செவ்வாய், 22 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
தமிழரின் பெருமை கட்டுரைப் போட்டி , தமிழரின் பெருமை கட்டுரைப் போட்டி , பெண்கள், பெண்கள், கவிதைகள்

காதலர் தினம் கவிதை... 027

07 பிப்ரவரி 2023 1,257 பார்வைகள்
காதலர் தினம் கவிதை... 027

காதலர் தின கவிதை                 

 முழுமதியை உம் முகத்தில் கண்டேன்...!

நிம்மதியை
தொலைத்து நின்றேன்...!

பூவைப்போல பெண்ணே சிரிக்கின்றாய்...!

எம் புத்தியை
சிறையெடுக்கின்றாய்...!

மனசாந்தியை
சத்தமின்றி
சிதைக்கின்றாய்...!

மகராசி உம்அழகை
கண்டே பிரம்மனையும்
துதிக்கின்றேன்...!

உம்மைப் போலபேரழகியை உலகில் காணவில்லையடி...!

உனக்கு நிகர் நீயடி என் துயருக்கு விடையாய் வாய்த்தாயடி...!

உன்னதமே உன்னதமே உறவாகிட தருவாயா சம்மதமே...!

உம் அழகினைக் கண்டு வியந்தேன் மீண்டு எங்கும் எழுந்தேன்...!

விடிவெள்ளியே
போகாதே திசைமாறி எம்மனசை வாட்டாதே கருத்துமீறி...!

உம்அறிமுகமே
ஆண்டவன் கொடுத்த அதிசய வரமடி...!

அன்பே உன்னை உறவாக்கிட துடிக்குதே எமது கரமடி...!

ஈவு இரக்கம் நிறைந்தவளே
ஈகையில் என்றும் சிறந்தவளே...!

பாவியை கொஞ்சம் பாரடி
எம் பாசத்தை ஏற்குமநாளினை கூறடி...!

மௌனம் காத்தே தொலைக்காதே எம் மனசை வாட்டி வதைக்காதே...!

அலைகடலில் துரும்பாய் இன்றோ நானடி...!

உம்அன்பு கிடைத்தால் உலகையே வெல்வேண் பாரடி...!

ஆகச் சிறந்த அழகி நீ மட்டும் தானடி...!

அலைகழிப்பினை செய்யாதே நீ எம்உயிருக்கு மேலடி...!

மறுதாய்மடியாய்
உம்மையே பார்க்கிறேன் நானடி...!

மனதை மூடி மறைத்தால் என்ன செய்வேன் கூறடி...!

 -வி.கணேஷ் பாபு,ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம்

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE