செவ்வாய், 22 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
அன்புக் கவி விருது கவிதைப் போட்டி , அன்புக் கவி விருது கவிதைப் போட்டி , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

காதல் கணவர்... 051

13 பிப்ரவரி 2023 799 பார்வைகள்
காதல் கணவர்... 051

காதல் கணவர் 
மாத்ருபூதம்
பெயருக்கேற்ப,
தாயுமானவன்  நீ!
முதுகலை பட்டம் நான் பெறவே,
முயன்று நின்று முடித்திட்டாய்!
ஓட்டப் பந்தயம்
ஓயந்துவிடாமல்
ஓட என்னை
ஊக்குவித்தாய்!
ஆயிரத்தில் வாங்கிய ஊதியத்தை
இலட்சத்தில் வாங்க வைத்திட்டாய்!
புதிய உறவுகள் பினணத்திட்டே
மனதை புதிதாய் புதுப்பித்தாய்!
அழகிய வீட்டைப் பரிசளித்து
அடி மன வடுவை அகற்றினாய்!
வேலையில் தோல்வி அவமானம்,
வெடித்துச் சிதறிய போதெல்லாம்
தோளில் சாய்த்து தேற்றினாய்!
நடனம், பேச்சு, எழுத்தாற்றல்,
வளர்ந்திட பெரிதும் உதவினாய்!
ஊரை, நாட்டை சுற்றசெய்து,
ஊக்கம் கொள்ள வைத்திட்டாய்!
கோவில் பல அழைத்துச்சென்று,
பக்தியை மேலும் வளர்த்திட்டாய்!
அறுசுவை உணவை 
அன்னையாய் வழங்கி,
ஆரோக்கியத்தில் பங்கெடுத்தாய்!
விதவிதஆடைகள் அணியச்செய்து,
வியந்து புகழ்ந்து நிறைவளித்தாய்!
நவீன கணினி, கைபேசி,
பரிசளித்து பயிற்றுவித்தாய்!
நினைத்தபடி நான் வாழ்ந்திடவே,
நல்ல வாழ்வை தந்திட்டாய்!
என்னுள் இருக்கும் குழந்தைத்தனம்
குறையவிடாமல் உயிர்ப்பித்தாய்!
சிறந்த தம்பதி நாம் என்றே!
செய்தித்தாள்களில் இடம்பெற்றோம்.
கல்வி, திருமணம், வைத்தியம்
பொதுநலச்சேவை நான் செய்ய,
அத்துணையிலும் 
உற்றதுணையாய்!
காதல் கணவர் 
மாத்ருபூதம்.

உஷா மாத்ருபூதம்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE