புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
அன்புக் கவி விருது கவிதைப் போட்டி , அன்புக் கவி விருது கவிதைப் போட்டி , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

காதல் திரைகள் 047

11 பிப்ரவரி 2023 492 பார்வைகள்
காதல் திரைகள் 047

காதல் திரைகள் ...

விழியில் விதைத்து மனதில் துளிர்விடும் காதல் ..

வானில் வட்டமிடும் பறவைகள் போல் வண்ண கனவுகள் ...

வானத்திற்கும் பூமிக்கும் இடையே அள்ளாடும் மனது ....

பார்க்கும் இடத்தில் எல்லாம் கைகோர்க்கும் கற்பனை ...

கடலில் அலைகள் போல் ஒன்றன்பின் ஒன்றாக சுமந்து வரும் கனவுகள்...

மலைகளின் இடுக்கில் இருந்து வெளிவரும்  ஒலிகளின் ராகங்கள்...

வானிலிருந்து கீழே விழும் மழை துளிகளின் ஓசைகள் ...

தென்றல் காற்றினால் அலை அலையலையாக அலைபாயும் கூந்தல்...

குளிரினாள் தன் கைகளை  மார்பில் கட்டிக் கொள்ளும் இன்பம்...

பனித்துளியை கையில் இருந்தே முத்தமிடும் உணர்வு ...

தாஜ்மகாலை சொந்தம் கொண்டாடும் காதல்கள்...

காதலுக்கு என மலர்ந்த ரோஜாக்களின் கூட்டங்கள் ...

அடிக்கடி உலா வரும் தேவதைகளின் நடனங்கள்...

வெள்ளி நிலவுக்குள் வீடு கட்டி கால் பதிக்கும் கற்பனைகள்...

நட்சத்திரக் கூட்டங்களை மாலையாக கட்டி நடத்தும் நாடகங்கள்...

இப்படியாக வண்ணத்திரைகள் ஒன்று சேர்ந்து ...

காதலாக உலா வருகிறது பூமியிலே ...

- பொ.ச.மகாலட்சுமி
கோவை.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE