புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
தமிழரின் பெருமை கட்டுரைப் போட்டி , தமிழரின் பெருமை கட்டுரைப் போட்டி , பெண்கள், பெண்கள், கவிதைகள்

காதல் ஜோதி..! 002

27 ஜனவரி 2023 722 பார்வைகள்
காதல் ஜோதி..! 002

காதலர் தினக் கவிதை

காதல் ஜோதியை அன்பு
காதலர் மீது ஏற்றினேன்
 காலமெல்லாம் காத்து இருந்தேன்
எனது வாழ்வுக்கு உயிர் கொடுத்தான்!
துடிக்கும் இதயமும் துடித்தது அவனுக்காக
அவனை பார்க்காமல் என்னால் இருக்க முடியாது
அலை பேசியிலும் மணிக் கணக்கில் பேசினேன்
திருமண நாளும் நெருங்கியது!
வீடே கல்யாண கோலம் ஆனது
சொந்த பந்த உறவுகளைப் பார்க்க
என் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது
விடிந்தால் திருமணம் கனவும் வந்தது!
என்னவனோடு நான் சேர நினைக்கையில்
வெட்கம் வந்தது
ஓரக் கண்ணாலே மணமேடையில் பார்க்கையிலே நினைவுகள் எல்லாம்
திரும்ப வர
என் மனம் என்னிடம் இல்லை!
அவரிடமே சென்று விட்டது
எனது பார்வை என்னவனைப் பார்க்க
கெட்டி மேளம் கெட்டி மேளம் யென
மந்திரம் ஒலிக்க
பெரியவர்கள் எல்லாம் ஆசிர்வதிக்க பூக்கள் எல்லாம் போட
 தாலியும் கட்டியாச்சே!
நான் பார்த்த முதல் காதலை
என்னை சேர்க்க வைத்ததே என்றெண்ணி
ஆனந்த மழையில் நனைந்தோமே!


- ம.செ.அ.பாமிலா பேகம்,நாகர்கோவில்

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE