்வின் பாதை 

வானளவு வலிகள் நிறைந்தனவோ?

நினைவில்லை.... எனக்கு நினைவில்லை...

எதுவும் எனக்கு நினைவில்லை!

எதுவும் நான் அறியவில்லை!

என் நெஞ்சில் நிறைந்திருப்பது

நின் பார்வை காட்டிய கரிசனம்!

நின் கரங்கள் கொடுத்த நம்பிக்கை!

நின் பாதங்கள் துணை நின்ற இடங்கள்!

நின் பாதுகாப்பு வளையத்தில் நான்!

இந்த பந்தம் காதலா?

இது அன்பின் பாதையை?

காதலே! அன்பே!

காதலே! அன்பே!

என 

கரைகிறது நெஞ்சம்!

இனிக்கிறது இதயம்!

உன்னால் 

இனிக்கிறது இதயம்!

ஆம்

இனிக்கிறது இதயம்!

-அகிலா கண்ணன், அமெரிக்கா.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE